மக்கள் - ௫. பெண் நடனம் - 2. குடக்கூத்து

௫-18 - இடது தோளில் இருந்து தொங்கும் உத்தரீயத்தை இடது கையால் பிடித்துக்கொண்டு இடது முழங்கையில் சிறு குடத்தை இடுக்கிக் கொண்டு வலது கையை வீசி ஆடுவது.

௫-18-நடன பெண். உத்தரீயத்தை பிடித்த இடக்கை. இட மேல் கை பொக்கணம். வீசிய வலக்கை-
பொன்மலைநாதர் முக மண்டபம் தூண் வ4கி3

௫-19 - வலது தோளில் இருந்து தொங்கும் உத்தரீயத்தின் முனையை வலது கையால் பிடித்துக்கொண்டு இடது கையை இடது தொடை மீது வைத்து இரு கால்களையும் மடக்கி தரையில் வைத்து ஊன்றி ஆடுவது. இடது கையில் ஒரு சிறு குடம்.

௫-19-நடனமாடும் பெண்.
திருமண மண்டப மேடைத்  தூண் தெ1கி1

௫-20 - இரு கைகளையும் மடக்கி மார்பு அருகே வைத்த நிலை. இடது மேல்கையில் ஒரு சிறு குடம்.

௫-20-நடனமாடும் பெண்.
16கால் மண்டப மேடை மேற்குத் தூண்

௫-21 - இரு பெண்கள் நடனம். ஒருத்தியின் இடதுமுழங்கைக்குள் ஒரு சிறு குடம்.

௫-21-இரு பெண்கள் நடனம். ஒருத்தி இடது கையில் ஒரு சிறு குடம்.
உள் கோபுரம் தெமே முகப்பு

௫-22 - இடது மேற்கையில் கட்டித் தொங்கும் உத்தரீயத்தின் கீழ் முனையை இடது கையால் பிடித்து வலது கையை வலது முழங்கால் அருகே வைத்த நிலை. இடது மேல் கையில் ஒரு சிறு குடம்.

௫-22-நடனமாடும் பெண்.
 பொன்மலைநாதர் பெரு மண்டபம் தெகி தூண்

௫-23 - ஒரு சிறு குடத்தை இடுப்பில் வைத்த இடது கையால் இடுக்கிக் கொண்டு முகத்தை வலது பக்கம் திருப்பி வலது கையை தாடையின் கீழ் வைத்த நிலை.

௫-23-இடது கையில் சிறு குடத்துடன் நடனம் ஆடும் பெண்.
பெரியநாயகி பெருமண்டபம் தெகி தூண்

௫-24 - மேற்கண்ட சிற்பத்தைப் போன்றது. நடன ஆடைக்கு பதிலாக பொது கீழாடை.

௫-24-இடது கையில் சிறு குடத்துடன் நடனம் ஆடும் பெண்.
இராஜகோபுர உபபீட தூண் பாதம் தெகி

௫-25 - இடது தோள் மீது ஒரு சிறு குடத்தை வைத்துப் பிடித்துக் கொண்டு வலது கையை தொடை மீது வைத்து ஆடுவது.

௫-25-குடக்கூத்து பெண்.
பொன்மலைநாதர் பெரு மண்டபம் தெகி தூண்



Comments