மக்கள் - ௫. பெண் நடனம் - 1
௫-1 - வலது கை இடது கால் உயர்த்தி இடது கையை துதிக்கையாய் உடலின் குறுக்கே வீசி ஆடும் பெண்.
![]() |
௫-1-நடனமாடும் பெண். 16கால் மண்டபம் தூண் கி1வ5 |
௫-2 - இடது கையைத் தூக்கி வலது கையை மடித்து மார்பருகே வைத்து வலதுகாலை இடது காலைவிட கூடுதலாக மடித்து ஆடும் பெண்.
![]() |
௫-2-நடனமாடும் பெண். 16கால் மண்டபம் தூண் கி1வ7 |
௫-3 - இடதுகாலை நேராக மேல் நோக்கித் தூக்கிய உயர்த்திய தாண்டவ நிலை. இடது கை வியப்புக் குறி காட்டுகிறது.
![]() |
௫-3-இடது கால் தூக்கி நடனமாடும் பெண். 16கால் மண்டபம் தூண் மே1வ5 |
௫-4 - இடது கையை வெளியே வீசி வலது கையை தலைக்கு மேல் கொடி போல் வைத்து இடது காலை மடக்கித் தூக்கி உடலையும் தலையையும் இடது பக்கம் வளைத்த நிலை.
![]() |
௫-4-நடனமாடும் பெண். 16கால் மண்டபம் தூண் மே1வ5 |
௫-5 - வலது கையை இடுப்பில் வைத்து இடது கையை மடித்துத் தூக்கிய நிலை.
![]() |
௫-5- நடனமாடும் பெண். உள் கோபுரம் வமே முகப்பு |
௫-6 - மடங்கிய இரு கால்களும் விலகி தரையில் ஊன்றி இருக்க வலது கையை உயர்த்தி இடது கை பக்கத்தில் தொங்க ஆடும் பெண்.
![]() |
௫-6-நாட்டியப் பெண். உள் திருச்சுற்றின் முகமண்டபம் தூண் கி1வ2 |
௫-7 - மேற்கண்ட உடல் கை நிலைகள். வலது கால் சற்றே மடங்கி இருக்க இடது கால் நன்கு மடங்கி உடல் இடது பக்கமாக நகர்ந்திருப்பது.
![]() |
௫-7-நடனம் ஆடும் பெண். பொன்மலைநாதர் பெரு மண்டபம் வமே தூண் |
௫-8 - வலது கையை தொங்க விட்டு இடது கையை தூக்கிய நிலை. ௫-6 இன் வலம் இடமாக மாறிய நிலை.
![]() |
௫-8-நடனமாடும் பெண். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ9கி2 |
௫-9 - ௫-6 இன் இன்னொரு நிலை. இரு பாதங்களும் ஒன்றோடு ஒன்று ஒட்டி உள்ளன.
![]() |
௫-9-நடனப் பெண். பெரியநாயகிபெரு மண்டபம் தெகி தூண் |
௫-10 -௫-9 போன்ற நிலை. வலது கையில் மலர்.
![]() |
௫-10-ஒரு கை மலருடன் நடனமாடும் பெண். இராஜகோபுர உபபீட தூண் பாதம் தெகி |
௫-11 – ௫-6 போன்ற நிலை. இடது கால் தரையை விட்டு உயர்ந்துள்ளது.
![]() |
௫-11-நடனப் பெண். உள் திருச்சுற்றின் முகமண்டபம் தூண் கி1வ5 |
௫-12 - மேற்கண்ட நிலை. கை கால்கள் இட வலமாக மாறியுள்ளன.
![]() |
௫-12-நடனமாடும் பெண். உள் திருச்சுற்றின் முகமண்டபம் தூண் கி2வ3 |
௫-13 - இரு கால்களையும் மடக்கி தரையில் அகல ஊன்றி தோள்களில் இருந்து தொங்கும் உத்தரியத்தின் கீழ் முனைகளை கைகளால் பிடித்துக் கொண்டு ஆடுவது.
![]() |
௫-13-நாட்டியப் பெண். திருமண மண்டபம் தூண் தெ2கி1 |
௫-14 - இரு கால்களும் மடங்கி அகன்று தரையில் ஊன்றி இருக்க வலது கை தொங்க இடது கையை மடித்து வயிற்றின் முன் வைத்து ஆடுவது.
![]() |
௫-14-நடன பெண். - பொன்மலைநாதர் முக மண்டபம் தூண் வ4கி1 |
௫-15 - வலது கையை இடுப்பில் வைத்து இடது கையை தூக்கிய நிலை.
![]() |
௫-15-நடனம் ஆடும் பெண். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ1கி3 |
௫-16 - இடது கையில் சூலத்துடன் வலது கையை உயர்த்தி ஆடும் பெண்.
![]() |
௫-16-இடக்கை சூலத்துடன் நடனமாடும் பெண். பொன்மலைநாதர் முக மண்டபம் தூண் வ3கி1 |
௫-17 - கோலாட்டம்.
![]() |
௫-17-கோலாட்டம். திருமண மண்டப அதிட்டானம் |
Comments
Post a Comment