பிள்ளையார்

பிள்ளையார்


1. அழகமர்வில் 4 கை பிள்ளையார்
  • ஒரு காலை மடக்கி பீடத்தின் மீது கிடத்தி வைத்து, மற்ற காலை மடக்கி பீடத்தின் மீது நிறுத்தி வைத்து அமர்ந்திருக்கும் கோலமான அழகமர்வு பிள்ளையாருக்கே உரியது. 
  • தேனடை மகுடம். 
  • யானைத் தலை. அதில் வலது தந்தம் உடைந்துள்ளது. 
  • பருத்த உடல். பெரு வயிறு. ஐந்து கைகள். ஒன்று தும்பிக்கை. பின் இரண்டு கைகளில் அங்குசம், பாசம். முன் வலது கையில் உடைந்த தந்தம். இவை மூன்றையும் நண்டுப் பிடியில் பிடித்துள்ளார். முன் இடது கையில் மோதகம். அதன் மீது துதிக்கையின் நுனி. 
  • மற்ற அணிகளுடன் பாம்பை வயிற்றைச் சுற்றிக் கட்டியுள்ளார். இது பிள்ளையாருக்கே உரியது.
1க - அழகமர்வில் பிள்ளையார். தூண் சிற்பம்

1௧.அழகமர்வில் 4கை பிள்ளையார் - தூண் சிற்பம்
பொன்மலைநாதர் பெரு மண்டபம், வடமேற்குத் தூண், கிழக்கு மேல் சதுரம்

1௨ - ஒரு அழகிய விமான அமைப்பின் கருவறையில் அழகமர்வில் பிள்ளையார்

1௨. கோயில் விமான அமைப்பில் அழகமர்வில் 4 கை பிள்ளையார்.
திருமண மண்டபம் மேடை முகப்பு கிழக்குப் பக்கம்

2. நேரமர்வு நான்கு கை பிள்ளையார்

2௧ - நான்கு கைப் பிள்ளையார் வலது காலை பீடத்தில் இருந்து தொங்கவிட்டு நேரமர்வில் அமர்ந்திருப்பது.

2௧. நேரமர்வில் 4 கை பிள்ளையார்.
உள்திருச்சுற்றின்  முக மண்டபம். தூண் கி1 தெ2

2௨ - தன் வாகனமான மூஞ்சூறின் மீது கால் வைத்து நேரமர்வில் அமர்ந்திருக்கும் நான்கு கை பிள்ளையார்.

2௨. மூஞ்சூறு மேல் கால் வைத்து நேரமர்வில் பிள்ளையார்,
திருமண மண்டபம் தூண் தெ3 மே1

3. மகா பிள்ளையார்
  • இடக்கையில் மலர் ஏந்திய தேவியை இடது தொடையில் இருத்திய 10 கை வடிவம். 
  • துதிக்கை இடம்புரியாக வளைந்துள்ளது. 
  • ஐந்து வலக் கைகளில் கீழிருந்து மேலாக தந்தம், மாதுளம்பழம், நீலோற்பலம், நெற்கதிர், சக்கரம். இடக்கரங்கள் நான்கில் மேலிருந்து கீழாக பாசம், தாமரை, கரும்புவில், கதை. ஒரு இடக்கை தேவியின் இடையை அணைத்துள்ளது. 
  • மூன்று கண்கள், முடியில் பிறை நிலா, துதிக்கையில் இரத்தினக் கலசம், சிவந்த நிறம் உடையவராக வர்ணிக்கப் படுகிறார்.

3௧. அழகமர்வில் உள்ள மகா பிள்ளையார்.

3௧.
அழகமர்வில் மகா பிள்ளையார்.
மதில் பிள்ளையார் சன்னிதி - வடக்குத் தூண், மேற்குப் பக்க கீழ்ச் சதுரம்.



3௨. நேரமர்வில் உள்ள மகா பிள்ளையார்.

3௨. மகா பிள்ளையார் நேரமர்வு.
திருமண மண்டபம் தூண் தெ3 மே1


4. வீர பிள்ளையார்

கைகளில் வெவ்வேறு ஆயுதங்களோடு அமர்ந்துள்ள 16 கை பிள்ளையார்.

4. வீர பிள்ளையார்.
உள் கோபுரம் உள் வாயில் தெற்கு முகப்பு.

5. திருமகள் பிள்ளையார்

இரு தேவியரை தன் இரு மடிகளில் அமர்த்தி அணைத்துள்ள எட்டுக் கை பிள்ளையார். மேற்கண்ட வீர பிள்ளையாருக்கு மேல் அமர்ந்துள்ளார். இரு தேவியரை சித்தி புத்தி எனக் கொள்ளலாம்.

5. திருமகள் பிள்ளையார்.
உள் கோபுரம் உள் வாயில் தெற்கு முகப்பு.

6. மூஞ்சூறு மேல் பயணிக்கும் பிள்ளையார்.

