சித்தர்கள்

சித்தர் சிற்பங்கள் காணப்படும் கோயில் உறுப்புகள்

சித்தர்கள் மரபு சைவம், சாக்தம், தாந்திரீகம் ஆகியவற்றின் கூறுகளை உள்ளடக்கியது. சித்தர்கள் சமூகத்தின் ஏற்கப்பட்ட நெறிகளுக்கு அப்பால் வாழ்ந்தவர்கள். அவர்களது யோக, தாந்திரீக சாதனைகள் பற்றிய சிற்பங்கள் தமிழக கோயில்களில் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன. தேவிகாபுரம் பெரியநாயகி, பொன்மலைநாதர் கோயில்களில் மற்ற இடங்களை விட மிக அதிக எண்ணிக்கையிலும் வகைகளிலும் உள்ளன. உபபீட அதிட்டான கண்டம், நாசிகள், கோபுரச் சுவர், சுவர்த் தூண் பாதங்கள், மண்டபத் தூண் சதுரங்கள், போதிகைகள் என பல இடங்களில் நிறைந்திருக்கின்றன. இந்த இடங்களில் சித்தர்களின் சிற்பங்கள் வரிசையாகவும், மற்றச் சிற்பங்களுக்கு இடையேயும் காணப்படுகின்றன.

01உபபீட கண்டத்தில் சித்தர்கள் - திருமண மண்டபம்

02 உபபீட நாசிகளில் சித்தர் சிற்பங்கள் - இராஜகோபுரம்

03கபோத நாசிகளுக்குப் பதிலாக சித்தர் சிற்பங்கள் - திருமண மண்டப உபபீடம்

04 உபபீட தூண் பாதங்களில் சித்தர் சிற்பங்கள் - இராஜகோபுரம்

05 உபபீடச் சுவரில் சித்தர் சிற்பங்கள் - இராஜகோபுரம்

06தூண் சதுரங்களில் சித்தர்கள்
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் தெ1கி2

யோக நிலைகள்

சித்தர்கள் பல்வேறு யோக நிலைகளில் காணப்படுகின்றனர். இவர்கள் நின்ற, அமர்ந்த, நடன நிலைகளில் உள்ளனர். அமர்ந்த நிலையில் அரைத் தாமரை அமர்வு, தாமரை அமர்வு, பேரரச அமர்வு, யோக அமர்வு, அரை யோக அமர்வு, அழகமர்வு, குறுக்கு அமர்வு முதலிய பல நிலைகளிலும் வகைப் படுத்தப்படாத நிலைகளிலும் அமர்ந்துள்ளனர்.

யோக தண்டம்

சிலர் யோக தண்டம் வைத்துள்ளனர். சிலர் அமர்ந்த நிலையில் கால் நடுவில் யோக தண்டத்தை நிறுத்தி அதன் மீது ஒரு கை அல்லது இரு கைகள் அல்லது இரு கைகள், தலை வைத்துள்ளனர். சிலர் அமர்ந்த அல்லது நின்ற நிலையில் வலது அல்லது இடது பக்கமாக உள்ள யோகதண்டம் மீது அந்தப் பக்க அல்லது அடுத்தப் பக்கக் கையை நீட்டி வைத்துள்ளனர். சிலர் இடது அல்லது வலது பக்க யோக தண்டம் மீது முழங்கையை வைத்து அதன் மீது தலை வைத்துள்ளனர். சிலர் குறுக்கு நிற்கையில் யோக தண்டத்தின் மீது இரு கைகளையும் வைத்து நின்றுள்ளனர். யோக தண்டத்தை தூக்கி நடனமாடுபவர்களும் உண்டு.

யோகபட்டம் 

சிலர் யோகபட்டம் அணிந்து அரை யோக அல்லது யோக அமர்வில் உள்ளனர். சிலர் யோகதண்டம், யோகபட்டம் இரண்டும் கொண்டுள்ளனர். மற்றவர்கள் இரண்டும் இல்லாமல் இருக்கின்றனர்.

