திருமால் அவதாரங்கள் - ௩. வாமனர்

தொன்மம்

அசுர குலத்தில் பிரகலாதனின் பேரன் மாவலி. நீதி நெறிப்படி ஆட்சி செய்து வந்த அவன் வேள்விகள் மூலம் வலிமை பெற்று இந்திரனை வென்று விண்ணுலகைக் கைப்பற்றினான். காசியப முனிவர் மனைவி அதிதி தன் மகன்களான தேவர்களுக்கு விண்ணுலகை மீட்டுத் தர திருமாலிடம் வேண்ட அவர் அவளுக்கு மகனாகப் பிறந்தார். குள்ள உருவம் காரணமாக வாமனர் எனப்பட்டார். மாவலி நடத்திய பெரு வேள்விக்குச் சென்று அவனிடம் மூன்று அடி நிலம் தானமாகக் கேட்டார். வாமனனாக வந்துள்ளவன் திருமாலே என தனது அசுரகுரு சுக்கிராச்சாரியார் மூலம் அறிந்தும் வாமனருக்கு மூன்று அடி நிலத்தை தானமாகக் கொடுத்தான் மாவலி. வாமனர் பேருருவம் எடுத்து உலகளந்தப் பெருமாளாக மண்ணுலகை ஒரு அடியாலும் விண்ணுலகை இன்னொரு அடியாலும் அளந்தார். மாவலி வேண்டியபடி மூன்றாவது அடியை அவன் தலைமீது வைத்து அவனைத் தன்னவன் ஆக்கினார். இந்திரன் விண்ணுலகம் மீண்டான். திருமால் மாவலிக்கு பாதாள உலகை அளித்து தன் பாதுகாப்பையும் அளித்தார். மரணமில்லா வாழ்வு வழங்கி வரும் யுகம் ஒன்றில் அவனுக்கு இந்திர பதவியும் வாக்களித்தார்.

சிற்ப அமைதி

உலகளந்தப் பெருமாள் தரையில் ஊன்றிய ஒரு காலால் பண்ணுலகையும் ஒரு காலை உயர்த்தி விண்ணையும் அளக்கிறார். நான்கு கைகள். பின் கைகளில் ஆழி சங்கு.

சிற்பங்கள்

௩-1 - தன் வலது காலை சற்று மடித்து நிலத்தில் ஊன்றி இடது காலைத் தூக்கி உள்ளார். இடது முன் கையும் கூடவே நீண்டு கால் கட்டை விரலைப் பிடித்து உள்ளது. வலது முன் கையில் காத்தல் குறி. 

௩-1-உலகளந்தப் பெருமாள்.
திருமணமண்டபம் டதூண் தெ4கி2

௩-2 - வலது காஉள்ளடக்கம்ல் உயர்ந்துள்ளது. மாறுதலாக மூன்றாம் கால் ஒன்று மாவலியின் தலை மேல் பதிந்து உள்ளது. மாவலி கீழே அமர்ந்துள்ளான். தலையாலும் இடது கையாலும் திருமால் பாதம் தாங்குகிறான்.

௩-2-உலகளந்தப் பெருமாள் 3 கால் தூக்கிய வலக்கால்.
36கால் மண்டபம் தூண் வ5கி3



Comments