சிவன் 1 - ௧. சிவலிங்கம், சிவலிங்க வழிபாடு

சிவன்

சிவனின் 64 சிவ வடிவங்கள், மற்ற வடிவங்கள் பல கோயில்களில் காணக் கிடைக்கின்றன. இந்த வடிவங்களை இவ்வாறு பிரிக்கலாம்.

௧. சிவலிங்கம்

௨. தனித்த சிவ வடிவங்கள்

௩. உமையுடன் ஆன சிவ வடிவங்கள்

௪. கூட்டு சிவ வடிவங்கள்

௫. நடன சிவ வடிவங்கள்

௬. வசீகர சிவ வடிவங்கள்

௭. தென்முகத்தோன் வடிவங்கள்

௮. அழிக்கும் சிவ வடிவங்கள்

௯. அருளும் சிவ வடிவங்கள்



௧-1. சிவலிங்கம்

சிவலிங்கம் தூண் சதுரங்கள், கோபுரச் சுவர்கள், தூண் பாதங்கள் கபோத நாசிகள், தேவகோட்ட மகர தோரணங்கள் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. பெரும்பாலும் சிவலிங்கத்தின் மீது மாலை அணிவிக்கப் பட்டுள்ளது. தனித்தும் மரத்தடியிலும், திருவாசியின் உள்ளும், விமான அமைப்பிலும் காணப்படுகிறது.

க-1-அ - சிவலிங்கம் மாலையுடன்.

க-1-அ - சிவலிங்கம் இராஜகோபுரம் வட கிழக்கு வெளிச்சுவர்

க-1-ஆ - மரத்தடி சிவலிங்கம்.

க-1-ஆ - மரத்தடி சிவலிங்கம். மரத்தின் பின் அமர்ந்திருக்கும் ஒருவர்.
பெரியநாயகி பெரு மண்டபம் வட கிழக்குத் தூண்

க-1-இ - திருவாசியுள் சிவலிங்கம்.

க-1-இ - திருவாசியின் உள் சிவலிங்கம்.
வெளித் திருச்சுற்று 4கால் மண்டபம்

௧-1-ஈ - விமான அமைப்பினுள் சிவலிங்கம்.

௧-1-ஈ - ஒரு தள விமானத்தில் சிவலிங்கம்.
திருமண மண்டபம் தூண் தெ2மே1

௧-1-உ - பொன்மலைநாதரைக் குறிக்கும் வகையில் மலை மேல் சிவலிங்கம் சிற்பம்.

௧-1-உ - மலை மேல் சிவலிங்கம்.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ3மே1


௧-2. சிவலிங்க வழிபாடு

சிவலிங்கத்தை வழிபட்டவர்கள் பற்றிய பல சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றில் சில தல புராணங்களும் அடங்கி உள்ளன. இந்த சிற்பங்களில் சிவ லிங்கத்தை வழிபடுபவர்களை மூன்றாகப் பிரிக்கலாம் - இறைவர்கள், விலங்குகள் (விலங்கு உருவில் வந்த இறைவர்கள், விலங்கு உருவ தேவர்கள், விலங்குகள்), அடியார்கள்.

க-2-அ. இறைவர்கள்

௧-2-அ-1 - நான்முகன் மணி ஒலித்து தீபம் காட்டி சிவலிங்கத்தை வழிபடுதல்.

௧-2-அ-1-நான்முகன் மணி தீபத்துடன் சிவலிங்க வழிபாடு.
36 கால் மண்டபம் தூண் வ1கி6

௧-2-அ-2 - திருமால் சிவலிங்கத்திற்கு மாலை சூட்டுதல்

௧-2-அ-2-திருமால் சிவலிங்கத்திற்கு மாலை சூட்டி வணங்குவது.
பொன்மலைநாதர் 36 கால் மண்டபம் தூண் தெ1கி3

௧-2-அ-3 - திருமால் மணி ஒலித்து தீபம் காட்டி சிவலிங்கத்தை வழிபடுதல்.

௧-2-அ-3-திருமால் சிவலிங்கத்தை மணி தீபம் கொண்டு வழிபடுதல்.
மதில் பிள்ளையார் சன்னிதி வடக்குத் தூண்

௧-2-அ-4 - திருமால் சிவலிங்கத்தைக் கைக் கூப்பி வணங்குதல்.

௧-2-அ-4-திருமால் சிவலிங்கத்தை வணங்குதல்.
36 கால் மண்டபம் தூண் வ4கி1

௧-2-அ-5 - நான்கு கை உமை மணி ஒலித்து தீபம் காட்டி சிவலிங்கத்தை வழிபடுதல்.

