சிவன்13 - ௮. அழிக்கும் வடிவங்கள் - ௮7-புலியைக் கொல்லுதல், ௮8-திரிபுராந்தகர், ௮9-பிநாகர், ௮10-சரபர்
௮-7. சிவன் புலியைக் கொல்லுதல்
தொன்மம்
தாருகாவன முனிவர்கள் அபிசார வேள்வி செய்து பெற்ற புலியை பிச்சாடனனரைக் கொல்ல ஏவினர். அவர் அதைக் கொன்று அதன் தோலைத் தமக்கு ஆடையாக்கிக் கொண்டார்.
சிற்பம்
இரு சிற்பங்கள் திருமண மண்டப முன் வரிசைத் தூண் ஒன்றில் காணப்படுகின்றன. ஆறு கை சிவன். சடைப் பாரம். வலது கை வாளால் புலியைக் குத்திக் கொல்கிறார்.
௮-7-அ - இரு முன் கைகளால் புலியின் வாயைக் கிழிக்கிறார். நடுக்கை வாள் புலியின் உடலைக் குத்துகிறது. நடு இடக்கையில் கேடயம். பின் கைகளில் தண்டனை, வியப்புக் குறிகள். வலது காலால் புலியை உதைக்கிறார்.
![]() |
௮-7-அ-சிவன் தாருகாவனப் புலியை வாயைக் கிழித்துக் கொல்வது. திருமண மண்டபம் தூண் தெ1கி3 |
௮-7-ஆ - முன் இடது கையால் புலியின் தலையைப் பிடித்துள்ளார். இரு கால்களும் தரையில். வலது முன் கை வாளால் புலியின் வாயில் குத்துகிறார். நடு, பின் கை ஆயுதங்கள், அமைதிகள் தெளிவில்லை.
![]() |
௮-7-ஆ-சிவன் தாருகாவனப் புலியின் வாயில் வாளைச் செருகிக் கொல்வது. திருமண மண்டபம் தூண் தெ1கி3 |
௮-8. திரிபுரம் எரித்தவர்
தொன்மம்
தாரகாசுரனுடைய மைந்தர்கள் மூவர் - தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி. தாரகாசுரன் முருகனால் கொல்லப்பட்ட பிறகு மூவரும் கடும் தவம் புரிந்து வலிமை பெற்றனர். பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆன கோட்டைகளில் விண்ணில் தனித்தனியாக வலம் வந்தனர். மூவுலகையும் வென்றனர். மூன்று கோட்டைகளும் 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்திக்கும். அந்தக் கணத்தில் ஒற்றைக் கணையால் மட்டுமே அவர்களை அழிக்க முடியும் என்று வரம் பெற்றனர். சிறந்த சிவபக்தர்களாகவும் விளங்கினர். அவர்களை அழிக்க தேவர்கள் திட்டமிட்டனர். முதலில் திருமால் அவர்களிடம் புத்தராகச் சென்று அவர்களை சிவ வழிபாட்டைக் கைவிடச் செய்தார். சிவன் அவர்களைக் கொல்ல ஒப்புக் கொண்டார். தேவர்கள் சிவனுக்கு வல்லமை வாய்ந்த தேர், படைக்கலங்களை உருவாக்கி அளித்தனர். பூமி தேர் ஆக, சூரியனும் சந்திரனும் அதன் சக்கரங்களாக, நான்கு வேதங்கள் அதை இழுக்கும் குதிரைகளாக, நான்முகன் தேரோட்டியானார். மேருமலை வில்லாக, வாசுகி பாம்பு நாணாக, திருமால் அம்பாக, அனலன் அம்பின் நுனியாக, எமன் அம்பின் அடியானார். முப்புரங்களும் கூடிய வேளையில் சிவன் இவை எவற்றையும் பயன்படுத்தாது தன் புன்னகையால் முப்புரங்களை எரித்தார். சிவன் வித்யுன்மாலியை குடமுழவு இசைப்பவனாகவும் மற்ற இருவரையும் வாயிற்காவலர்களாகவும் கைலாயத்தில் வைத்துக் கொண்டார்.
சிற்பம்
௮-8 - தேரின் மீது நான்முகன் தேர் ஓட்டியாக அமர்ந்திருக்கிறார். சிவன் பின் கைகளில் மழு மான், முன் கைகளில் அம்பு வில்லுடன் நின்றிருக்கிறார். சடை மகுடம். நெற்றிக் கண்.
![]() |
௮-8-திரிபுராந்தகர். திருமண மண்டபம் தூண் தெ6கி2 |
௮-9. பிநாகர்
சிவன் பிநாகம் என்னும் தன் வில்லை முன் இடது கையில் ஏந்திய வடிவம்.
௮-9 - இந்தச் சிற்பத்தில் முன் வலது கை இடுப்பில் இருக்க பின் வலது கையில் அம்பு. பின் இடது கை உயர்ந்து சின் குறி போல அமைந்துள்ளது.
![]() |
௮-9-பினாகர். 36கால் மண்டபம் தூண் தெ1கி1 |
௮-10. சரபர்
தொன்மம்
நரசிம்மர் இரணியனைக் கொன்ற பிறகு போர் வெறி அடங்காது உலகத்தை துன்புறுத்த தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன் சரப வடிவம் எடுத்து நரசிம்மரை அடக்கினார். தன்னிலை மீண்ட நரசிம்மர் திருமாலிடம் திரும்பினார்.
சிற்ப அமைதி
சரபர் பறவை மனிதன் சிங்கம் கலந்த வடிவம். சிங்கத் தலை. இரு பெரும் இறக்கைகள். மனித மேல் உடல். எட்டு சிங்கக் கால்கள் அவற்றுள் நான்கு தரையில் ஊன்ற நான்கு மேல் நோக்கி இருக்கும். விலங்கு வால். நரசிம்மரை தூக்கிக் கொண்டு பறந்த நிலையில் காணப்படுவார். நரசிம்மர் கையறு நிலையில் தலைமேல் கைக் கூப்பியவாறு தொங்கிக் கொண்டிருப்பார்.
சிற்பம்
௮-10 - சரபர் சிற்பம். நான்கு கை நரசிங்கம். பின் இரு கைகளில் ஆழி சங்கு.
![]() |
௮-10-சரபர். 36கால் மண்டபம் தூண் வ5கி1 |
Comments
Post a Comment