முருகர் வள்ளி திருமணக் கதை
தொன்மம்
வேடர் குலப் பெண்ணான வள்ளியை விரும்பி முருகன் காதல் மணம் புரிந்தார் என்பது புராணம். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த கச்சியப்பர் யாத்த கந்த புராணத்தின் இறுதி அத்தியாயமான வள்ளியம்மை திருமணப் படலத்தில் இந்தக் கதை விவரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை மதில் முருகர் சன்னிதி மற்றும் வெளிச்சுற்று முருகர் சன்னிதி இரண்டின் முக மண்டபத் தூண்களின் சதுரங்களில் கதைத் தொடராக செதுக்கப்பட்டுள்ளது.
முன் கதை - திருமாலின் கண்ணீர்த் துளிகளில் இருந்து அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்னும் இரு பெண்கள் பிறந்தனர். இருவரும் முருகனை மணக்க விரும்பி தவம் இருந்தனர். முருகன் அவர்களின் அடுத்த பிறப்பில் மணப்பதாக உறுதி அளித்தார். சுந்தரவல்லி இந்திரனின் மகள் தெய்வானையாக முருகனை மணந்தாள். சுந்தரவல்லி வள்ளியாகப் பிறந்தாள்.
௧ - சுந்தரவல்லி ஒற்றைக் காலில் எரி நடுவில் முருகரை மணக்கத் தவம்.
௨ - முருகர் அடுத்த பிறவியில் மணப்பதாக உறுதி.
௩ - தொண்டை மண்டலத்தில் ஒரு காட்டில் மான்கள்.
௪ - மான் கருவுறுதல்
உள்ளடக்கம்
வேடர் குலப் பெண்ணான வள்ளியை விரும்பி முருகன் காதல் மணம் புரிந்தார் என்பது புராணம். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த கச்சியப்பர் யாத்த கந்த புராணத்தின் இறுதி அத்தியாயமான வள்ளியம்மை திருமணப் படலத்தில் இந்தக் கதை விவரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை மதில் முருகர் சன்னிதி மற்றும் வெளிச்சுற்று முருகர் சன்னிதி இரண்டின் முக மண்டபத் தூண்களின் சதுரங்களில் கதைத் தொடராக செதுக்கப்பட்டுள்ளது.
முன் கதை - திருமாலின் கண்ணீர்த் துளிகளில் இருந்து அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்னும் இரு பெண்கள் பிறந்தனர். இருவரும் முருகனை மணக்க விரும்பி தவம் இருந்தனர். முருகன் அவர்களின் அடுத்த பிறப்பில் மணப்பதாக உறுதி அளித்தார். சுந்தரவல்லி இந்திரனின் மகள் தெய்வானையாக முருகனை மணந்தாள். சுந்தரவல்லி வள்ளியாகப் பிறந்தாள்.
௧ - சுந்தரவல்லி ஒற்றைக் காலில் எரி நடுவில் முருகரை மணக்கத் தவம்.
![]() |
௧-சுந்தரவல்லி முருகரை வேண்டி ஒற்றைக் கால் தவம். வெளித் திருச்சுற்று முருகர் சன்னிதி தெற்குத் தூண் மேற்கு கீழ்ச் சதுரம் |
![]() |
௨- மயில் மீது இரு பக்கமும் கால்களைத் தொங்கவிட்டு அமர்ந்துள்ள முருகர் அடுத்த பிறவியில் மணக்க வாக்கு அளித்தல். வெளித் திருச்சுற்று முருகர் சன்னிதி தெற்குத் தூண் |
அந்தக் காட்டில் தவம் செய்துவந்த சிலமுகி என்ற முனிவர் ஒரு பெண் மானைக் காமம் கொண்டு பார்க்க அந்த மான் கருவுற்றது.
௫ - நம்பியரசன் குழந்தையைக் கண்டெடுத்தல்
கருவுற்ற மான் ஒரு பெண் குழந்தையை ஈன்று காட்டில் போட்டுவிட்டுப் போனது. அந்த காட்டில் வாழ்ந்த வேடர் தலைவன் நம்பியரசன் என்பவன் ஆண் குழந்தைகள் மட்டுமே பிறந்ததால் பெண் குழந்தைக்காக ஏங்கிக் கொண்டிருந்தான். அவன் அந்த குழந்தையைக் கண்டெடுத்தான்.
![]() |
௫-நம்பியரசர் வள்ளியைக் காட்டில் கண்டெடுத்து மனைவியிடம் கொடுத்தல். மதில் முருகர் தெற்குத் தூண் |
௬ - நம்பியரசன் பெண் குழந்தையைத் தன் மனைவியிடம் கொடுத்தல்.
![]() |
௬-நம்பியரசன் குழந்தை வள்ளியை மனைவியிடம் கொடுத்தல். வெளித் திருச்சுற்று முருகர் சன்னிதி தெற்குத் தூண் |
௭ - இருவரும் குழந்தைக்கு வள்ளி என்று பெயரிட்டு தங்கள் மகளாக வளர்த்தல்.
![]() |
௭-நம்பியரசனும் மனைவியும் குழந்தை வள்ளியைக் கொஞ்சுதல். மதில் முருகர் தெற்குத் தூண் |
௮ - வள்ளிக்கு 12 வயது ஆன போது வேடர் குல வழக்கப்படி தினைப்புலத்தில் பறவைகளை விரட்ட பரண் மீது அமர்த்தப்பட்டாள்.
