சக்தி 3 - ௪. மகிடற்செற்றாள்

௪. மகிடற்செற்றாள்

தொன்மம்

அசுரன் ரம்பனுக்கும் எருமை இன மகிடிக்கும் பிறந்த அசுரன் மகிடன். எருமை மனித உருக் கொண்டவன். பெண்ணால் மட்டுமே இறப்பு எனும் வரம் கொண்டவன். அவனை கொற்றவை சிங்க ஊர்தியில் அமர்ந்து போரிட்டுக் கொன்றாள் என்பது புராணம். அதனால் மகிடற்செற்றாள் எனப் பெயர் பெற்றாள்.

சிற்ப அமைதி

மகிடற்செற்றாள் மகிடனைக் கொல்லும் காட்சி பல்வேறு விதமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது போன்ற இயங்கு சிற்பங்களைச் செதுக்கும் போது சிற்பிக்கு தன் படைப்பாற்றலை வெளிப்படுத்த வாய்ப்பு அமைகிறது.

இந்த சிற்பங்களில் மகிடற்செற்றாள் ஆகிய கொற்றவை ஆழி சங்குடன் உள்ளாள். இதுவே அவளது சிறப்பு அடையாளம். பெண் தெய்வங்களில் கொற்றவையைத் தவிர ஏழு கன்னிகளில் ஒருவரான் வைணவி மட்டுமே பின் கரங்களில் ஆழியும் சங்கும் கொண்டவள். மரபாக தேனடை மகுடம் அணியும் கொற்றவை பல சிற்பங்களில் சுடர் முடியும் அணிந்திருக்கிறாள். மார்க் கச்சை இல்லாமலும் இருக்கிறாள். சிலவற்றில் ஆழி சங்கிற்கு பதிலாக காளியின் ஆயுதங்களைக் கொண்டிருக்கிறாள். அத்தகைய வேறுபட்ட வடிவில் இருக்கையில் அவளிடம் வதை படும் எருமை வடிவ மகிடன் அவளை அடையாளம் காட்டுகிறான்.

மகிடன் எருமை வடிவில் இருக்கிறான். தலை மகிடற்செற்றாளின் வலது பக்கம். இடது காலை நிலத்தில் ஊன்றி வலதுகாலை மடித்து மகுடனின் முதுகின் மீது வைத்து அழுத்துகிறாள். அதன் காரணமாக மகிடனின் முன்னங்கால்கள் மடங்கி தலை தாழ்ந்துள்ளது. முன் இடது கை பொதுவாக மகிடனின் வாலைப் பற்றி உள்ளது. வலது கை அவன் தலை அல்லது கழுத்தைத் தாக்கும் நிலையில் உள்ளது.

மேற்கண்ட பொதுக் கூறுகளோடு கீழ்க்கண்ட பல்வகை தனித்துவமான சிற்பங்கள் காணக் கிடைக்கின்றன.

சிற்பங்கள்

௪-1 - நான்கு கை மகிடற்செற்றாள். 

௪-1-அ தேனடை மகுடம். பின் கைகளில் ஆழி சங்கு. இடது முன் கை வாளைப் பிடித்திருக்க வலது முன் கையில் உள்ள கத்தி மகிடனின் கழுத்தில் குத்தி உள்ளது

௪-1-அ 4கை மகிடற்செற்றாள்.
தேர் மைய மண்டபம் கி1வ2

௪-1-ஆ மேற்கண்ட சிற்பத்தில் தேனடை மகுடத்திற்குப் பதிலாக சுடர்முடி.

௪-1-ஆ 4கை மகிடற்செற்றாள் சுடர்முடி.
மதில் பிள்ளையார் வடக்குத் தூண்


௪-1-இ இரண்டாம் எண் சிற்பத்தில் முன் கைகளில் ஆழி சங்கு ஆகியவற்றிற்குப் பதிலாக உடுக்கை பாசம்.
-
௪-1-இ 4கை மகிடற்செற்றாள் பின் கை உடுக்கை பாசம் சுடர் முடி
திருமண மண்டபம் தூண் தெ6கி1

௪-1-ஈ  பின் கைகளில் சூலம் கபாலம். வலது கைச் சூலம் மகிடன் முதுகில் குத்தி உள்ளது.

