சிவன்12 - ௮. அழிக்கும் வடிவங்கள் - ௮6-யானை உரி போர்த்தவர்

௮-6. யானை உரி போர்த்தவர்


தொன்மம்

பிச்சாடனரிடம் தம் பத்தினிகளும் மோகினியிடம் தாங்களும் மயங்கி இழிவு அடைந்த முனிவர்கள் தன்னிலை மீண்ட உடன் பழி தீர்க்க எண்ணினர். அபிசார வேள்வி இயற்றி அதிலிருந்து வெளிவந்த புலி, யானை, பாம்பு, முயலகன், வேள்வித் தீ ஆகியவற்றை பிச்சாடனரை அழிக்க அனுப்பினர். பிச்சாடனர் அவற்றை அடக்கி ஆடை, அணிகலன், ஆயுதங்களாகக் கொண்டார். அவ்வாறு யானை வந்த போது அதன் உள் புகுந்து அதைப் பிளந்து அதன் தோலைப் போர்த்திக் கொண்டு நடனமாடினார்.

சிற்ப அமைதி

இடது காலை யானைத் தலை மேல் ஊன்றி வலது காலை முழங்கால் வரை உடலின் குறுக்காக உயர்த்திய நிலை. ஆனால் இங்கு பெரும்பாலும் இடக்காலை ஊன்றி வலக் காலை உயர்த்திய நிலையே காணப்படுகிறது. சற்று பின்புறம் சுழன்ற நிலை. யானைத் தோல் திருவாசி போல சிவனைச் சூழ்ந்திருக்க அதன் நான்கு கால்கள் தோலின் வெளி விளிம்பில் இருந்து உட் புறமாகவோ வெளிப் புறமாகவோ நீட்டிக் கொண்டிருக்கும். சிவன் தலை மேல் வால். 4/ 6/ 8 கைகள். முன் இரு கைகளில் சூலம் கபாலம். இரு கைகள் யானைத் தோலைப் பிடித்திருக்கும். மற்ற கைகளில் வாள் கேடயம் மழு யானைத் தந்தம் முதலிய ஆயுதங்கள். சடை மண்டலம், சடைப் பாரம், சடை மகுடம் முதலிய தலைக் கோலங்கள். தொடை வரை ஆன உடை உண்டு.

நான்கு கை யானை உரி போர்த்தவர்.

௮-6-அ - யானைத் தலை இடப் பக்கம் பார்க்கிறது.

௮-6-அ- 4கை யானை உரி போர்த்தவர்.
உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் கி2தெ1

௮-6-ஆ - யானைத் தலை வலது பக்கம். கால்கள் உள்புறம். சிவன் வலது கையில் யானைத் தந்தம். இடக் கால் தூக்கி உள்ளார்.

௮-6-ஆ-யானை உரி போர்த்த அண்ணல் 4கை இடக்கால் தூக்கி.
36 கால் மண்டபம் தூண் வ3கி6


ஆறு கை யானை உரி போர்த்தவர்.

௮-6-இ – இடக் கால் தூக்கி உ ள்ளார்.

௮-6-இ-யானை உரி போர்த்தவர். 6 கை உயர்த்திய இடக்கால்.
பெரியநாயகி பெருமண்டபம் தென் கிழக்குத் தூண்

எட்டுக் கை யானை உரி போர்த்தவர்.

௮-6-ஈ - இடக் கால் தூக்கி உள்ளார். 4 கைகளில் மழு மான், வாள் கேடயம். சடை மகுடம்.

௮-6-ஈ-யானை உரி போர்த்தவர். 8 கை. இடக்கால் தூக்கி
ஆடல்வல்லான் மண்டபம் கிழக்குத் தூண்

௮-6-உ - வலக் கால் தூக்கி உள்ளார்.

௮-6-உ-8கை யானை உரி போர்த்த அண்ணல் மழு மணி, வாள் கேடயம், சூலம் கபாலம்.
 36கால் மண்டபம் தூண் வ3கி1

௮-6-ஊ - வலக் காலை உடலின் குறுக்காக உயர்த்தாமல் பக்கவாட்டில் உயர்த்தி உள்ளார்.

௮-6-ஊ-8கை யானை உரி போர்த்தவர் திருமண மண்டபம் தூண் தெ3கி1




Comments