அதிகார நந்தி, இடபம்
௧. அதிகார நந்தி
தொன்மம்
சிலாதர் என்ற பார்வையற்ற முனிவர் மனிதருக்குப் பிறவாத மரணமில்லா மகனை வேண்டித் தவம் செய்தார். சிவன் தானே அவருக்கு மகனாகத் தோன்றினார். நந்தி என்ற பெயருடன் நந்தி வளர்ந்து வருகையில் அவன் இளமையில் ஒராண்டில் இறப்பான் என்று தெரிய வந்தது. நந்தி சிவனை நோக்கிக் கடுந்தவம் செய்தான். மகிழ்ந்த சிவன் அவன் முன் தோன்றினார். தன்னை ஒத்த உருவமும் மரணமில்லா வாழ்வும் வழங்கி, அவரைத் தன் கணங்களுக்குத் தலைவன் ஆக்கினார்.
குபேரனை வென்ற பிறகு இராவணன் குபேரனின் புட்பக விமானத்தில் இலங்கை திரும்பினான். வழியில் கயிலாயமலை குறுக்கிட்டது. அங்கிருந்த நந்தி அவனை கைலாயத்தை சுற்றிப் போகச் சொன்னார். சினமுற்ற ராவணன் நந்தியை குரங்கு முகத்தோன் என்று பழித்தான். நந்தி ராவணன் குரங்குகளால் அழிவான் என்று தீச்சொல்லிட்டார்.
சிற்ப அமைதி
அதிகார நந்தி சிவனைப் போன்று சடை மகுடம், அதில் நிலா, காதுகளில் மகர பனையோலைக் குண்டலங்கள், நெற்றிக் கண், பின் கைகளில் மழு மான், முழங்கால் வரையான புலித்தோல் ஆடை போன்ற அடையாளங்கள் உடையவர். வாளை அல்லது பிரம்பை அணைத்தவாறு கைக் கூப்பி நின்ற நிலை. வாளும் பிரம்பும் அவர் அதிகாரத்தின் சின்னங்கள். கைக் கூப்பிய நிலை இவரை சிவனில் இருந்து வேறுபடுத்துகிறது. சிவனைப் போல மனித முகம் உடையவராகவும் இந்தக் கோயிலில் இருப்பது போன்ற முகம் உடையவராகவும் இருப்பார்.
௧-1 - அதிகார நந்தி. வாள் பிரம்பு இல்லை. இரு கைக் கூப்பி நிற்கிறார்.
![]() |
௧-1-அதிகார நந்தி-36கால் மண்டபம் தூண் தெ1கி2 |
க-2 - அதிகார நந்தி. கைக் கூப்பாமல் வலது முன் கை சுட்டி இருக்க இடது முன் கை பிரம்பைக் கீழே ஊன்றி உள்ளது. நந்திக்கு வாயிற்காவல் பணியும் உண்டு. இந்த முன் இரு கை குறிகளைக் கொண்டு இவரை வாயிற்காவல் பணி நந்தியாகக் கொள்ளலாம்.
![]() |
௧-2-அதிகார நந்தி. இராஜகோபுர பெருவாயில் தெமே சுவர் |
௨. இடபம்
தொன்மம்
சிவனின் வாகனமான இடபத்தையும் பொது வழக்கில் நந்தி என்று அழைப்பது உண்டு.
சிற்ப அமைதி
அதிகார நந்தியில் இருந்து வேறுபட்டது. காளை வடிவம். தனித்து இருக்கும் போது அமர்ந்த நிலையிலும் சிவன் உமையை சுமக்கும் போது நின்ற நிலையிலும் இருக்கும். இரண்டாம் வடிவம் விடையேறி சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளது. முதல் வடிவம் கற்சிலைகளாக திருச்சுற்றுகளிலும் பெரு மண்டபங்களிலும் காணப்படுகிறது. சுதைச் சிற்பங்களாக மதில் மேல் அமைகிறது.
92-1 - வேறுபட்ட இடபம். காளைத் தலை மனித உடல்.
![]() |
௨-1-வணங்கி அமர்ந்திருக்கும் இடபம். பொன்மலைநாதர் பெரு மண்டபம் தெமே தூண் |
Comments
Post a Comment