சிவன் 7 - ௭. தென்முகத்தோன்

இந்த வடிவத்தில் சிவன் தெற்கு நோக்கி இருப்பவராக இருப்பதால் இப்பெயர். தத்துவம் ஞானம் யோகம் இசை ஆகியவற்றின் முதல் ஆசிரியனாக திகழும் வடிவம். அதற்கு ஏற்ப நான்கு வகைகள் உண்டு - வியாக்கியான, ஞான, யோக, வீணை ஏந்திய வடிவங்கள்.

௭-1. ஆலமர் அண்ணல்

வியாக்கியான தென்முகத்தோன் வடிவம். கல் ஆல மரத்தின் கீழ் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பதால் இப்பெயர்.

தொன்மம்

இமயமலையில் இவ்வாறு அமர்ந்து முதல் சீடர்களான முனிவர்களுக்கு மறை ஞானங்களை உணர்த்திய வடிவம். முனிவர்களின் எண்ணிக்கையும் பெயர்களும் வெவ்வேறு ஆகம சிற்ப நூல்களில் வேறுபடுகின்றன. மாணிக்கவாசகருக்கு திருப்பெருந்துரையில் குருவாய் வந்த கோலமும் இதுவே.

சிற்ப அமைதி

காட்டில் கல்லால மரத்தின் கீழ் புலித்தோல் மூடிய இருக்கை மீது வீராசனத்தில் அமர்ந்த நிலை. வளைவுகள் அற்ற நேர் உடல் அமைதி. சடை பாரம் அல்லது சடை மண்டலம். அதில் நடுவில் கங்கை முகம். வலது பக்கம் நிலா, அரளி முதலிய காட்டுப் பூக்கள், சிறு மணிகள். இடது பக்கம் மண்டை ஓடு, பாம்பு. முழு அமைதி நிறைந்த முகம். நெற்றிக் கண். அரை மூடிய கண்கள், மூக்கு நுனியில் குவிந்த பார்வை. நான்கு கைகள். வலப் பின் கையில் அக்க மாலை, பாம்பு அல்லது உடுக்கை. இடப் பின் கையில் தீ அல்லது தீவட்டி. வல முன் கரம் சின்முத்திரை காட்ட, வழங்கும் குறியில் அமைந்த இட முன் கரத்தில் சுவடி. தொங்கும் வலது கால் முயலகன் மீது. கழுத்தில் அக்கமாலை. அவரை சுற்றி காட்டு மிருகங்கள் குறிப்பாக மான் இடபம்.

சிற்பங்கள்

௭-1-அ - பாறை மீது அமர்ந்த ஆலமர் அண்ணல். கீழே ஒரு முனிவர். பின் கைகளில் பாம்பு தீவட்டி. முன்கைகளில் சின் குறி வழங்கும் குறி.

௭-1-அ-ஆலமர் அண்ணல்.
திருமண மண்டபம் தூண் தெ5கி3

௭-1-ஆ - பீடம் மீது அமர்ந்த ஆலமர் அண்ணல்.முயலகன் இல்லை.

௭-1-ஆ-ஆலமர் அண்ணல் பீடத்தின் மீது முயலகன் இன்றி ஆடவல்லான் மண்டபம் கிழக்குத் தூண்



௭-2. ஞானத் தென்முகத்தோன்

சிற்ப அமைதி

ஆலமர் அண்ணல் போன்றதே. சின் முத்திரையுடன் கூடிய வலது முன் கை உள் பக்கமாக திரும்பி மார்பின் முன் இருக்கும்.

சிற்பம்

௭-2 - ஞானத் தென்முகத்தோன்.

௭-2-ஞானத் தென்முகத்தோன்.
 பெரியநாயகி பெருமண்டபம் வமே தூண்



௭-3. யோகத் தென்முகத்தோன்

சிற்ப அமைதி

அரை யோக அமர்வு அல்லது யோக அமர்வு ஆகிய யோக நிலைகளில் அமைந்த தென்முகத்தோன் வடிவம். தாமரை, அரைத் தாமரை அமர்விலும் இருப்பது உண்டு. யோக நிலைகளில் மடித்து வைத்த கால்/ கால்களின் மீது முன் கைகள் இருக்கும். பின் கைகள் ஆலமர் அண்ணல் போல.

சிற்பம்

௭-3-அ - யோகத் தென்முகத்தோன். அரை யோக அமர்வு. இடது முன் கை இடது முழங்கால் மீது. வலது முன் கையில் சின் குறி.

௭-3-அ-யோகத் தென்முகத்தோன் அரை யோக அமர்வு.
 வெளித் திருச்சுற்று பிள்ளையார் முக மண்டபம் வடக்குத் தூண்

௭-3-ஆ - யோகத் தென்முகத்தோன். அரைத் தாமரை அமர்வு. இரு கைகளும் மடிமேல் தியானக் குறியில். பின் கைகளில் மழு மான்.

௭-3-ஆ-அரைத் தாமரை அமர்வில் தியானம் செய்யும் சிவன்.
 திருமண மண்டபம்



Comments