சிவன் 5 - ௪-கூட்டு வடிவம், ௫-நடன வடிவம்
௪. கூட்டு வடிவங்கள்
௪-1. மாதொருபாகன்
சிவன் வலப் பாகத்திலும் உமை இடப் பாகத்திலும் அமைந்த கூட்டு வடிவம்.
தொன்மம்
பிருங்கி என்ற முனிவர் உமையை வழிபடாது சிவனை மட்டுமே வழிபடுபவர். சிவனும் உமையும் அமர்ந்திருக்கும் போது சிவனை மட்டுமே சுற்றி வந்து வழிபடுவதைக் கண்டு கோபமுற்ற உ்மை தவம் இருந்து சிவன் உடலில் இடது பாகம் பெற்றார்.
சிற்பம்
வலப்பக்கம் ஆண் உடல், முழங்கால் வரையான தோல் ஆடை, வலக் காதில் பனையோலைக் குண்டலம், வலக் கையில் மான் ஆகிய சிவக் கூறுகள். இடப் பக்கம் பெண் உடல், கணுக்கால் வரையான பட்டாடை, இடக் காதில் மகர குண்டலம், இடக் கையில் மலர் ஆகிய உமை கூறுகள். முன்கைகளில் காத்தல் வழங்கல் குறிகள்.
![]() |
௪-1-மாதொருபாகன் 36 கால் மண்டபம் |
௪-2. மாலொருபாகன்
சிவன் வலப் பாகத்திலும் திருமால் இடப் பாகத்திலும் அமைந்த கூட்டு வடிவம்.
தொன்மம்
பசுமாசுர வதம், பிச்சாடனர் தாருகாவன முனிவர்களின் செருக்கு அடக்கியது, பாற் கடலை கடைந்த போது தேவர்களுக்கு உதவியது போன்ற தருணங்களில் திருமால் மோகினி ஆக பெண் வடிவம் எடுத்து சிவனுக்கு உதவி உள்ளார். சிவனுக்கும் மோகினிக்கும் பிறந்தவர் ஐயப்பன். அதனால் திருமால் இடப்பாகம் கொண்டார்.
சிற்ப அமைதி
வலப்பக்கம் சடைமுடி, முழங்கால் வரையான தோல் ஆடை, வலக் காதில் பனையோலைக் குண்டலம், வலக் கையில் மான் ஆகிய சிவக் கூறுகள். இடப் பக்கம் கிரீட மகுடம், கணுக்கால் வரையான பட்டாடை, இடக் காதில் மகர குண்டலம், இடக் கையில் சங்கு ஆகிய திருமால் கூறுகள். முன் வலக் கை காக்க, முன் இடக்கை இடையின் மீது அமைந்துள்ளது.
![]() |
௪-1-மாதொருபாகன் |
௫. தாண்டவ வடிவங்கள்
௫-1. ஆடல்வல்லான்
108 வகை கரணங்களுக்கும் அவற்றில் சிறப்பானவையாக வகுக்கப்பட்ட தாண்டவங்களுக்கும் தலைவனாக சிவன் பெற்ற பெயர் ஆடல்வல்லான். அப்பெயர் சிதம்பரத்தில் சிவன் ஆடிய ஆனந்த தாண்டவத்திற்கு சிறப்புப் பெயர் ஆகவும் அமைந்தது.
சிற்பங்கள்
௫-1-அ - விரிசடை. வலது பின் கையில் உடுக்கை. இடது பின் கை தீயை ஏந்துகிறது. காக்கும் வலது முன் கை. உடலின் குறுக்கே துதிக்கையாய் வீசிய இடது முன் கை இடது பாதம் சுட்டுகிறது. கீழே சிவனின் வலப்பக்கம் தலையை வைத்துப் படுத்து இருக்கும் முயலகன். அவன் மீது வலக்காலை சற்று மடித்து ஊன்றி இடக்காலை குறுக்காக வலது பக்கம் தூக்கியுள்ளார். முகத்தில் இளநகை. சுற்றிலும் திருவாசி.
௫-1-ஆ - ஆடவல்லான் முயலகன் இல்லாமல் பீடம் அல்லது தரை மீது நின்றாடும் வடிவம்.
![]() |
௫-1-அ-ஆடல்வல்லான். வெளித் திருச்சுற்று பிள்ளையார் சன்னிதி வடக்குத் தூண் |
௫-1-இ - மேற்கண்ட சிற்பம் போன்றது. இடக்காலை உடலின் குறுக்கே வலப்பக்கமாகத் தூக்காமல் இடது பக்கம் தூக்கிய நிலை.
