சிவன் 10 - ௮. அழிக்கும் வடிவங்கள் - ௮4 - காலனைக் காய்ந்தவர்
௮4 - காலனைக் காய்ந்தவர்
தொன்மம்
மிருகண்டு என்ற முனிவரும் அவரது மனைவி மருத்துவவதியும் குழந்தைப் பேறு வேண்டி சிவனைத் தொழுதனர். சிவன் மனம் கனிந்தார். ஆனால், ஒரு திருவிளையாடல் நிகழ்த்த மனம் கொண்டு அவர்களுக்கு இரு தெரிவுகளை முன்வைத்தார். அறிவும், ஒழுக்கமும் நிறைந்த 16 ஆண்டுகளே வாழும் மகனா? அல்லது இவை இன்றி நீடு வாழும் மகனா? மிருகண்டு முதல் தெரிவையே வேண்டினார். மார்கண்டேயர் பிறந்தார். இளம் பிராயத்திலேயே கற்கவேண்டியன அனைத்தையும் கற்று அறிஞராகவும், ஒழுக்கம் நிறைந்தவராகவும், சிவ பக்தராகவும் திகழ்ந்தார்.
16 ஆண்டுகள் முடியும் தருவாயில் தன் பெற்றோரிடமிருந்து சிவனது வரத்தைப் பற்றியும், தன் மரணம் அணுகிவிட்டதையும் அறிந்தார். சிவனைத் தீவிரமாகத் தொழுது வந்தார். 16 ஆண்டுகள் நிறைவுற்றபோது அவரது பெருமை கருதி காலனே தன் எருமை வாகனம் மீது அமர்ந்து அவரை விண்ணுலகம் அழைத்துச் செல்ல வந்தான். மார்கண்டேயரோ சிவலிங்கத்தைக் கட்டித் தழுவிக்கொண்டு காலனுடன் செல்ல மறுத்தார். கடமை தவறாத காலன் அவரை நோக்கித் தன் பாசக் கயிற்றை வீச அது சிவலிங்கத்தின் மீதும் பட்டது. தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிம்மரைப் போல சிவலிங்கத்தில் இருந்து வெளிப்பட்ட சிவன் காலனை உதைத்து கீழே தள்ளி சூலத்தால் வதைத்தார். காலனின்றி மரணம் இல்லை, இயற்கையின் சமநிலை குலையும் என மண்மகள் வேண்ட சிவன் காலனை உயிர்ப்பித்தார். காலனது கடமைக்குப் இழுக்கு வராமல் மார்கண்டேயருக்கு வயது 'என்றும் 16' என்று வரமளித்தார்.
சிற்பங்கள்
௮-4-அ - மார்கண்டேயர் சிவ லிங்கத்தை நீராட்டுதல். அருகில் தலை மேல் கைக் கூப்பிஅன்னை மருத்துவவதி
![]() |
௮-4-அ-மார்கண்டேயர் சிவலிங்கத்தை நீராட்டுதல். அருகே அன்னை மருத்துவதி. திருமண மண்டபம் தூண் தெ6கி3 |
௮-4-ஆ - மார்கண்டேயர் சிவலிங்கத்திற்கு மாலை சூட்டி வணங்குதல்
![]() |
௮-4-ஆ-சிவலிங்கத்தை வணங்கும் மார்கண்டேயர். பெரியநாயகி பெருமண்டபம் வகி தூண் |
௮-4-இ - எமன் இரு கைகளாலும் சிவலிங்கத்தை கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் மார்கண்டேயர் மீது பாசக் கயிற்றை வீசுதல். அது சிவலிங்கத்தின் மீது படுதல்.
![]() |
௮-4-இ-மார்கண்டேயர் மீது பாசக் கயிற்றை வீசும் எமன். பெரியநாயகி பெருமண்டபம் வகி தூண் |
௮-4-ஈ - எமன் தன் சூலத்தை ஓங்கி மார்கண்டேயர் உயிர் எடுக்க முனைதல்.
![]() |
௮-4-ஈ-காலன் மார்கண்டேயர் உயிர் எடுக்க முனைதல் திருமண மண்டபம் தூண் தெ6கி3 |
௮-4-உ - சிவன் எமனை வதைத்தல். காலனைக் காய்ந்தவர் பேருருவம். காலனை காலடியில் வீழ்த்தி மிதிக்கிறார். வலது காலை காலன் உடல் மீது ஊன்றி இடது காலை உயர்த்தி உள்ளார். நான்கு கைகள். இடது பின் கையில் மழுவையும் இடது முன் கையில் சூலத்தையும் காலனை நோக்கி ஓங்கி உள்ளார். இடது பின் கையில் மான். இடது முன் கை காலனைச் சுட்டுகிறது. அவன் தலைமேல் கைக் கூப்பி விழுந்து கிடக்கிறான். அவன் சூலம் தனியாக அவன் தலைப் பக்கத்தில் உள்ளது. இடது பக்கம் மார்கண்டேயர் வணங்கி நிற்கிறார்.
![]() |
௮-4-உ-காலனைக் காய்ந்த பெம்மான். 36கால் மண்டபம் தூண் வ2கி4 |
௮-4-ஊ - மற்றொரு வகை காலனைக் காய்ந்தவர். முன் இரு கைகளாலும் சூலத்தைப் பிடித்து காலனைக் குத்துகிறார். பின் இரு கைகளில் மான் மழு.
![]() |
௮-4-ஊ-காலனைக் காய்ந்தவர். பெரியநாயகி பெருமண்டபம் வகி தூண் |
௮-4- எ- காலனைக் காய்ந்தவர் வடிவத்தை காலன் மீது சிவன் ஆடும் நடனமாகக் காட்டும் சிற்பம்.
![]() |
௮-4-எ-காலனைக் காய்ந்தவர். ஆடவல்லான் மண்டபம் கிழக்குத் தூண் |
௮-4-ஏ - உள்கோபுரப் பெரு வாயில் சுவரில் சிற்பத் தொகுதி.
![]() |
௮-4-ஏ-காலனைக் காய்ந்த பெம்மான். உள் கோபுர பெருவாயில் வட கிழக்குப் பகுதி |
Comments
Post a Comment