சக்தி 2 - ௩. கொற்றவை

௩. கொற்றவை

தொன்மம்

சங்க காலத்தில் பாலை நில தெய்வமாகத் திகழ்ந்தவள். பின்னர் புராண, உருவ அடையாளங்களை ஏற்றாள். தேவிகாபுரம் சிற்பங்களில் தனித்த கொற்றவை வடிவமாகவும் மகிடனைக் கொல்லும் மகிடற்செற்றாள் வடிவமாகவும் உள்ளாள்.

சிற்ப அமைதி

கொற்றவை ஒற்றைத் தலை பெண் தெய்வம். நான்கு கைகள். பின் கைகளில் ஆழியும் சங்கும் கொண்டவள். முன் வலது கை காக்க முன் இடது கை தொடை மீது உள்ளது. தேனடை மகுடம். மார்க் கச்சை உண்டு. சில சிற்பங்களில் எருமைத் தலை மீதும் சிலவற்றில் பின்னால் தன் ஊர்தி சிங்கத்துடனும் நிற்கிறாள். இவை இல்லாமல் அமைந்த சிற்பங்களும் உள்ளன.

சிற்பங்கள்

௩-அ - எருமைத் தலைமேல் நிற்கும் கொற்றவை.

௩-அ-எருமைத் தலை மேல் கொற்றவை
36 கால் மண்டபம் தூண் வ4கி௧


௩-ஆ - எருமை மீது பின்னால் சிங்கத்துடன் நிற்கும் கொற்றவை. 

சிங்கம் தலையை கொற்றவையின் இடப் பக்கம் வைத்து ஒரு முன் காலை உஅர்த்தி உள்ளது.

௩-ஆ-எருமைத் தலை மேல் நிற்கும் கொற்றவை.
பின்னால் சிங்கம் 36 கால் மண்டபம் தூண் வ3 கி5

௩-இ - பின்னால் சிங்கம். கீழே எருமைத் தலை இல்லை.

௩-இ-கொற்றவை பின்னால் சிங்கம் எருமைத் தலை இல்லை.
தேர் மைய மண்டபம் கி1வ2

௩-ஈ - பின்னால் சிங்கத்துடன் நிற்கும் கொற்றவை. 

வலது முன்கையில் காத்தல் குறிக்கு பதிலாக வாள்.

௩-ஈ-நின்ற கொற்றவை முன் கை வாள்.
திருமண மண்டபம் தூண் தெ7கி1

௩-உ - சிங்கத்தின் மீது நேரமர்வில் கொற்றவை

முன் கைகளில் காத்தல் வழங்கல் குறிகள்.

௩-உ-சிங்க ஊர்தியின் மேல் நேரமர்வில் கொற்றவை.
மதில் பிள்ளையார் வடக்குத் தூண்

௩-ஊ - எருமைத் தலை சிங்கம் இரண்டும் இல்லாமல் தனித்து நிற்கும் கொற்றவை.

௩-ஊ-நின்ற கொற்றவை எருமைத் தலை, சிங்கம் இல்லை.
 தேர் மைய மண்டபம் தூண் தெ1மே12

௩-எ - எட்டுக் கை கொற்றவை

இராஜகோபுர பெருவாயிலில் உள்ள அரிதான எட்டுக் கை கொற்றவை சிற்பம். வளைவு நிற்கை. பின் கைகளில் ஆழி சங்கு, முன் கைகளில் காத்தல் தொடைக் கை. இடையில் உள்ள கூடுதல் நான்கு கைகளில் வாள் கேடயம், அம்பு வில். பின்னால் சிங்கம். கீழே எருமைத் தலை.

௩-எ-எண்கை கொற்றவை பின்னால் சிங்கம்
இராஜகோபுரம் வட மேற்குச் சுவர்

௩-ஏ - தேவகோட்ட கொற்றவை

சிவன் கோயில் அர்த்த மண்டபத்தின் வடக்கு தேவகோட்டம் கொற்றவைக்கு உரியது. காம ஈசுவரர் கோயில் அர்த்த மண்டப வடக்கு தேவகோட்டத்தில் எருமைத் தலை மேல் நிற்கும் அழகிய கொற்றவை சிற்பம்.

௩-ஏ-தேவகோட்டத்தில் கொற்றவை-காம ஈசுவரர் கோயில் அர்த்த மண்டப வடக்கு தேவகோட்டம்



Comments