௪-1-ஈ 4கை மகிடற்செற்றாள் பின் கை சூலம் கபாலம் சுடர் முடி.
திருமண மண்டபம் தூண் தெ3கி1

௪-1-உ வலது பின் கையில் ஆழிக்கு பதிலாக வாள். வலது முன் கை மகிடனின் தலையை பிடித்துத் தூக்க அவன் கழுத்தை வெட்ட வலது பின் கை வாளை ஓங்கி உள்ளது.

௪-1-உ 4 கை மகிடற்செற்றாள் பின் வலது கை ஆழிக்கு பதில் வாள்.
36 கால் மண்டபம் தூண் வ1கி3

௪-1-ஊ சிற்பம் ௪-1-2 போன்றது. வலது கை வாள் மகிடனின் கழுத்திற்குப் பதிலாக வாயில் குத்தி உள்ளது.

௪-1-ஊ 4கை மகிடற்செற்றாள் வாயில் குத்தும் வாள்.
தேர் தெற்கு முக மண்டபம் கிழக்குத் தூண்

௪-1-எ நான்கு கை மகிடற்செற்றாள். தேனடை மகுடம். எருமைத் தலையும் மனித உடலும் கொண்டு நின்றிருக்கும் மகுடன். அவன் கொம்பு ஒன்றை இடது கையால் பிடித்து அவன் கழுத்தை வலது கை வாளால் வெட்டுகிறாள் தேவி.

௪-1-எ கை மகிடற்செற்றாள் எருமைத் தலை மனித உடல் மகிடன்.
36 கால் ம்ண்டபம் தூண் வ3கி5

௪-1-ஏ நான்கு கை மகிடற்செற்றாள். தேனடை மகுடம். வலது முன் கை வாள் முதுகில் குத்த பின் வலது கை சூலம் கழுத்தில் குத்துகிறது. இடது கைகளில் சங்கு கேடயம்.

௪-1-ஏ 4கை மகிடற்செற்றாள் மகிடனை சூலத்தால் குத்துவது.
உள் கோபுரம் வமே தூண்

௪-2 ஆறு கை மகிடற்செற்றாள்.

௪-2-அ ஆறு கை மகிடற்செற்றாள். சிற்பம் ௪-1-ஊ போன்றது. சுடர்முடிக்குப் பதிலாக தேனடை மகுடம். கூடுதல் இரு கைகளில் கீழ் நோக்கி ஓங்கிய சூலம் கேடயம்.

௪-2-அ 6கை மகிடற்செற்றாள் 36கால் மண்டபம் தூண் வ1கி5

௪-2-ஆ ஆறு கை மகிடற்செற்றாள். தேனடை மகுடம். மகிடன் தேவியின் இடது பக்கம் திரும்பி உள்ளான். அவன் தலை வெட்டப்பட்டுள்ளது. வெட்டுண்ட கழுத்தில் இருந்து மகிடன் மனித உருவில் வெளிவருகிறான். மகிடனின் பின்பாகத்தை வலது காலால் அழுத்தி இருக்கும் தேவியின் முன் வலது கை அவன் வாலைப் பிடித்துள்ளது. முன் இடது கை மடியில் இருக்க பின் வலது கை ஒன்றால் பிடித்த சூலம் அவன் முதுகைக் குத்துகிறது. மற்ற வலது கையில் வாள். இடது கைகளில் சங்கு கேடயம்.

௪-2-ஆ 6கை மகிடற்செற்றாள் தலை வெட்டுண்ட மகிடன் மதில் பிள்ளையார் தெற்குத் தூண்

௪-2-இ ஆறு கை மகிடற்செற்றாள் மகிடனைக் கொல்லும் வேறொரு வகைச் சிற்பம்.

