சிவன் 3 - ௩. உமையுடன் ஆன வடிவங்கள்
௩. உமையுடனான வடிவங்கள்
தேவிகாபுரத்தில் சிவன் உமையுடனான கீழ்க்காணும் வடிவங்கள் உள்ளன:
௩-1. உமை மகேசர்
௩-2. உமை ஈசர்
௩-3. மருவிய பிறைசூடி
௩-4. உமையுடன் விடையேறி
௩-5. மணவழகர்
௩-1. உமை மகேசர்
சிற்ப அமைதி
சிவன் இடப்பக்கம் உமையுடன் அமர்ந்த வடிவம். சிவன் நேரமர்வில் நான்கு கைகளுடன். சடை மகுடம். பின் கைகளில் மழு மான், முன் கைகளில் காத்தல் வழங்கல். இரு கை உமை இடது பக்கம் அமர்வு. தேனடை மகுடம். அவரது வலது கையில் மலர்.
சிற்பங்கள்
௩-1-அ- மேற்கண்ட சிற்பம். உமை இடது கையை பீடத்தில் ஊன்றி இரு கால்களும் பிடத்திலிருந்து தொங்க அமர்ந்திருக்கிறார்.
![]() |
௩-1-அ-உமை மகேசர் உமை இரு கால் தொங்க. திருமண மண்டபம் தூண் தெ5கி3 |
௩-1-ஆ- உமை ஒரு கால் தொங்க மண்டல அமர்வில்.
![]() |
௩-1-ஆ-உமை மகேசர். உமை மண்டல அமர்வில். பெரு மண்டபம் வமே தூண் |
௩-1-இ- திருவாசி சூழ்ந்துள்ளது. உமை பேரரச அமர்வில்.
![]() |
௩-1-இ-உமைமகேசர். உமை பேரரச அமர்வில். திருமண மண்டபம் தூண் தெ1மே1 |
௩-1-ஈ- உமை சிவனின் இடது தொடை மீது அமர்ந்து இரு கால்களையும் தொங்க விட்டு உள்ளார். சிவனின் இடது கை உமையை அணைத்துள்ளது.
![]() |
௩-1-ஈ-நேரமர்வில் சிவன் உமை மடியில். திருமண மண்டபம் தூண் தெ1கி3 |
௩-1-உ- பேரரச அமர்வில் உமை. சிவன் வலச் சுட்டு விரல் உயர்த்தி ஏதோ கூறுகிறார்.
![]() |
௩-1-உ-வீர அமர்வில் சிவன் வல சுட்டு விரல் உயர்த்தி. உமை வலக்கையில் மலர். 16கால் மண்டபம் மே1வ2 |
௩-2. உமை ஈசர்
சிற்ப அமைதி
உமை உடனான பிறைசூடி. இடது பக்கத்தில் இரு கை உமையுடன் நிற்கும் நான்கு கை சிவன். சிவன் முன்கைகளில் காத்தல் வழங்கல் குறிகள் அல்லது இடக்கையை இடுப்பில் வைத்து நேர் நின்ற நிலையில் இருக்க, உமை தேவி வடிவத்தில் வலது கையில் மலர் ஏந்தி இடது கையை தொங்க விட்டு முவ்வளைவு உடல் அமைதியோடு நிற்கிறார்.
சிற்பம்
௩-3. மருவிய பிறைசூடி
சிற்ப அமைதி
உமையை அணைத்து நின்ற வடிவம். சிவனின் வலது கை காக்க இடது கை உமையின் தோள் மீது அமர்ந்து அணைத்து முலையைத் தழுவி இருக்கிறது.
சிற்பம்
![]() |
௩-3-மருவிய பிறைசூடி. 36கால் மண்டபம் தூண் தெ1கி4 |
௩-4. உமையுடன் விடையேறி
சிற்ப அமைதி
உமையுடன் விடை மேல் அமர்ந்த வடிவம். அடியவர்களுக்கு காட்சி தந்து அருளும் வடிவம்.
சிற்பங்கள்
௩-4-அ - இடபத்தின் தலை சிவனின் வலது பக்கம்.
![]() |
௩-4-அ-விடையேறிய விமலர் உமையுடன். திருமண மண்டபம் தூண் தெ1கி2 |
௩-4-ஆ - இடபத்தின் தலை சிவனின் இடது பக்கம். முன்னும் பின்னும் குடையுடன் பூத கணங்கள். அலங்கரிக்கப்பட்ட இடபம்.
௩-5. மணவழகர்
சிற்ப அமைதி
உமையை மணந்த வடிவம். சிவன் உமை கைப்பற்றி நிற்க அடுத்த சதுரத்தில் திருமால் நீர்வார்த்து பெண்கொடை அளிக்கும் காட்சி. நான்முகன் அனல் ஓம்பி திருமணம் நடத்தி வைக்கிறார். திருமணத்தின் போது உமை பொதுவாக சிவனின் வலது பக்கம் இருப்பார். சில சிற்பங்களில் இடது பக்கம் இருப்பதும் உண்டு.
சிற்பம்
![]() |
௩-5-சிவன் உமை திருமணம். திருமண மண்டபம் தூண் தெ1கி3 |
Comments
Post a Comment