கொடிப்பெண்
ஒரு கொடியை தலைமேல் வளைத்து ஒரு கையில் பிடித்தவாறு சிறந்த ஆடை அணிகலன்களை அணிந்து நின்றிருக்கும் அழகிய பெண்ணின் சிற்பம் பொதுவாக கோபுர நிலைக் கால்களுக்கு உரியது. பெரியநாயகி கோயில் இராஜகோபுரத்தின் நான்கு நிலைக் கால்களில் இரண்டில் சிதைந்தும் இரண்டில் முழுமையாகவும் சிறப்பாகவும் உள்ளன. இவை இராஜகோபுரம் பகுதியின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளன. அவை தவிர பல அழகிய கொடிப் பெண் சிற்பங்கள் தூண் சதுரங்களையும் அலங்கரிக்கின்றன. இவை தலை அலங்காரம், ஆடைகள், மற்ற கையின் நிலை, முகப் பார்வை, கொடியின் பக்கம், எந்தக் கால் குறுக்கு கால் ஆக உள்ளது, குறுக்கு கால் மற்ற காலுக்கு முன்னால் அல்லது பின்னால் உள்ளது ஆகியவற்றில் வேறுபாடுகள் காட்டி சுவை ஊட்டுகின்றன.
01 - இடது கை கொடியைப் பிடித்திருக்க மடக்கிய வலது கையின் மீது ஒரு கிளி. பார்வை அதன்மீது. இடது கால் குறுக்குக் காலாக வலது காலின் பின்னால். நேர்க் கொண்டை.
![]() |
01-கொடிப்பெண். 16கால் மண்டபம் தூண் கி1வ6 |
02 - வலது கை கொடியைச் சுற்றி வளைத்து இடுப்பின் மேல் உள்ளது. நேர்ப் பார்வை. இடது பக்கம் சாய்ந்த கொண்டை.
![]() |
02-கொடிப்பெண். 16கால் மண்டபம் தூண் மே1வ4 |
03 - மேல் உள்ளது போன்றது. குறுக்காக உள்ள இடது கால் வலது காலின் பின்னால் இல்லாமல் முன்னால் உள்ளது. நேர்க் கொண்டை. (தூண் சதுரத்தின் மேல் மூலைகளில் உள்ள விமான பந்தங்கள் காண்க)
![]() |
03-கொடிப்பெண். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ6கி2 |
04 – 01 போன்றது. கொடி இடது பக்கம். இடது பக்கக் கொண்டை.
![]() |
04-கொடிப் பெண். பெரியநாயகி பெருமண்டபம் வமே தூண் |
05 - வலது கால் குறுக்குக் காலாக இடது காலின் பின்னால் உள்ளது. வலது கை தொடை மீது. மடக்கிய இடது கை மீது ஒரு சிறு மயில். வலது பக்கம் சாய்ந்த கொண்டை.
![]() |
05-கொடிப்பெண். மதில் பிள்ளையார் தெற்குத் தூண் |
Comments
Post a Comment