கைக்குறி

சிலர் கைகளில் வணங்கும் குறி, தியானக் குறி, யோகக் குறி ஆகியன கொண்டுள்ளனர்.

சித்தர் - முனிவர் சிற்ப வேறுபாடுகள்

சித்தர் சிற்பங்களுக்கும் முனிவர் சிற்பங்களுக்கும் உள்ள கீழ்க்கண்ட வேறுபாடுகள் அவர்களை அடையாளம் காண உதவுகின்றன.
  • முடி அலங்காரம் - சித்தர்களுக்குப் பெரும்பாலும் சடை மண்டல முடி அலங்காரம். முனிவர்களுக்கு பெரும்பாலும் சடைக் கட்டு. (அரிதாக இருவருக்குமே சடை பாரம் அமைந்துள்ளது.)
  • உடல் உருவம் - சித்தர்களுக்கு மெலிந்த உடல். முனிவர்களுக்கு பருத்த உடல், தொப்பை.
  • உடல் அமைதி - முனிவர்கள் நின்ற நிலை, அரைத் தாமரை அமர்வு முதலிய சில மரபான உடல் அமைதி கொண்டுள்ளனர். சித்தர்களோ மேற்குறிப்பிட்ட பல்வகை அமர்ந்த நிற்கும் நடக்கும் நடன நிலைகளில் காணப்படுகின்றனர்.
  • சின்னங்கள் - சில சித்தர்களின் ஒரு கையில் (பெரும்பாலும் இடக்கை) பொக்கணம் என்னும் பை கட்டி இருக்கலாம். கமண்டலம் முனிவர்களுக்கு உரியது. யோக தண்டம் இருவருக்கும் உரியது எனினும் சித்தர் சிற்பங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன.
  • வாகனங்கள் - மீன், புலி முதலிய வாகனங்கள் சித்தர்களுக்கு உரியவை. முனிவர்களுக்கு அத்தகைய வாகனங்கள் இல்லை. அவர்கள் பல இடங்களில் மேகங்கள் மீது பயணிப்பவர்களாகக் காட்டப் பட்டுள்ளனர்.
  • சூழ்நிலை - சித்தர்கள் பெரும்பாலும் தனித்தும் சில சமயம் ஒரு சீடருடனும் காணப்படுகின்றனர். முனிவர்கள் பெரும்பாலும் இறைவர்களை வாழ்த்திய நிலையில் அல்லது புராணக் கதைகளின் பகுதியாகக் காணப்படுகின்றனர்.
இங்குள்ள சித்தர் சிற்பங்களில் மீனநாதர், கோரக்கர் ஆகிய இருவரை மட்டுமே அடையாளம் காண முடியும்.

௧. மீனநாதர்

தொன்மம்

இவர் இந்தியா, நேபாளம், திபெத் ஆகிய நாடுகளில் பரவியிருந்த நாத பரம்பரை என்னும் சித்தர் பரம்பரையின் துவக்கமாய் இருந்தவர். மீனநாதரது காலம் 7 -12 ஆம் நூற்றாண்டு. பிறந்த இடம் அசாம் அல்லது வடக்கு வங்காளம். ஆழ்கடலில் சிவன் பார்வதிக்கு உபதேசித்த யோகத்தை மீனின் வயிற்றில் இருந்து கேட்டுத் தெளிந்த மீனநாதர் யோகத்தில் முழுமை அடைந்து சித்தரானார். மீனநாதர் ஹட யோக, தந்திர நூல்களை இயற்றினார். அவரது சீடர்கள் கோரக்கர் உட்பட எண்மர்.

சிற்பம்

மீனநாதர் சிற்பங்களில் மீனின் மீது யோக நிலைகளில் அமர்ந்து காணப்படுகிறார். சிலவற்றில் உடன் ஒரு சீடர் இருப்பதுண்டு.