6. மூஞ்சூறு மேல் அமர்ந்த பிள்ளையார்.
திருமண மண்டபம் தூண் தெ6 மே1

மூஞ்சூறு மேல் நேரமர்வில் பயணம் செய்யும் நான்கு கை பிள்ளையார்.

7. உச்சிஷ்ட பிள்ளையார்
  • இது ஒரு தாந்திரீகப் படிமம். 
  • அழகமர்வில் பிள்ளையார். 
  • நான்கு கைகள். வல முன் கையில் உடைந்த தந்தம், வல பின் கையில் அங்குசம், இடப் பின் கையில் பாசம். இடமுன் கை பிள்ளையாரின் இடது தொடை மேல் அமர்ந்துள்ள தேவியை அணைத்துள்ளது. 
  • தேவியின் இடது கையில் மலர். 
  • பிள்ளையாரின் தும்பிக்கை தேவியின் யோனியில் படிந்திருக்க, தேவியின் வலது கை பிள்ளையாரின் விறைத்த குறியைப் பிடித்திருக்கிறது.
7. உச்சிஷ்ட பிள்ளையார். மதில் விநாயகர் வடக்குத் தூண்.


8. நின்ற நிலைப் பிள்ளையார்

நேர் நின்ற நிலை. நான்கு கைகள். அவையும் துதிக்கையும் அழகமர்வில் உள்ள பிள்ளையாரைப் போன்றவை.

8. நின்ற நிலைப் பிள்ளையார்.
36 கால் மண்டபம் தூண் வ5 கி3 மேற்கு கீழ்ச் சதுரம்

9. நடனமாடும் பிள்ளையார் - நான்கு கை

அழகமர்வில் அமர்ந்த 4 கை பிள்ளையாரைப் போன்ற தோற்றம். வலது முன் கையில் உடைந்த தந்தம், இடது முன் கையில் மோதகம், அதில் படிந்திருக்கும் துதிக்கை நுனி. ஒரு கையும் இரு கால்களும் நடன நிலையில் உள்ளன. அவற்றில் கீழ்கண்ட வேறுபாடுகள் உள்ளன.

கால் நிலை

9௧. இடது காலை உயர்த்திய நிலை

பெரும்பாலும் வலது கால் மடிந்து தரையில் ஊன்றி இருக்க இடது கால் இன்னும் மடிந்து விரல்கள் மட்டும் தரையில் ஊன்றி குதிகால் தூக்கிய நிலையில் உள்ளது.

9௧. 4 கை நடன பிள்ளையார்.
இடது காலை உயர்த்திய நிலை. திருமண மண்டபம் தூண் தெ5 கி1 மேற்கு கீழ்ச் சதுரம்.

9௨. வலது காலை உயர்த்திய நிலை

அரிதாக இடது கால் தரையில் ஊன்றி இருக்க வலது குதிகால் தூக்கிய நிலையில் உள்ளது.

9௨. வலக்காலை உயர்த்திய 4 கை நடன பிள்ளையார்.
உள் திருச்சுற்றின் முக மண்டபம் மே1 வ2 கிழக்கு நடுச் சதுரம்.


கை நிலை

௩. இடது கை வீசிய கையாக இருப்பது. 

வலக் கையில் வழக்கமான அங்குசம், வீசிய இடது கையில் கீழே தொங்கும் பாம்பு அல்லது அரிதாக பாசம்.

9௩. 4 கை நடன பிள்ளையார் - வீசிய இடது கையில் பாம்பு.
உள் திருச்சுற்றின் முக மண்டபம் கி1 தெ1 கிழக்கு கீழ்ச் சதுரம்

௪. வலது கை வீசிய கையாக இருப்பது. 

வீசிய வலது கையில் இருந்து தொங்கும் பாம்பு. இடது கையில் வழக்கமான பாசம்.

9௪. 4 கை நடன பிள்ளையார் - வீசிய வலது கையில் பாம்பு.
இராஜகோபுரம் வடமேற்கு நிலைத் தூண்.

10. நடனமாடும் பிள்ளையார் - ஆறு கை

10௧ - முன் பின் உள்ள நான்கு கைகளுக்கு கூடுதலாக நடுக்கைகள் இரண்டு. இவற்றில் மழு பாசம்.

10௧. 6 கை நடன பிள்ளையார்.
இராஜகோபுர உபபீடம் கிழக்குச் சுவர்.

10௨ - ஆறு கை நடனப் பிள்ளையாரின் முகம் வலது பக்கம் திரும்பி துதிக்கை இடம்புரியாக உள்ளது. கூடுதல் இரு கைகளில் ஆயுதம் இல்லை. வலது நடுக் கை தொங்க இடது நடுக் கையில் நண்டுப் பிடிக் குறி.

10௨. 6 கை நடன பிள்ளையார் - வலப் பக்கம் திருப்பிய முகம், இடம்புரி தும்பிக்கை.
36 கால் மண்டபம் தூண் வ2 கி1 வட நடுச் சதுரம்


உள்ளடக்கம்

Comments