௪-2-இ 6கை மகிடற்செற்றாள்.
உள் கோபுரம் வகி தூண்

௪-2-ஈ ஆறு கை மகிடற்செற்றாள். சுடர்முடி. மனித வடிவில் இருக்கும் மகிடனை வதைக்கும் காட்சி. இடது காலால் மல்லாந்து விழுந்து கிடக்கும் மகிடன் தலையையும் வலது காலால் அவன் அடிவயிற்றையும் மிதித்து நிற்கிறாள். முன் இடது கையாலும் பின் வலது கை ஒன்றாலும் பிடித்த சூலத்தால் அவன் மார்பில் குத்துகிறாள். மகிடனின் இரு கால்களும் மடங்கி இரு கைகளும் தலைக்கு மேல் விழுந்து கையறு நிலையில் இருக்கிறான். அவன் வலது கையில் வாள் பயனின்றி கிடக்கிறது. மகிடற்செற்றாளின் மற்ற நான்கு கைகளில் ஆழி சங்கு வாள் கேடயம்.

௪-2-ஈ 6கை மகிடற்செற்றாள் மனித மகுடன்.
36கால் மண்டபம் தூண் வ3கி5

௪-3 எட்டுக் கை மகிடற்செற்றாள்

௪-3-அ எட்டுக் கை மகிடற்செற்றாள். சுடர் முடி. வலது கை வாள் வாயில் குத்த இடது கையில் வால். மற்ற வலக் கைகளில் ? ஆழி தடி. மற்ற இடக் கைகளில் சூலம் சங்கு கேடயம்.

௪-3-அ 8கை மகிடற்செற்றாள் திருமண மண்டபம் தூண் தெ4மே1

௪-3-ஆ எட்டுக் கை மகிடற்செற்றாள். சுடர் முடி. இதன் தனித்துவம் மகிடற்செற்றாள் இடது முன் கையாலும் வலது பின் கை ஒன்றாலும் பிடித்த சூலத்தால் மகிடன் முதுகில் குத்துவது. முன் வலது கை வாள் கழுத்தில் குத்த பின் இடது கை ஒன்று வாலைப் பிடித்துள்ளது. மற்ற நான்கு கைகளில் ஆழி சங்கு, அம்பு வில்.

௪-3-ஆ 8கை மகிடற்செற்றாள் முதுகில் குத்தும் இரு கை சூலம்.
திருமண மண்டபம் தூண் தெ2கி3

௪-3-இ மனித வடிவ மகிடனை சூலத்தால் குத்தும் மகிடற்செற்றாள். எட்டுக் கைகள். மகிடன் தலை தேவியின் வலது பக்கம் உள்ளது.

௪-3-இ 8கை மகிடற்செற்றாள் மனித மகிடனைக்கொல்வது.
வெளித் திருச்சுற்று பிள்ளையார் வடக்குத் தூண்

௪-3-ஈ அதே போன்ற இன்னொரு காட்சி. சுவர்ச் சிற்பம். பக்கச் சுவரில் தேவியை தாக்க வாள் கேடயத்துடன் ஓடி வரும் வீரன் ஒருவன்.

௪-3-ஈ 8கை மகிடற்செற்றாள் மனித மகுடனை சூலத்தால் குத்துவது.
உள் கோபுரம் தெமே தூண்

௪-3-உ எட்டுக்கை சுடர்முடி மகிடற்செற்றாள் மனித வடிவில் இருக்கும் மகிடனை வதைக்கும் வேறொரு காட்சி. மகிடன் தலை தேவியின் இடது பக்கம். இரு கைகளை தரையில் ஊன்றி உடலைத் தூக்கி உள்ளான். ஆயுதம் எதுவும் இல்லை. தேவி வலது காலால் மகிடனின் தூக்கிய புட்டத்தைை மிதித்து அழுத்துகிறாள். அதனால் அவன் கால்கள் மடங்கி உள்ளன. இடது முன் கையால் அவன் தலையைப் பிடித்துத் தூக்கி வலது கை வாளால் கழுத்தை வெட்டுகிறாள். மகிடற்செற்றாளின் மற்ற நான்கு கைகளில் ஆழி சங்கு, அம்பு வில். அழகிய மார்க் கச்சை.

௪-3-உ 8கை மகிடற்செற்றாள் மனித மகுடன்.
தேர் தெற்கு மண்டபம் கிழக்குத் தூண்






Comments