நாயன்மார்கள் - ௩. மாணிக்கவாசகர்

௩. மாணிக்கவாசகர்


தொன்மம்

மாணிக்கவாசகர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. இயற்பெயர் திருவாதவூரர். மதுரை அருகில் உள்ள திருவாதவூரில் பிறந்தார். அரிமர்த்தன பாண்டியன் என்ற இரண்டாம் வரகுண பாண்டியனுக்கு அமைச்சராக இருந்தார். அரசனுக்காக குதிரைகள் வாங்கச் சென்ற போது வழியில் திருப்பெரும்துறையில் சிவன் குருவாக வந்து அவருக்கு சிவ தீட்சை அளித்தார். திருவாதவூரர் தான் கொண்டு வந்த பொன்னை இறைப் பணிக்காக செலவழித்து விட்டார். மன்னன் அவரை குதிரைகளுடன் மதுரை திரும்புமாறு பணித்தான். சிவன் நரிகளைப் பரிகளாக்கி சிவ கணங்களை குதிரை ஓட்டிகள் ஆக்கி தானே தலைமை தாங்கி வந்தான். இரவில் அந்தக் குதிரைகள் மீண்டும் நரிகளாகி கொட்டகையில் இருந்த நல்ல குதிரைகளைக் கடித்து விட்டு காட்டுக்கு ஓடிவிட்டன. மன்னன் திருவாதவூரரை வைகை மணலில் நிறுத்தி தண்டித்தான். வைகை பெருக்கெடுத்து கரை உடைத்து ஊருக்குள் புகுந்தது. பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் மூலம் திருவாதவூரர் பெருமையை மன்னனுக்கு சிவன் உணர்த்தினார். திருவாதவூரர் மாணிக்கவாசகர் என்று பெயர் பெற்றார். திருவாசகரின் பாடல்களை சிவனே ஓலைகளில் எழுதி தில்லை சிற்றம்பலத்தில் வைத்தாராம். மாணிக்கவாசகர் தில்லையிலேயே சிவன் அடி சேர்ந்தார்.

பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் - வைகைக் கரையில் ஏற்பட்ட உடைப்பைச் சரிசெய்ய வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்ப பாண்டியன் உத்தரவிட்டான். மதுரையில் பிட்டு விற்றுவந்த வந்தி என்ற கிழவியின் வீட்டில் ஆண்மக்கள் யாரும் இல்லை. சிவன் சொக்கன் என்ற பெயரில் வேலையாளாக பிட்டை கூலியாக வாங்கிக் கொண்டு அவளுக்காக மண் சுமக்கச் சென்றார். கரை உடைப்பை சரி செய்யாமல் விளையாடிக் கொண்டிருந்தார். வெகுண்ட அரசன் அவர் முதுகில் பிரம்பால் அடித்தான். அடி அரசன் அரசி மக்கள் உயிரினங்கள் அனைத்தின் மீதும் பட்டது. சொக்கன் மறைந்து வான் ஒலி எழுந்தது. பாண்டியன் திருவாதவூரரை விடுதலை செய்தான்.

சிற்பங்கள்

உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் கி2வ4

௩-1 - அரிமர்த்தன பாண்டியன் அமர்ந்திருக்கிறான். வலது கை சுட்டு விரல் மேல் நோக்கிச் சுட்டியுள்ளது. பக்கத்தில் அமைச்சர் திருவாதவூரர் கைக்கூப்பி நிற்கிறார். குதிரைகள் வாங்கப் பணித்தல்.

௩-1-பாண்டியன் திருவாதவூரரை குதிரைகள் வாங்கப் பணித்தல்

௩-2 - பாண்டியன் திருவாதவூரருக்கு குதிரைகள் வாங்க பொருள் கொடுப்பது.

௩-2-குதிரைகள் வாங்க திருவாதவூரருக்கு பாண்டியன் பொன் கொடுப்பது

௩-3 - திருப்பெருந்துறை கோயில் விமானத்தில் சிவலிங்கம். திருவாதவூரர் வணங்கி நிற்கிறார்.

௩-3-திருப்பெருந்துரை சிவனை திருவாதவூரர் வணங்குதல்

௩-4 - பாண்டியன் திருவாதவூரரை அழைத்து குதிரைகள் குறித்து விசாரித்தல். திருவாதவூரரின் கோலம் அமைச்சரில் இருந்து அடியாராக மாறி உள்ளது.

௩-4-பாண்டியன் திருவாதவூரை அழைத்து குதிரைகள் குறித்து விசாரித்தல்

௩-5 - சிவன் குதிரைமீது அமர்ந்து குதிரைகளைக் கொண்டுவருவது . இவை பரிகளாக உருமாறிய நரிகள். ஓட்டிவருபவர்கள் சிவ கணங்கள்.


௩-6 - பாண்டியன் குதிரை ஓட்டிகளின் தலைவனாக வந்த சிவனுக்கு பீதாம்பரம் கொடுப்பது.

௩6-பாண்டியன் குதிரைகளை ஒட்டி வந்தவர்களின் தலைவனான சிவனுக்கு பீதாம்பரம்கொடுப்பது

௩-7 - பரிகள் மீண்டும் நரிகளாகி லாயத்தில் முன்பே இருந்த நல்ல குதிரைகளைக் கடிப்பது.

௩-7-மீண்டும் நரிகளான பரிகள் குதிரைகளைக் கடிப்பது

௩-8 - பாண்டியன் அமர்ந்திருக்கிறார். அமைச்சர் ஒருவர் அரசனிடம் குதிரைகள் ஓடிப்போனதைச் சொல்கிறார்..

௩-8-குதிரைகள் ஒடிப்போனதை பாண்டியனிடம் சொல்லுதல்

௩-9 - வைகைக் கரை உடைப்பைச் சரிசெய்ய ஆள் அனுப்பும்படி கிழவியை அரச ஊழியர் மிரட்டுவது. கிழவி வந்தி மண் சுமக்க கூலியாளாக வந்த சிவனுக்கு கூலியாக பிட்டு கொடுப்பது.

௩-9-கரை உடைப்பைச் சரி செய்ய அளானுப்ப கிழவியை மிரட்டுவது. பிட்டுக்கு ஆள் அனுப்புவது.

௩-10 - திருவாதவூரர் ஆற்று மணலில் தலை மேல் கைக் கூப்பி நின்று கொண்டிருப்பது. காலடியில் மீன்கள் வெள்ளத்தைக் குறிக்கின்றன. பக்கத்தில் வந்தியின் கூலியாள் சொக்கன் வேலை செய்யாமல் விளையாடிக் கொண்டிருக்கிறான்.

௩-10--திருவாதவூரர் வைகை மணலில் தலைமேல் கைக்கூப்பி நின்றிருப்பது. கரை உடைந்து வெள்ளம். சொக்கன் விளையாட்டு

௩-11 - வேலை செய்யாத சொக்கனை பாண்டியன் விசாரித்தல்.

௩-11-வேலை செய்யாத சொக்கனைபாண்டியன் விசாரித்தல்

௩-12 - சொக்கனை முதுகில் பாண்டியன் அடித்தல்.

௩-12-பாண்டியன் சொக்கன் முதுகில் அடிப்பது

இந்தக் கதையின் முற்பகுதி பெரியநாயகி கோயில் வெளி மதிலின் வெளிப்பக்கத்தில் உள்ள குதிரை வரிசைச் சிற்பங்களில் தென்மேற்குப் பகுதியிலும் உள்ளது.



Comments