திருமால் அவதாரங்கள் - ௪. இராமர்

சிற்பங்கள்

௪-1 - இராமர். இரு கைகள். கிரீட மகுடம். வலக்கையில் அம்பும் இடக்கையில் கோதண்டம் என்னும் வில்லும் ஏந்தியவர். முவ்வளைவுடன் நின்ற நிலை. மரபாக கணுக்கால் வரையான பட்டாடை அணியும் இராமர் இங்கு முழங்கால் வரையான தோலாடை (சுருக்கங்களுடன் கூடியது) அணிந்துள்ளார்.

௪-1-இராமர்.
16கால் மண்டபம் தூண் மே1வ3

௪-2 - வலது கை வில்லுடன் இராமர். இடது கையில் அம்பு. பட்டாடை. இடக்கை இராமர்.

௪-02-வலது கை வில்லுடன் இராமர்.
இராஜகோபுரம் தெமே- தூண் பாதம்

௪-3 - சீதை. தேவி வடிவம். இராமரின் வலது பக்கம் அமைபவள். அதனால் இராமன் பக்க இடக் கையில் மலர் வலக்கை தொங்கல்.

௪-3-சீதை.
16கால் மண்டபம் தூண் மே1வ2

௪-4 - வலது கை வில்லுடன் இரு கை கூப்பி வணங்கி நிற்கும் இலக்குவன். கிரீட மகுடம். தொடை வரையான மர உரி ஆடை (சுருக்கங்கள் அற்றது). இடக்கை இலக்குவன்.

௪-4-இலக்குவன் வலக்கை வில்.
16கால் மண்டபம் தூண் கி1வ1

௪-5 - இடது கை வில்லுடன் இலக்குவன். வலது தோளில் அம்பராத் தூணி.

௪-5-இலக்குவன் இடக்கை வில்.
ன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ5கி1

௪-6 - இராமரும் அவரது வலது பக்கத்தில் சீதையும்.

௪-6-இர்ர்மர் சீதை.
திருமண மண்டபம் தூண் தெ4கி3

௪-7 - அடுத்த பக்கத்தில் உள்ள இராமர் சீதையை வணங்கி நிற்கும் அனுமன் இலக்குவன்.

௪-7-இராமர் சீதையை வணங்கும் இலக்குவன் அனுமன்.
திருமண மண்டபம் தூண் தெ4கி3

௪-8 - யோக இராமர். இராமர் அரைத் தாமரை அமர்வில் அமர்ந்துள்ளார். வில் அம்பு இல்லை. வலது கையை உள் திரும்பிய சின் முத்திரையுடன் மார்பின் முன் வைத்த யோக நிலையில் உள்ளார். இடது பக்கம் சீதை வலது கையில் மலருடன் அமர்ந்துள்ளார். வலது பக்கம் இலக்குவன் வணங்கி நிற்கிறார். இது நெடுங்குணம் யோக ராமர் கோயில் மூலவர் வடிவம்.

௪-8-யோக ராமர்.
திருமண மண்டபம் தூண் தெ3கி3



Comments