சிவன் 8 - ௮. அழிக்கும் வடிவங்கள் - ௮1- வீரபத்திரர், ௮2 - தக்க யாகம்

௮-1. வீரபத்திரர்

தொன்மம்

தக்கன் நடத்திய யாகத்தை அழிக்க சிவனில் இருந்து தோன்றியவர் வீரபத்திரர். தக்கன் நான்முகனின் மகன். உயிர்களைப் படைக்க நான்முகன் உருவாக்கிய பிரஜாபதிகளுல் ஒருவர். அவரது மகள்கள் பல முனிவர்கள் இறைவர்களை மணந்து தேவர்கள் அசுரர்கள் நாகர்கள் என பல இனங்களைத் தோற்றுவித்தனர். தக்கனின் இளைய மகள் சதி. அவள் சிவனை விரும்பி மணந்தாள். தக்கனுக்கு சிவனுடன் யார் பெரியவர் என்ற பகைமை இருந்தது. அவன் ஒரு பெரும் யாகம் நடத்தியபோது அதற்கு நான்முகன் திருமால் அனைத்து தேவர்களையும் மனைவியரோடு அழைத்திருந்தான். மகள் சதி மருமகன் சிவனை அழைக்கவில்லை. சதி சிவனின் சொல்லை மீறி தந்தையின் யாகத்திற்குச் சென்றாள். தக்கனால் அவமானப் படுத்தப்பட்டு யாகத் தீயில் விழுந்து இறந்து போனாள். சிவன் கோபமுற்று தன் சடைமுடி ஒன்றில் இருந்து வீரபத்திரரை தோற்றுவித்தார். வீரபத்திரர் காளி சிவகணங்களுடன் சென்று தக்கன் படையை வென்று யாகத்தை அழித்தார். தேவர்களை தண்டித்தார். தக்கன் தலையை வெட்டி யாகத்தீயில் இட்டார். நான்முகன் வேண்ட சிவன் வந்து அமைதியை உருவாக்கினார். தக்கன் உடலோடு ஆட்டுத் தலையைச் சேர்த்து உயிர்ப்பித்தார்.

சிற்ப அமைதி

சடை மகுடம். நெற்றிக் கண். கோரைப் பற்கள். நான்கு கைகள். பின் கைகளில் அம்பு வில். முன் கைகளில் வாள் கேடயம். வெட்டுண்ட தலைகள் கோர்த்த முண்ட உத்தரியம். பக்கத்தில் ஆட்டுத் தலையுடன் கைக்கூப்பி வணங்கியவாறு தக்கன்.

சிற்பங்கள்

௮-1-அ - வீரபத்திரர். பக்கத்தில் தக்கன்.

௮-1-அ-வீரபத்திரர் தக்கன்.
 36கால் மண்டபம் தூண் வ1கி2

௮-1-ஆ - வீரபத்திரர் தக்கன் இல்லாமல். தலைக்கு மேல் ஒரு சிறிய மகர தோரணம். மேலிருந்து வாழ்த்தி வணங்கும் முனிவர்கள்.

௮-1-ஆ-வீரபத்திரர் தக்கன் இல்லாமல்.
 36 கால் மண்டபம் தூண் தெ1கி3

௮-1-இ - போருக்குச் செல்லும் இரு கை வீரபத்திரர்.

௮-1-இ-இரு கை வீரபத்திரர்.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ6கி3




அ-2. தக்க யாகம்


பல மண்டபத் தூண்களில் தக்க யாகம் கதை சிற்பத் தொடர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

௮-2-1 - கைலாயத்தில் அமர்ந்திருக்கும் சிவன் உமைக்கு தக்கன் யாகம் பற்றிய தகவலை ஒருவர் கூறுதல்.

௮-2-1-சிவன் உமையிடம் ஒருவர் தக்க யாகச் செய்தி சொல்லுதல்.
தேர் மைய மண்டபம் தூண் மே1தெ2

௮-2-2 - உமை சிவன் அறிவுரையை மீறி தக்கன் யாகத்திற்கு புறப்படுதல்.

௮-2-2-சிவன் மறுக்க உமை யாகத்திற்குச் செல்லுதல் தேர் மைய மண்டபம் தூண் மே1தெ2

௮-2-3 - நான்முகன் அன்னத்தின் மீது அமர்ந்து தக்கன் யாகத்திற்குச் செல்லுதல்.

௮-2-3-அன்னம் மீது நான்முகன் தக்க யாகத்திற்கு வருகை.
36கால் மண்டபம்தூண் வ3கி3

௮-2-4 - திருமால் கருடன் மீது அமர்ந்து தக்கன் யாகத்திற்குச் செல்லுதல். இருவர் முகத்திலும் உள்ள புன்னகை காணத்தக்கது.

௮-2-4-கருடன் மீது திருமால் தக்க யாகத்திற்கு வருகை.
36கால் மண்டபம்தூண் வ3கி3

36 கால் மண்டபத் தூண் வ3கி3 இன் நடு, மேல் சதுரங்கள் சதுரங்களில் திசைக் காவலர்கள் எண்மரும் அவரவர் வாகனத்தில் அமர்ந்து யாகத்திற்கு வருவது சித்தரிக்கப்பட்டுள்ளது.

௮-2-5 - நான்முகனும் திருமாலும் யாக மண்டபத்தில் அமர்ந்திருப்பது.