௯ - அப்போது அந்தக் காட்டிற்கு வந்த நாரதர் வள்ளியைப் பார்க்கிறார். முருகனுக்கு உரியவள் என அடையாளம் காண்கிறார்.
௧0 - நாரதர் முருகரிடம் வள்ளி பற்றி எடுத்து உரைக்கிறார்.
௧௧ - முருகர் வில் அம்புடன் வேடனாக வந்து வள்ளியைச் சந்திக்கிறார்.
௧௨ - வேடன் முருகன் வள்ளியுடன் உரையாடல்
௧௩ - அப்போது அங்கு வள்ளியின் தந்தை நம்பியரசன் வர முருகன் வேங்கை மரமாக மாறி வள்ளிக்குப் பின்னால் நிற்கிறார். நம்பியரசனுடன் வந்த வேடர்கள் வேங்கை மரத்தை வெட்ட முனைய நம்பியரசன் அது வள்ளிக்கு நிழல் தருகிறது என்று வெட்டுவதைத் தடுக்கிறார்.
![]() |
௧௩-முருகன் வேங்கை மரமாக மாறி நிற்க கோடாலியால் மரத்தை வெட்ட முயலும் நம்பியரசர் குழு வேடன். வெளித் திருச்சுற்று முருகர் சன்னிதி வடக்குத் தூண் |
௧௪ - நம்பியரசன் போன பின் முருகர் மீண்டும் வேடனாக வந்து வள்ளியிடம் தன் காதலை வெளிப்படுத்த வள்ளி மறுக்கிறாள்.
௧௫ - அப்போது அங்கு அடியார் கூட்டம் ஒன்று வர முருகன் தன்னை ஒரு வயதான சிவனடியாராக மாற்றிக் கொண்டு வள்ளியுடன் உரையாடுகிறார்.
![]() |
௧௫-முதியவரான முருகர் வள்ளியோடு பேசிக் கொண்டிருத்தல். வெளித் திருச்சுற்று முருகர் சன்னிதி வடக்குத் தூண் |
௧௬ - வள்ளி சிவனடியாராக வந்த முருகருடன் உரையாடுகிறார்.
![]() |
௧௬-வள்ளி அரைத் தாமரை அமர்வில் முதியவரான முருகருடன் பேசிக் கொண்டிருத்தல். வெளித் திருச்சுற்று முருகர் சன்னிதி வடக்குத் தூண் |
௧௭ - அப்போது சிவனடியாரான முருகருக்கு பசி எடுக்க வள்ளி தேனும் தினைமாவும் தருகிறாள்.
![]() |
௧௭-வள்ளி சிவனடியாரான முருகருக்கு தேன் தினை மாவு தருதல். வெளித் திருச்சுற்று முருகர் சன்னிதி வடக்குத் தூண் |
௧௮ - முருகர் தேன் தினை மாவைப் பெற்றுக் கொள்ளுதல்.
![]() |
௧௮-சிவனடியாரான முருகர் வள்ளியிடம் இருந்து தேன் தினை மாவு பெறுதல். வெளித் திருச்சுற்று முருகர் சன்னிதி வடக்குத் தூண் |
௧௯ - முருகர் கிழவராக வந்து வள்ளியைச் சந்தித்தல்.
௨0 - கிழவராக வந்த முருகருக்கு தாகம் எடுக்க வள்ளி நீர் நிலையைக் காட்டிக் கொடுக்கிறாள். குனிந்து இரு கையாலும் நீரை அள்ளிப் பருகிய முருகர் தன் காதல் பசியையும் தீர்க்குமாறு வள்ளியிடம் வேண்டுகிறார். வள்ளி மறுத்து விடுகிறாள்.
![]() |
௨௦-வள்ளி காட்டிய நீர் நிலையில் நீர் அருந்தும் முருகர் தன் காதல் தாகம் தீர்க்கச் சொல்லுதல். வெளித் திருச்சுற்று முருகர் சன்னிதி வடக்குத் தூண் |
௨௧ - முருகர் தன் தமையனை அழைக்க அவர் யானையாக வந்து வள்ளியை மிரட்டுகிறார்.
௨௨ - யானைக்கு பயந்த வள்ளி தன்னைக் காக்கும் கிழவரான முருகரை அணைத்துக் கொள்கிறாள். மணந்து கொள்ள ஒப்புகிறாள்.
௨௩ - முருகர் தன் உண்மை வடிவில் மயில் மீது வள்ளிக்குக் காட்சி கொடுக்கிறார்.
![]() |
௨௩-.மயில் மீது நேரமர்வில் முருகர் வள்ளிக்கு காட்சி. வெளித் திருச்சுற்று முருகர் சன்னிதி வடக்குத் தூண் |
௨௪ - உண்மை அறிந்தபின் வேடர் குல வழக்கப்படி வள்ளிக்கும் முருகனுக்கும் திருமணம் நடைபெறுகிறது.
௨௫ - முருகர் வள்ளி திருமணச் செய்தியை நாரதர் சிவன் உமைக்குத் தெரிவிப்பது.
௨௬ - முருகர் வள்ளி தெய்வானையுடன் காட்சி.
![]() |
௨௬ - பீடத்தின் மீது நேரமர்வில் முருகர். வள்ளி தெய்வானை பேரரச அமர்வில். மதில் முருகர் சன்னிதி வடக்குத் தூண் |
உள்ளடக்கம்
Comments
Post a Comment