சிவன் 9 - ௮. அழிக்கும் வடிவங்கள் - ௮3 - பைரவர்

௮-3. பைரவர்

தொன்மம்

நான்முகனின் ஐந்தாம் தலையை கொய்து அவர் ஆணவத்தை அடக்கவும், அந்தகாசுரனை வதைக்கவும் சிவன் தோற்றுவித்த சிவ வடிவம் பைரவர்.

சிற்ப அமைதி

இந்தக் கோயிலில் நான்கு வகை பைரவர் சிற்பங்கள் காணப்படுகின்றன.

௮-3-அ - நேர் நின்ற நிலையில் பைரவர். சுடர்முடி. நெற்றிக்கண். கோரைப் பற்கள். வெறித்த பார்வை. பிறந்த மேனியர். நான்கு கைகள். பின் கைகளில் உடுக்கை பாசம். முன் கைகளில் சூலம் கபாலம். பாம்பால் ஆன அரைஞாண் கயிறு. கழுத்தில இருந்து முழங்கால்களின் கீழ் வரை தொங்கும் சிறு மணிகளால் ஆன மாலை. பின்னால் அவரது ஊர்தியான நாய். நாயின் தலை மரபாக பைரவரின் வலது பக்கம்.

௮-3-அ-பைரவர்.
36கால் மண்டபம் தூண் வ3கி5

௮-3-ஆ - கால்களை அகல வைத்த முவ்வளைவு நிலையில் பைரவர். சடை மண்டலம். கோரைப் பற்கள் இல்லை. வலது பின் கையில் உடுக்கை. இடது பின் கையில் கழுத்தின் பின்னால் குறுக்காக கிடத்திய சூலம். வலது முன்கையில் மேல் நோக்கிய வாள். முன் இடது கையில் கபாலமும் அதிலிருந்து தொங்கும் ஒரு முண்டமும். பின்னால் நாய். இடது பக்கம் அமைந்த தலை. முண்டத்தில் இருந்து ஒழுகும் குருதியை நக்குகிறது.

௮-3-ஆ-பைரவர் முவ்வளைவுடன்.
16கால் மண்டபம் கி1வ5

௮-3-இ - இவரும் முன்னவர் போன்ற தோற்றம் கொண்டவர். சடை மண்டலத்திற்கு பதிலாக சுடர்முடி. இடது கை சூலம் கழுத்தின் குறுக்காக இல்லாமல் தரையில் ஊன்றி உள்ளது. நாய் பைரவரின் இடது பக்கம் பின்னங்கால்களில் எம்பி நின்று குருதி நக்குகிறது. வலது பக்கம் உடல் சுருளாக அமைந்து படமெடுத்து ஒரு பாம்பு நிற்கிறது.

௮-3-இ-பைரவர் இட நாய் வல நாகம் உள் திருச்சுற்றின் முக மண்டபம்.
தூண் மே1வ1


கால பைரவர்

௮-3-ஈ - கால பைரவர். காலச் சக்கரத்தின் உள் இடது பக்கம் நடந்து செல்லும் நிலையில் உள்ளார். சுடர்முடி. கோரைப் பற்கள். தொடை வரையான ஆடை அணிந்துள்ளார். எட்டுக் கைகள். முன் இரு கைகளில் சூலத்தைக் குறுக்காக ஏந்தி உள்ளார். மும்முனை இடது பக்கம் பார்க்கிறது. மற்ற கைகளில் வாள், கேடயம், மணி முதலான ஆயுதங்கள். நீண்ட மாலை ஒன்றை அணிந்துள்ளார்.

௮-3-ஈ-காலபைரவர்.
பொன்மலைநாதர் முக மண்டபம் தூண் தெ1கி1

௮-3-உ – கால பைரவர் 2. 10 கைகள். காலச் சக்கரம் திருவாசி போல உள்ளது. வலது பக்கம் பார்த்து நடக்கிறார்.

௮-3-உ-காலபைரவர்.
திருமண மண்டபம் தூண் தெ7கி2



Comments