௮-2-5-திருமால் நான்முகன் தக்க யாகத்தில் அமர்ந்திருப்பது.
36கால் மண்டபம் தூண் வ3கி3

௮-2-6 - தக்கன் யாகத்தில் குழுமிய நான்முகன் திருமால் இந்திரன் அனலன் முதலான தேவர்கள், முனிவர்கள். அவர்கள் நடுவில் தன் கணவன் சிவனுக்காக குரல் எழுப்பும் உமை.

௮-2-6-தக்க யாகத்தில் பங்கேற்றவர்கள்.
36கால் மண்டபம்தூண் தெ1கி1

௮-2-7 - மானை ஆகுதியாக்கி தக்க யாகம் வளர்க்கும் முனிவர். அருகில் ஆட்டுத் தலை.

௮-2-7-முனிவர் தக்க யாகம் வளர்த்து விலங்குகளை தீயில் இடுதல்.
36கால் மண்டபம்தூண் வ3கி3

௮-2-8 - சிவனை வணங்கி தக்க யாகத்தை அழிக்கக் கிளம்பும் வீரபத்திரர்.

௮-2-8-சிவனை வணங்கி தக்க யாகத்தை அழிக்கச் செல்லும் வீரபத்திரர் 36கால் மண்டபம்தூண் தெ1கி1

௮-2-9, 10 - வாள் கேடயத்தை உயர்த்தி போரிடச் செல்லும் வீரபத்திரர். இது தக்க யாகத்தின் பகுதியாக மட்டும் இன்றி தனிச் சிற்பமாகவும் காணப்படுகிறது.

௮-2-9-வீரபத்திரர் போருக்குச் செல்வது.
 தேர் மைய மண்டபம் மே1தெ2

௮-2-10-வாள் கேடயம் ஓங்கி வீரபத்திரர் போருக்குச் செல்வது.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ5கி2

௮-2-11 - ஒரு விலங்கோடு போரிட்டு அதன் வாயைப் பிளக்கும் வீரபத்திரர்.

௮-2-11-வீரபத்திரர் ஒரு விலங்குடன் சண்டை.
36கால் மண்டபம் தூண் வ3கி4

௮-2-12 - தக்க யாகத்தில் வீரபத்திரன் வருகை. தேவர்களும் முனிவர்களும் வணங்குகின்றனர். தக்கன் கீழே படுத்து ஒளிந்து கொண்டிருக்கிறான்.

௮-2-12-தக்க யாக சாலையில் வீரபத்திரர் வருகை.
36கால் மண்டபம்தூண் வ3கி4

௮-2-13 - வீரபத்திரர் தக்கனைத் துரத்திச் செல்லுதல்.

௮-2-13-வீரபத்திரர் தக்கன் போர்.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் தெ1கி3

௮-2-14 - வீரபத்திரர் தக்கன் தலையைப் பற்றுதல். முன் இடது கை கேடயத்திற்குப் பதிலாக தக்கன் தலையை பற்றி இருக்கிறது.

௮-2-14-வீரபத்திரர் தக்கன் தலை பற்றுதல்.
36கால் மண்டபம் தூண் வ3கி4

௮-2-15 - அனல் வீரபத்திரர் தக்கன் தலையை வெட்டுதல். சுடர் முடி. ஆறு கைகள். பின் வலது கை அம்பறாத் தூணில் இருந்து அம்பை எடுக்கிறது. பின் இடது கையில் வில். ஓங்கிய வலது நடுக் கையில் மழு. இடது நடுக் கை தக்கன் தலையைப் பிடித்துள்ளது. வலது முன் கை வாள் அவன் தலையை வெட்டுகிறது. முன் இடது கையில் கேடயம்.

௮-2-15-அனல் வீரபத்திரர் தக்கன் தலை வெட்டுதல்.
36கால் மண்டபம் தூண் வ3கி4

௮-2-16 - வீரபத்திரர் தக்கன் தலையை வெட்டுதல். சடை மகுடம். ஆறு கைகள். நடு வலது கையில் மழுவுக்குப் பதிலாக தண்டனைக் குறி. தக்கனுக்குக் கீழே யாகத் தீ.
௮-2-16-யாகத்தீ அருகில் வீரபத்திரர் தக்கன் தலை வெட்டுதல்.
தேர் மைய மண்டபம் தூண் மே1தெ2

௮-2-17 - நான்கு கை வீரபத்திரர் தக்கன் தலையைத் தூக்கிச் செல்லுதல்.

௮-2-17-வீரபத்திரர் தக்கன் தலையை எடுத்துச் செல்லுதல்.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் தெ1கி4

௮-2-18 - வீரபத்திரர் தக்கன் தலையை யாகத் தீயில் போடுதல்.

௮-2-18-வீரபத்திரர் தக்கன் தலை தீயில் இடுதல்.
36கால் மண்டபம் தூண் வ3கி4

௮-2-19 - ஆட்டுத்தலை தக்கன் வணங்கி நிற்க, ஒரு முனிவர் போற்றிக் கை உயர்த்துதல்.

௮-2-19-ஆட்டு தலை பெற்ற தக்கனும் பிருகு முனிவரும் வீரபத்திரரை வணங்குதல்.
 பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ6கி3

௮-2-20 - மேல் சதுரத்தில் மாலையோடு இருவர்.

௮-2-20-முனிவர் இருவர் மாலையோடு நிற்பது பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ6கி4

௮-2-21 - நடுச் சதுரத்தின் ஒரு பக்கத்தில் இரு கைக் கூப்பி வணங்கி நிற்கும் இருவர், அடுத்த பக்கத்தில் அவ்வாறு நிற்கும் ஒருவர்.

௮-2-21-வணங்கி நிற்கும் இருவர். வணங்கி நிற்கும் ஒருவர்.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ6கி4


Comments