௧-2-அ-5-4 கை உமை சிவலிங்கத்தை மணி தீபத்துடன் வழிபடுவது.
 36கால் மண்டபம் தூண் வ1கி2


௧-2-அ-6 - நான்கு கை உமை சிவலிங்கத்தைக் கைக் கூப்பி வணங்குதல்.

(திருமண மண்டபம் தூண் தெ7கி3)

௧-2-அ-7 - கொற்றவை மணி ஒலித்து தீபம் காட்டி சிவலிங்கத்தை வழிபடுதல்.

௧-2-அ-7-கொற்றவை சிவலிங்கத்தை மணி தீபம் கொண்டு வணங்குவது.
மதில் பிள்ளையார் சன்னிதி வடக்குத் தூண்

௧-2-அ-8 - சூரியன் சிவலிங்கத்தை வழிபடுதல்.

(36 கால் மண்டபம் தூண் வ5கி4)

௧-2-அ-9 - நாகதேவி சிவலிங்கத்தை வழிபடுதல்

(36 கால் மண்டபம் தூண் வ6கி4)

௧-2-ஆ. விலங்கு உருவங்கள்

௧-2-ஆ-1 - தீச்சொல்லால் மயிலாக மாறிய உமை சிவலிங்கத்தை வழிபடுதல் (சென்னை மயிலாப்பூர், மயிலாடுதுறை).

௧-2-ஆ-1-மயில் சிவலிங்க வழிபாடு.
பெரியநாயகி பெரு மண்டபம் தென் மேற்குத் தூண்

௧-2-ஆ-2 - சிவலிங்கத்தின் மீது பால் சுரக்கும் பசு. தலையைத் திருப்பி சிவலிங்கத்தைக் கன்றாகக் கருதி நக்குகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டீசுவரத்தில் காம தேனுவின் மகளான பட்டி இவ்வாறு சிவனை வழிபட்டது.

௧-2-ஆ-2-சிவலிங்கத்திற்கு பால் தரும் பசு.
தேர் மைய மண்டபம் தூண் கி1வ2

௧-2-ஆ-3 - மேற்கண்ட சிற்பம் மண்டப அமைப்பினுள்.

௧-2-ஆ-3-மண்டப அமைப்பின் உள்ளே சிவலிங்கத்திற்கு பால் சுரக்கும் பசு.
உள்கோபுரம் தென் கிழக்கு முகப்பு

௧-2-ஆ-4 - துர்வாசர் தீச்சொல்லால் தன் வெண் நிறம் இழந்து கருமை அடைந்த ஐராவதம் தீச்சொல் நீங்க சிவலிங்கத்தை வழிபடுதல். மலைமேல் உள்ள பொன்மலைநாதரை யானை நீராட்டுகிறது.

௧-2-ஆ-4-யானை சிவலிங்க வழிபாடு.
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ3கி2

௧-2-ஆ-5 - ஆதிசேடன் திருவாரூர் மாவட்டம் திருப்பாம்புரத்தில் தீச்சொல் நீங்க சிவலிங்கத்தை வணங்குதல்.

௧-2-ஆ-5-ஆதிசேடன் சிவலிங்க வழிபாடு.
காமீசுவரர் கோயில் அதிட்டான நாசி

௧-2-ஆ-6 - பாம்பு சிவலிங்கத்தை வணங்குதல்.

௧-2-ஆ-6-பாம்பு சிவலிங்க வழிபாடு
பெரியநாயகி பெரு மண்டபம் தென் மேற்குத் தூண்

௧-2-ஆ-7 - மனித மேல் உடலும் புலியின் பின் உடலும் உடைய புருஷாமிருகம் மணி ஒலித்து தீபம் காட்டி சிவலிங்கத்தை வணங்குதல்.

௧-2-ஆ-7-புருஷாமிருகம் சிவலிங்க வழிபாடு.
பொன்மலைநாதர் முக மண்டபம் தூண் வ3கி2

௧-2-ஆ-8 - ஐந்தூரில் கோழி சிவலிங்கத்தை வணங்குதல்.

௧-2-ஆ-8-கோழி சிவலிங்க வழிபாடு.
பெரு மண்டபம் தெமே தூண்

௧-2-ஆ-9 - வானரம் வாலி சிவலிங்கத்தை நீராட்டுவது.

