திருமால் அவதாரங்கள் - ௬. கண்ணன்
பல தூண்களில் கண்ணன் குழந்தையாக சிறுவனாக நிகழ்த்திய பல திருவிளையாடல்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒரே நிகழ்வு வெவ்வேறு தூண்களில் வெவ்வேறு விதமாக சித்தரிக்கப்பட்டுள்ளது சிறப்பு. குழந்தை கண்ணனின் முடி அலங்காரம் சடைமண்டலம் சடை பாரம் கொண்டை என வேறுபடுகிறது.
௬-1. குழலாயன்
சிற்ப அமைதி
புல்லாங்குழல் ஊதும் கண்ணன். நான்கு கைகள். பின் கைகளில் ஆழி சங்கு. முன் இரு கைகளில் புல்லாங்குழலை வலது பக்கமாக அல்லது இடது பக்கமாகப் பிடித்து இசைக்கிறார். ஒரு கால் குறுக்குக் காலாக அமைந்து குறுக்கு நிற்கையில் இருக்கிறார். குறுக்குக் கால் பொதுவாக புல்லாங்குழல் இருக்கும் பக்கம் உள்ளது. அரிதாக பக்கம் மாறி உள்ளது. சில சிற்பங்களில் குழலிசையில் மயங்கி நிற்கும் பசுக்களும் உண்டு.
சிற்பங்கள்
௬-1-அ - குழலாயன். இடப்பக்கக் குழல், குறுக்குக் கால். இரு பசுக்கள்.
![]() |
௭-1-அ-குழலாயன் இடப்பக்க குழல். 16கால் மண்டபம் தூண் மே1வ2 |
௬-1-ஆ - குழலாயன். வலப் பக்கக் குழல், குறுக்குக் கால்.
![]() |
௭-1-ஆ-குழலாயன் வலக்குழல் குறுக்குக் கால். 36கால் மண்டபம் தூண் வ2கி5 |
௬-1-இ - குழலாயன். வலப்பக்கக் குழல், இடப்பக்கக் குறுக்குக் கால்.
![]() |
௭-1-இ-குழலாயன் வலக்குழல் இட குறுக்கு கால். 16கால் மண்டபம் தூண் மே1வ3 |
௬-1-ஈ - எட்டுக் கை குழலாயன் சிற்பம் ஒன்று திருமண மண்டபத் தூண் தெ2கி3 இல் காணப்படுகிறது.
(படம்)
௬-2. வரையெடுத்தோன்
தொன்மம்
கண்ணன் ஆயர்கள் இந்திரனுக்கு அளித்து வந்த வழிபாட்டை நிறுத்தி கோவர்த்தன மலையை வழிபடச் செய்தான். கோபம் அடைந்த இந்திரன் ஆயர்பாடியை அழிக்க ஊழிக்காலம் போல் மழை பொழிவித்தான். கண்ணன் கோவர்தன மலையை தூக்கிப் பிடிக்க அதன் கீழ் ஆயர்கள் தங்கள் பசுக்கள் உடைமைகளோடு தங்கினர். ஏழு நாட்களுக்குப் பிறகும் ஆயர்கள் இடையூறின்றி கோவர்த்தன மலையின் கீழ் இருப்பதைக் கண்ட இந்திரன் கண்ணன் யார் என உணர்ந்து மழையை நிறுத்திச் சென்றுவிட்டான்.
சிற்ப அமைதி
நான்கு கைகள். பின் கைகளில் ஆழி சங்கு. முன் வலது கையால் மலையைத் தூக்கிப் பிடித்து உள்ளான். முன் இடது கை இடது தொடை மீது உள்ளது.
சிற்பங்கள்
௬-2-அ - வரையெடுத்தோன்.
![]() |
௭-2-அ-வரையெடுத்தோன். 36கால் மண்டபம் தூண் வ1கி3 |
௬-2-ஆ - வரையெடுத்தோன். இரு பக்கமும் பசுக்கள்.