௧-1-மீனநாதர் அரையோக அமர்வில் வலச் சுட்டுவிரல் உயர்த்தி உரைத்தல்

௧-2-மீனநாதர் அரையோக அமர்வில்

௧-3-மீனநாதர் அரையோக அமர்வில் யோகதண்டத்தோடு

௧-4-மீனநாதர் சீடருடன்
பொன்மலைநாதர் முக மண்டபம் தூண் வ3கி3

௧-5-மீனநாதர் செண்டோடு

௧-6-மீனநாதர் பேரரச அமர்வில் யோகதண்டத்தோடு

௧-7-மீனநாதர் பேரரச அமர்வில்

௨. கோரக்கர்

மீனநாதரின் முதன்மைச் சீடர். குரு மீன் மீது காணப்படுவது போல சீடர் புலி மீது அமர்ந்து காணப்படுகிறார். சில சிற்பங்களில் ஐயனாரைப் போல இவரது கையில் செண்டு உள்ளது.

௨-1-கோரக்கர் - இடது கையில் செண்டு

௨-1-கோரக்கர் - வலது கையில் செண்டு

மற்ற சித்தர் சிற்பங்கள்

மற்ற சித்தர்களை அடையாளம் காண இத்தகைய தனித்துவம் எதுவும் இல்லை.

யோக அமர்வில் சித்தர்கள்

01யோக அமர்வில் சித்தர் இரு கை பின்னி வலக்கை மீது தலை.
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ1கி2

02யோக அமர்வில் சித்தர் கைகளைப் பின்னி வலக்கை மேல் தலை.
உள் கோபுரம்

03யோக அமர்வில் சித்தர். பக்கத்தில் கமண்டலம், கப்பரை. கையில் மூன்று குட வீணை.
பொன்ம்லைநாதர் முக மண்டபம் தூண் வ2கி1

04அரை யோக அமர்வில் சித்தர்.
பொன்மலைநாதர் பெருமண்டபம் வமே தூண்

05அரை யோக அமர்வில் சித்தர் இடக்கை யோகதண்டம் மீது.
திருமண மண்டப மேடை  தூண் தெ1கி2

06 மரத்தடியில்அரை யோக அமர்வில் சித்தர் 
16 கால் மண்டபம் தூண் மே1வ6

07அரை யோக அமர்வில் சித்தர் முழங்கால் மீது கை தலை வைத்து-உடன் சீடர்

மற்ற அமர்ந்த நிலைகளில் சித்தர்கள்

01 சித்தர்  வலது காலை மடக்கி நிறுத்தி, அதை இரு கைகளாலும் கட்டி அணைத்துள்ளார்.
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ3கி3

02 சித்தர் காலை கட்டியபடி.
16 கால் மண்டபம் தூண் கி1தெ1

03 சித்தர் அமர்ந்த நிலை. வலது தோளில் பொக்கணம்.
பெரியநாயகி பெருமண்டபம் வகி தூண்

04 சித்தர் ஒரு காலை நீட்டி அமர்ந்த நிலை.
இராஜகோபுர உபபீட தூண் பாதம்

05 சித்தர் ஒரு காலையே யோகதண்டம் போல வைத்து அமர்ந்த நிலை.
திருமண மண்டபம் தூண் தெ3 மே1

06 சித்தர் குறுக்கு அமர்வு. இரு கை தரையில் ஊன்றி உடலை மேல் எழுப்பிய நிலை.
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ2கி3

07 சித்தர் பேரரச அமர்வில். வலது பக்கம் கமண்டலம்.
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ2கி1

08 சித்தர் பேரரச அமர்வு.
இராஜகோபுர உபபீட தூண் பாதம்
 
09 சித்தர் பேரரச அமர்வு.
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ2கி1

10 சித்தர் வலக் கை உயர்த்தி, கால்களை ஒன்றன்மேல் ஒன்றாக மடித்து வைத்த நிலை.
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் தெ1கி1

11 இரு சித்தர்கள். இரட்டை நாசிகளுக்குப் பதிலாக.
திருமண மண்டப உபபீடம் மேற்குப் பகுதி