௧-2-ஆ-9-வானரம் சிவலிங்கத்திற்குப் பானையில் இருந்து நீராட்டுவது.
திருமண மண்டபம் தூண் தெ3கி3

௧-2-ஆ-10 - வாலி சிவலிங்கத்திற்கு மாலை சூட்டுவது.

௧-2-ஆ-10-வானரம் சிவலிங்கத்திற்கு மாலை சூட்டுவது.
பெரு மண்டபம் தெமே தூண்

௧-2-ஆ-11 - வாலி மரத்தடி சிவலிங்கத்தை வணங்குவது.

௧-2-ஆ-11-மரத்தடி சிவலிங்கத்தை வணங்கும் வானரம்.
இராஜபோபுர பெருவாயில் வமே சுவர்

௧-2-ஆ-12 - வாலி சிவலிங்கத்தை வணங்குவது.

௧-2-ஆ-12-வானரம் சிவலிங்கத்தை வணங்குதல்.
இராஜகோபுர பெருவாயில் தெந் கிழக்குச் சுவர்

௧-2-ஆ-13 - வாலி பொன்மலைநாதரை மணி ஒலித்து தீபம் காட்டி வணங்குவது.

௧-2-ஆ-13-வானரம் மணி தீபம் காட்டி பொன்மலைநாதரை வணங்குவது.
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ3கி2

௧-2-இ.  அடியவர்கள்

௧-2-இ-1 - அப்பர் என்னும் திருநாவுக்கரசர் சிவலிங்கத்தை வணங்குதல். கையில் உழவாரப் படை.

௧-2-இ-1-அப்பர் சிவலிங்கத்தை வணங்குதல்.
காசி விசுவநாதர் தெற்குத் தூண்

௧-2-இ-2 - திருஞானசம்பந்தர் சிவலிங்கத்தை வணங்குதல்.

௧-2-இ-2-ஞானசம்பந்தர் சிவலிங்கத்தை வணங்குதல்.
காசி விசுவநாதர் தெற்குத் தூண்

௧-2-இ-3 - சுந்தர் சிவலிங்கத்தை வணங்குதல்.

௧-2-இ-3-சுந்தரர் சிவலிங்கத்தை வணங்குதல்.
காசி விசுவநாதர் தெற்குத் தூண்

௧-2-இ-4 - திருவோத்தூரில் சிவசர்மன் வழிபட சிவலிங்கம் வளைந்து கொடுத்தல்.

௧-2-இ-4-சிவசர்மன் வழிபாட்டிற்காக சிவலிங்கம் வளைந்து கொடுத்தல்,  திருவோத்தூர்.
பெரியநாயகி மகாமண்டபம் தென் கிழக்குத் தூண்.

௧-2-இ-5 - முனிவர் மணி ஒலித்து தீபம் காட்டி சிவலிங்கத்தை வணங்குதல்.

௧-2-இ-5-முனிவர் சிவலிங்கத்தை மணி தீபம் காட்டி வழிபடுதல்.
மதில் பிள்ளையார் சன்னிதி வடக்குத் தூண்

௧-2-இ-6 - அடியவர் சிவலிங்கத்தைக் கைக் கூப்பி வணங்குதல்.

௧-2-இ-6-சிவலிங்கத்தை வணங்கும் அடியவர்.
16 கால் மண்டப மேடை கிழக்குத் தூண்

௧-2-இ-7 - அடியவர் சிவலிங்கத்திற்கு மாலை சூட்டுதல்.

௧-2-இ-7-அடியவர் சிவலிங்கத்திற்கு மாலை சூட்டி வணங்குதல்.
காசி விசுவநாதர் வடக்குத் தூண்

௧-2-இ-8 - அடியவர் தேவகோட்டத்தில் உள்ள சிவ லிங்கத்தை மணி ஒலித்து தீபம் காட்டி வணங்குதல்.

௧-2-இ-8-சிவலிங்க வழிபாடு இராஜகோபுர உபபீட உபபீடம் வடமேற்கு

௧-2-இ-9 - மணி ஒலித்து தீபம் காட்டி சிவலிங்கத்தை வழிபடும் அடியவர்.

௧-2-இ-9-மணி ஒலித்து தீபம் காட்டி சிவலிங்கத்தை வழிபடும் அடியவர்
பொன்மலைநாதர் முக மண்டபம் தூண் வ2கி3

௧-2-இ-10 - ஒரு பெண் தலை மேல் கைக் கூப்பி சிவலிங்கத்தை வணங்குதல். 

(36 கால் மண்டபம் தூண் வ6கி4).


Comments