![]() |
௭-2-ஆ-வரையெடுத்தோன் பசுக்கள். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ8கி3 |
௬-2-இ - வரையெடுத்தோன். இரு பக்கமும் பசுக்கள். இடது கால் குறுக்குக் காலாக உள்ளது.
![]() |
௭-2-இ-வரையெடுத்தோன். குறுக்குக் கால். 3 பசு. உள் திருச்ச்சுற்றின் முக மண்டபம் தூண் கி1வ2 |
௬-3. தவழும் குழந்தை கண்ணன்
சிற்பம்
௬-3 - தவழும் குழந்தை கண்ணன்.
![]() |
௭-3-தவழும் குழந்தை கண்ணன். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ1 |
௬-4. தாமஉதரன்
தொன்மம்
கண்ணனின் குறும்புகளைப் பற்றி பல புகார்கள் யசோதையிடம் வந்தன. சலிப்புற்ற யசோதை ஒரு நாள் கண்ணனை உரலில் கட்டிப் போட்டாள். கண்ணன் உரலுடன் தவழ்ந்து செல்லத் தொடங்கினான். இரு மருத மரங்களுக்கு இடையில் அவன் தவழ்ந்து சென்றபோது உரல் மரங்களுக்கு இடையில் மாட்டிக்கொள்ள மரங்கள் முறிந்து விழுந்தன. நாரதர் தீச்சொல்லால் மரங்களாக இருந்த மணிக்கிரீவன், நளகூபரன் என்னும் குபேரனுடைய மகன்கள் சாப விடுதலை பெற்று தன்னுருவம் பெற்றனர்.
சிற்பங்கள்
௬-4-அ - கண்ணனைக் கண்டிக்கும் யசோதை
![]() |
௭-4-அ-குறும்பு கண்ணனைக் கடியும் யசோதை. திருமண மண்டபம் தூண் தெ4கி1 |
௬-4-ஆ - கண்ணனைக் கட்டிப்போட கயிற்றுடன் வரும் யசோதை.
![]() |
௭-4-ஆ-கண்ணனை கட்டிப் போட கயிற்றுடன் யசோதை-பொன்மலைநாதர் பெருமண்டபம் வமே தூண் |
௭-4-இ, ஈ - உரல் மரத்தில் மாட்டிக்கொள்ள தவழ்ந்து செல்லும் கண்ணன். கண்ணன் வயிற்றில் கட்டிய கயிறு தெரிகிறது.
![]() |
௭-4-இ-தவழும் கண்ணன் மரம் உரல். பொன்மலைநாதர் பெருமண்டப்ம் வமே தூண் |
![]() |
௭-4-ஈ-தவழும் கண்ணன் மரம் உரல். திருமண மண்டபம் மேடைத் தூண் தெ2கி1 |
௬-4-உ - உரல் மரத்தில் மாட்டிக்கொள்ள வயிற்றில் கட்டிய கயிற்றுடன் அமர்ந்திருக்கும் கண்ணன்.
![]() |
௭-4-ஈ-தவழும் கண்ணன் மரம் உரல். திருமண மண்டபம் மேடைத் தூண் தெ2கி1 |
௬-5. வெண்ணெய் கண்ணன்
சிற்பங்கள்
௬-5-அ - வெண்ணெய்க்காக தாய் தந்தையிட அடம் பிடிக்கும் கண்ணன்.
![]() |
௭-5-அ-வெண்ணெய்க்காக தாய் தந்தையிடம் அடம் பிடிக்கும் கண்ணன். 36கால் மண்டபம் தூண் வ1கி2 |
௬-5-ஆ - தரையில் அமர்ந்து கலத்தில் இருந்து வெண்ணெய் எடுத்துச் சாப்பிடும் கண்ணன்.
![]() |
௭-5-ஆ-அமர்ந்து சட்டியில் இருந்து வெண்ணெய் உண்ணும் கண்ணன்-திருமண மண்டபம் தூண் தெ4கி1 |
௬-5-இ, ஈ - உறியில் இருந்து வெண்ணெய் திருடி உண்ணும் கண்ணன்.