12 இரு சித்தர்கள். இரட்டை நாசிகளுக்குப் பதிலாக.
திருமண மண்டப உபபீடம் மேற்குப் பகுதி


யோக தண்டத்துடன் சித்தர்கள்

01யோக தண்டத்துடன் அரைத் தாமரை அமர்வில் சித்தர்.
தேர் மைய மண்டபம் தூண் மே1வ2

02யோக தண்டத்துடன் அரைத் தாமரை அமர்வில் திருவாசி மண்டபத்தின் உள் சித்தர்
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ2கி2

03யோக தண்டத்துடன் ஒரு காலை நீட்டி மரத்தடியில் அமர்ந்திருக்கும் சித்தர் உடன் சீடர் தேவி.
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ3கி3

04யோக தண்டத்துடன் ஒரு கால் நீட்டி மரத்தடியில் சித்தர் மரத்தில் தொங்கும் பொக்கணம்.
 பெரியநாயகி பெருமண்டபம் தெமே தூண்

05யோக தண்டத்துடன் தாமரை அமர்வில் சித்தர்.
பெரியநாயகி பெருமண்டபம் வகி தூண்

06யோக தண்டம் மீது இடது முழங்கை வைத்து அமர்ந்த சித்தர்.
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ3கி3

07யோகதண்டத்துடன் குறுக்கு நிற்கையில் சித்தர். இடது தோளில் பொக்கணம்.
16 கால் மண்டபத் தூண் கி1தெ2

08யோக தண்டம் மீது கை தலை சாய்த்து குறுக்கு நிற்கையில் சித்தர்.
16கால் மண்டபம் தூண் மே வ4

09யோக தண்டம் மீது கை வைத்து நிற்கும் சித்தர்.
திருமண மண்டப மேடை தூண் தெ2 கி1


நின்ற, நடக்கும் நிலைகளில் சித்தர்கள்

01நின்ற நிலை சித்தர் கைக்கூப்பி  வணங்கி.
16 கால் மண்டபம் மே1வ2

02நின்ற நிலை சித்தர் கைக்கூப்பி வணங்கி.
உள் திருச்சுற்றின் முகமண்டபம் தூண் மே1 வ2

03நின்ற நிலை சித்தர் கைக்கட்டி.
பொன்மலைநாதர் முக மண்டபம் தூண் வ2கி1

04நின்ற நிலை சித்தர் இரு கைகளையும் விரித்து பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் தெ1மே1

05நடந்து செல்லும் சித்தர் கையில் கப்பரையுடன்.
16 கால் மண்டபம் மே1வ2

06நடந்து செல்லும் சித்தர் நாயுடன்.
16 கால் மண்டபம் தூண் மே1வ5

07நடந்து செல்லும் சித்தர் யோக தண்டத்தை தூக்கிக் கொண்டு.
16 கால் மண்டப மேடை


நடனமாடும் சித்தர்கள்

01 நடனமாடும் சித்தர்.
திருமண மண்டபம் தூண் தெ7 கி2

02 நடனமாடும் சித்தர்.
இராஜகோபுர உபபீட சுவர்

03 நடனமாடும் சித்தர். இடப்பக்க தண்டம் மீது வலக்கை. பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் தெ1கி3.

04 நடனமாடும் சித்தர். இடப்பக்க தண்டம் மீது இடக்கை.
திருமண மண்டப மேடை தூண் தெ3கி2

05 நடனமாடும் சித்தர்.
16 கால் மண்டபம் தூண் மே1வ2

06 நடனமாடும் சித்தர்.
இராஜகோபுர உபபீட சுவர்2


07 நடனமாடும் சித்தர். வீசிய இடக்கையில் பொக்கணப் பை.
16 கால் மண்டப மேடை மேற்குத் தூண்

08 வீணையுடன் நடனமாடும் சித்தர் -மற்றொருவர் தாளம்.
16 கால் மண்டபம் தூண் மே1 வ2

09 இரு நடனமாடும் சித்தர்கள்.
 16 கால் மண்டபம் தூண் மே1வ2


Comments