![]() |
௫-1-இ-ஆடல்வல்லான் இடக் காலை இடப்பக்கம் தூக்கி. திருமண மண்டபம் தூண் தெ1கி2 |
௫2. உயர்த்திய தாண்டவர்
ஒரு காலை மேல் உயர்த்தி ஆடிய தாண்டவம் உயர்த்திய தாண்டவம். அந்த சிவ வடிவம் உயர்த்திய தாண்டவர். தொடர்புடைய தொன்மத்தை ‘காளி நடனம்’ தலைப்பின் கீழ் காண்க.
சிற்பங்கள்
சிற்பத் தொடர்
36 கால் மண்டபத்தின் தூண் ஒன்றின் நான்கு கீழ்ச் சதுரங்களில் உயர்த்திய தாண்டாவக் கதை சொல்லப்பட்டுள்ளது..
௫-2-அ - உயர்த்திய தாண்டவர். சிவன் முயலகன் மீது வலது காலை சற்று மடித்து ஊன்றி வைத்துள்ளார். இடது காலையும் அதற்கு இணையாக முன் இடது கையையும் மேல் நோக்கி உயர்த்தி உள்ளார். பின் கைகளில் உடுக்கை தீ. வலது முன் கையில் காத்தல் குறி. வலது புறம் ஒரு முனிவரும் இடது புறம் ஒரு பெண்ணும் இறைவனைப் போற்றி நிற்கின்றனர்.
![]() |
௫-2-அ-ஊர்த்துவ தாண்டவர். 36கால் மண்டபம் தூண் வ4கி4 |
௫-2-ஆ - போட்டி நடனம் ஆடு நான்கு கை காளி. (காளியின் பல் வகை நடனச் சிற்பங்கள் தனித்தும் பல தூண்களில் காணப்படுகின்றன. அவை ‘காளி நடனம்’ தலைப்பின் கீழ் விவரிக்கப் பட்டுள்ளன.)
![]() |
௫-2-ஆ-காளி போட்டி நடனம். 36கால் மண்டபம் தூண் வ4கி4 |
௫-2-இ - வணங்கி நிற்கும் நான்முகன்.
![]() |
௫-2-இ-நான்முகன் வணங்கி நிற்பது. 36கால் மண்டபம் தூண் வ4கி4 |
௫-2-ஈ - வணங்கி நிற்கும் திருமால்.
![]() |
௫-2-ஈ-திருமால் வணங்கி நிற்பது. 36கால் மண்டபம் தூண் வ4கி4 |
வேறு வகை உயர்த்திய தாண்டவர் சிற்பங்கள்:
௫-2-உ -வலது பக்கம் மனித மேல் உடல் பாம்பு கீழ் உடல் உடலுடன் பதஞ்சலி முனிவர் வணங்கி நிற்கிறார். இடது பக்கம் ஒரு அடியவர் மாலையுடன் நிற்கிறார்.
![]() |
௫-2-உ-உயர்த்திய தாண்டவர் பதஞ்சலி. 16கால் மண்டபம் தூண் கி1வ4 |
௫-2-ஊ - உயர்த்திய தாண்டவர். இடது பக்கம் தாளமிடும் பெண்.
![]() |
௫-2-ஊ-உயர்த்திய தாண்டவர் தாளமிடும் பெண். 36கால் மண்டபம் வ1கி6 |
௫-2-எ - 16கை உயர்த்திய தாண்டவர். வலதுகாலை மேலே உயர்த்தி முன் இடது கையை தலைமேல் உயர்த்தி வைத்துள்ளார். கைகளில் உடுக்கை, தீ, வீணை, கங்காளம், ஆயுதங்கள் முதலியன. முன் வலது கையில் காத்தல் குறி. இடது பக்கம் பதஞ்சலி வலது பக்கம் ஒரு பெண் அடியவர். மேலே போற்றிப் பாடும் இரு கின்னரர்கள்.
![]() |
௫-2-எ-16 கை உயர்த்திய தாண்டவர் பதஞ்சலி பெண் 36கால் மண்டபம் தூண் வ2கி5 |
௫-2-ஏ - எட்டு கை உயர்த்திய தாண்டவர். வலதுகாலையும் முன் இடது கையையும் உயர்த்திய நிலை. வலது கை ஒன்று எம்பும் மானுக்கு புல் ஊட்டுகிறது.
![]() |
௫-2-ஏ-8கை உயர்த்திய தாண்டவர். தேர் தெற்கு மண்டபம் மேற்குத் தூண் |
௫-3. மற்ற சிவ நடனம்
௫-3 - நான்கு கைகள். பின் கைகளில் மழு மான். முன் கைகளில் காத்தல் வழங்கல். முயலகன் இல்லை. சற்று மடக்கி வலது காலை தரையில் ஊன்றி இடது காலை மடித்து தரையை விட்டு சற்று தூக்கிய நிலை.
![]() |
௫-3-சிவ தாண்டவம். 36கால் மண்டபம் தூண் வ1கி4 |
Comments
Post a Comment