சக்தி 6 - ௮. ஏழு கன்னியர்

௮. ஏழு கன்னியர்

தொன்மம்

ஏழு கன்னியர் ஏழு ஆண் தெய்வங்களின் பெண் கூறுகள் ஆவர். ஏழு கன்னியர் போர்த் தெய்வங்கள் ஆவர். அசுரர்களோடு போரிட்ட முதன்மை தெய்வங்களுக்குத் துணை புரியத் தோன்றியவர்கள் - அந்தகாசுரனுடனான போரில் சிவனுக்கும், சும்ப-நிசும்பர்களுடனான போரில் துர்கைக்கும், நைரிதனுடனான போரில் பிரம்மனுக்கும்.

சிற்ப அமைதி

முதன்மை ஆண் தெய்வங்களின் ஆயுதங்கள் வாகனங்கள் ஆகியவற்றையே தமதாகக் கொண்டுள்ளனர்.

பெயர், யாருடைய கூறு, தனித்த உருவ அடையாளம் (இருந்தால்), ஆயுதங்கள், ஊர்தி:

01. நான்முகி - நான்முகனின் கூறு - நான்கு முகங்கள் - அக்க மாலை, கமண்டலம் - அன்னம்

02. மகேசுவரி - சிவன் - இல்லை - மழு, மான் - இடபம்

03. கௌமாரி - முருகன் - இல்லை - சக்தி ஆயுதம், வைர ஆயுதம் - மயில்

04. வைணவி - திருமால் - இல்லை - ஆழி, சங்கு - கருடன்

05. வராகி - வராகர் - பன்றி முகம் - தண்டம், கலப்பை - சிங்கம்

06. இந்திராணி - இந்திரன் - இல்லை - வைர ஆயுதம் - யானை ஐராவதம்

07. சாமுண்டி அல்லது காளி - ருத்ரன் - சுடர்முடி - பின் கைகளில் உடுக்கை, பாசம், முன்கைகளில் சூலம், மண்டையோடு.

இந்த எழுவரோடு முன்னால் வீரபத்திரர் அல்லது அய்யனாரும் பின்னால் பிள்ளையாரும் இருப்பர்.

ஏழு கன்னியர் சிவன் கோயில்களில் திருச்சுற்றின் தெற்குப் பகுதியில் வடக்கு நோக்கி அமர்ந்து இருப்பர். பொன்மலை நாதர் கோயிலின் உள் திருச்சுற்றில் இவ்வாறு அமைந்துள்ளது. அங்கு முன்னும் பின்னும் வேறு தெய்வங்கள் இல்லை.

சிற்பங்கள்

அமர்ந்த நிலை

௮-1 - 36 கால் மண்டபத்தில் தூண் வ6/கி2 இல் ஏழு கன்னியர் நேரமர்வில் நான்கு கைகளுடன் காட்சி அளிக்கின்றனர். பின் கைகளில் அவரவருக்கு உரிய ஆயுதங்கள், முன்கைகளில் காத்தல் வழங்கல் குறிகள்.

௮-1-அ-நான்முகி
36 கால் மண்டபம் தூண் வ6கி2

௮-1-ஆ-மகேசுவரி
36 கால் மண்டபம் தூண் வ6கி2

௮-1-ஈ-வைணவி.
36 கால் மண்டபம் தூண் வ6கி2

௮-1-உ-வராகி.
36 கால் மண்டபம் தூண் வ6கி2

௮-1-ஊ-.இந்திராணி.
36 கால் மண்டபம் தூண் வ6கி2


நடந்து செல்லும் நிலை

௮-2 - 36 கால் மண்டபத்தில் தூண் வ6/கி5,6 இல் ஏழு கன்னியர் சிவன் உமை திருமண திருமணத்தில் பங்கேற்க நடந்து செல்லும் நிலையில் உள்ளனர். உடன் அய்யனார் யானை மீது.

௮-2-ஈ-வைணவி நடந்த நிலை.
36 கால் மண்டபம் தூண் வ6கி6

௮-2-எ-காளி நடந்த நிலை.
36 கால் மண்டபம் தூண் வ6கி6

௮-2-ஏ-ஐயனார்.
36 கால் மண்டபம் தூண் வ6கி5

ஊர்திகளுடன்

௮-3 - திருமண மண்டபம் தூண் வ6/கி5,6 இல் ஏழு கன்னியரும் உடன் அய்யனார், பிள்ளையாரும் தத்தம் ஊர்திகளோடு உள்ளனர். சிலர் ஊர்தி மேல் அமர்ந்திருக்க, சிலர் ஊர்தி முன் நிற்க, சிலர் ஊர்தி பொருத்தப்பட்ட பீடத்தின் மேல் அமர்ந்து இருக்கின்றனர்.

௮-3-அ-நான்முகி அன்னத்தின் முன் நிற்கை.
திருமண மண்டபம் தூண் தெ7மே1

௮-3-ஆ-மகேசுவரி இடபத்தின் முன் நிற்கை.
திருமண மண்டபம் தூண் தெ7மே1

௮-3-இ-கௌமாரி நேரமர்வு பீடத்தில்.
மயில் திருமண மண்டபம்

௮-3-ஈ-வைணவி கருடன் மேல்.
திருமண மண்டபம் தூண் தெ7மே1

௮-3-உ-வராகி சிங்கத்தின் முன் நிற்கை.
திருமண மண்டபம் தூண் தெ7மே1

௮-3-ஊ-இந்திராணி யானை மீது.
திருமண மண்டபம் தூண் தெ7மே1

௮-3-ஏ-ஐயனார் யானை மீது அரை யோக அமர்வு.
திருமண மண்டபம் தூண் தெ7மே1

௮-3-ஐ-பிள்ளையார் மூஞ்சூறு மீது.
திருமண மண்டபம் தூண் தெ7மே1

தனி வராகி

௮-4 - ஏழு கன்னியரில் வராகி மட்டும் தனித்து சில தூண்களில் இடம் பெற்றுள்ளார். இது எழுவருள் அவருக்கு கூடுதல் மதிப்பு தரப்பட்டதைக் குறிக்கிறது.

௮-4-தனித்த நேரமர்வு வராகி.
திருமண மண்டபம் தூண் தெ3கி3



Comments