சிவன் 11 - ௮. அழிக்கும் வடிவங்கள் - ௮5 - காமனை எரித்தவர்

௮-5. காமனை எரித்தவர்


தொன்மம்

சதியின் தற்கொலைக்குப் பிறகு தனியனான சிவன் கைலாயத்தில் தவத்தில் ஆழ்ந்தார். இறந்த சதி இமயவானுக்கு உமை எனும் மகளாகப் பிறந்து சிவனை அடைய வேண்டி அவருக்குப் பணிவிடைகள் செய்து வந்தாள். இடையே காசியப முனிவரின் பேரனான தாரகாசுரன் தன் கடும் தவத்தால் நான்முகனிடம் இருந்து சிவன் மகனால் மட்டுமே மரணம் என்னும் வரம் பெற்றான். தாரகாசுரன் மூவுலகையும் வென்றான். தேவர்கள் அவனைக் கொல்ல சிவன் மகன் வேண்டி சிவன் தவத்தைக் குலைக்க எண்ணினர். மன்மதனை அவர் மீது மலர்க் கணைகள் வீசுமாறு பணித்தனர். மன்மதனும் அவ்வாறே செய்ய தவம் கலைந்த சிவன் தம் நெற்றிக் கண் தீயால் மன்மதனை எரித்துவிட்டார். மன்மதன் மனைவி இரதி சிவனிடம் தன் கணவனை மீட்டுத் தருமாறு முறையிட்டாள். சிவன் அவள் கண்களுக்கு மட்டுமே புலனாகுமாறு அவனை உயிர்ப்பித்தார். மன்மதனின் மலர்க்கணைகள் வேலை செய்ய சிவன் உமையை மணந்தார்.

சிற்பங்கள்

இந்த கதைத் தொடர் தேர் முட்டி மண்டபத்திலும் திருமண மண்டபத்திலும் காணப்படுகிறது. ராஜகோபுர பெருவாயிலின் வடகிழக்குச் சுவரில் சிதைந்த நிலையில் உள்ளது.

௮-5-அ - சிவன் கைலாய மலையில் தவம் இருப்பது. சடை மண்டலம். அரைத் தாமரை அமர்வு. முன் கைகள் தியானக் குறியுடன் மடியில்.

௮-5-அ-சிவன் கைலாய மலையில் தவம் செய்வது.
திருமண மண்டபம் தூண் தெ5கி3

௮-5-ஆ - மன்மதன் கரும்பு வில்லில் இருந்து சிவன் மீது மலர்க்கணை ஏவுதல். உடன் தலை மேல் கைக் கூப்பி இரதி. அடுத்து சிவன் கோபம் கண்டு கீழே விழுந்துள்ளான்.

௮-5-ஆ-மன்மதன் சிவன் மீது மலர்க் கணை வீசுதல். வீழ்தல் உடன் ரதி.
திருமண மண்டபம் தூண் தெ5கி3

௮-5-இ - சிவன் நெற்றிக் கண் திறந்து மன்மதனை எரித்தல்.

௮-5-இ-சிவன் நெற்றிக் கண் திறந்து மன்மதனுக்குத் தீ இடுதல்.
தேர் மைய மண்டபம் தூண் கி1வ2

௮-5-ஈ - மன்மதன் தீப்பற்றி எரிதல். அருகில் கதறும் இரதி.

௮-5-ஈ-மன்மதன் எரிதல் உடன் இரதி.
தேர் மைய மண்டபம் தூண் கி1வ2

௮-5-உ - இரதி சிவனை உயிர்ப்பிக்க வேண்டுதல். சிவன் அவளுக்கு மட்டும் புலனாகும்படி உயிர்ப்பித்தல். மலையில் இடபம் முனிவர் பாம்பு.

௮-5-உ-இரதி சிவனிடம் வேண்டி மன்மதனை உயிர்பித்தல்.
திருமண மண்டபம் தூண் தெ5கி3

௮-5-ஊ - சிவன் உமை மணம் புரிந்து ஒன்று சேருதல்.

௮-5-ஊ-சிவன் உமை சேர்தல்.
திருமண மண்டபம் தூண் தெ5கி3



Comments