சிவன் 4 - ௩. சிவன் உமை திருமணம் சிற்பத் தொடர்

௩-6. சிவன் உமை திருமணம் சிற்பத் தொடர்


சிவன் உமை திருமண நிகழ்வை விவரிக்கும் தொடர் சிற்பங்கள் 36 கால் மண்டபம் தூண்5, 6 இன் 24 சதுரங்களில் உள்ளன.

இந்த இரு தூண்களின் கீழ்ச் சதுரங்களில் அதிகார நந்தியும் சிவகணமும் முன் செல்வது, விடை மீது மணமகன் சிவன் செல்வது, சிவன் உமையின் கைப்பற்றி திருமணம் செய்துகொள்வது, நான்முகன் அனல் ஓம்ப திருமால் நீர் வார்த்து பெண் கொடை அளிப்பது, திருமாலும் திருமகளும் கருடன் மீது அமர்ந்து திருமணத்திற்குச் செல்வது, நான்முகனும் கலைமகளும் அன்னத்தின் மீது அமர்ந்து திருமணத்திற்குச் செல்வது, முனிவர்களும் வீரபத்திரரும் செல்வது ஆகிய சிற்பங்கள் உள்ளன.

௩-6-அ-சிவன் உமை திருமணத்திற்கு அதிகார நந்தி முன் செல்வது.
36கால் மண்டபம் தூண் தெ1கி5

௩-6-ஆ-உமையுடனான திருமணத்திற்குசிவன் விடைமேல் செல்வது.
36கால் மண்டபம் தூண் தெ1கி5

௩-6-இ-சிவன் உமை திருமணத்திற்கு திருமால் திருமகள் கருடன் மீது  செல்வது.
36கால் மண்டபம் தூண் தெ1கி6

௩-6-ஈ-சிவன் உமை திருமணத்திற்கு நான்முகன் கலைவாணியுடன் அன்னம் மீது செல்வது.
36கால் மண்டபம் தூண் தெ1கி6

௩-6-உ-சிவன் உமை திருமணத்திற்கு முனிவர்களும் பூதகணங்களும் செல்வது.
36கால் மண்டபம் தூண் தெ1கி6

௩-6-ஊ-சிவன் உமை திருமணத்திற்கு வீரபத்திரர் செல்வது.
36கால் மண்டபம் தூண் தெ1கி6

௩-6-எ-சிவன் உமை திருமணம்.
36கால் மண்டபம் தூண் தெ1கி5

௩-6-ஏ-சிவன் உமை திருமணம்.
நான்முகன் அனல் ஓம்ப திருமால் பெண்கொடை.
36கால் மண்டபம் தூண் தெ1கி6


இரு தூண்களின் எட்டு நடுச்சதுரங்களில் எண் திசைக் காவலர்கள் தங்கள் மனைவியரோடு தங்கள் வாகனத்தின் மீது அமர்ந்து திருமணத்திற்கு செல்கின்றனர்.

இரு தூண்களின் எட்டு மேல் சதுரங்களில் ஏழு கன்னியர் நான்முகி, மகேசுவரி. கௌமாரி, வைணவி, வராகி, இந்திராணி, காளி ஆகியோர் திருமணத்திற்கு நடந்து செல்கின்றனர். அவர்களுடன் அய்யனார் யானை மீது அமர்ந்து செல்கிறார்.

எண் திசைக் காவலர்கள் மற்றும் ஏழு கன்னியர் படங்கள் அவர்களுக்கு உரிய பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.






Comments