![]() |
௭-5-இ-உறியில் இருந்து வெண்ணை திருடும் கண்ணன். திருமண மண்டபம் தூண் தெ4கி2 |
![]() |
௭-5-ஈ-உறியில் இருந்து வெண்ணை திருடும் கண்ணன். திருமண மண்டபம் மேடைத் தூண் தெ2கி1 |
௬-5-உ - ஒரு ஆயனும் ஒரு ஆய்ச்சியும் பார்த்திருக்க கையில் வெண்ணெய்க் கலத்துடன் தவழ்ந்து வரும் கண்ணன்.
![]() |
௭-5-உ-ஆயன் ஆய்ச்சி பார்க்க மரத்தடியில் வெண்ணெய் கலத்துடன் தவழ்ந்து வரும் கண்ணன். வெளி 4கால் மண்டபம் |
௬-6. நடனமாடும் கண்ணன்
சிற்பங்கள்
௬-6-அ, ஆ, இ - இரு கை கண்ணன் நடனங்கள்
![]() |
௭-6-அ-நடனமாடும் கண்ணன். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் கி2தெ1 |
![]() |
௭-6-ஆ-கண்ணன் நடனம். திருமண மண்டபம் தூண் தெ3கி3 |
![]() |
௭-6-இ-நடனமாடும் கண்ணன். பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ3கி1 |
௬-6-ஈ - நான்கு கை கண்ணன் நடனம்.
![]() |
௭-6-ஈ-நாட்டியம் ஆடும் 4கை கண்ணன். 16கால் மண்டபம் |
௬-7. காளிங்கக் கூத்து
தொன்மம்
கண்ணன் வசித்த ஆயர்பாடிக்கு அருகில் யமுனை நதியில் ஒரு மடு இருந்தது. ஒரு முனிவரின் தீச்சொல்லால் அது கருடனுக்கு விலக்கப் பட்டிருந்தது, கருடனிடம் இருந்து தப்பிக்க காளிங்கன் என்ற பெரும் பல தலைப் பாம்பு அந்த மடுவுக்கு குடுமபத்துடன் வந்து வாழத் தொடங்கியது. அவர்களின் நஞ்சாலும் மூச்சுக் காற்றாலும் நதி நீரும் காற்றும் நஞ்சாகி ஆயர்களும் பசுக்கள் பறவைகள் மீன்கள் முதலிய உயிரினங்களும் தாவரங்களும் பாதிப்படைந்தன. சிறுவன் கண்ணன் காளிங்கனின் தலைமீது ஏறிக் கூத்தாடினான். அது தாங்காத காளிங்கனும் அவன் மனைவியரும் வேண்ட கண்ணன் அவர்களை கடலில் உள்ள ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி விட்டான்.
சிற்ப அமைதி
இங்கு காளிங்கனுக்கு ஒரு தலை மட்டுமே. கண்ணன் அதன் தலை மீதோ உடல் மீதோ இரண்டின் மீதோ காலை வைத்து ஒரு கையால் வாலைப் பற்றி கூத்தாடுகிறான். ஒவ்வொரு சிற்பமும் கண்ணன் தலை அலங்காரம், கால் நிலை, கை அமைதி ஆகியவற்றால் வேறுபட்டுள்ளது.
சிற்பங்கள்
௬-7-அ முதல் ஊ வரை - கண்னன் இடது கையால் வாலைப் பற்றிக் கூத்தாடுவது.
![]() |
௭-7-அ-காளிங்கக் கூத்து. திருமண மண்டபம் தூண் தெ4கி2 |
![]() |
௭-7-ஆ-காளிங்கக் கூத்து. திருமண மண்டபம் தூண் தெ5கி4 |
![]() |
௭-7-இ-காளிங்கக் கூத்து. திருமண மண்டப மேடைத் தூண் தெ2கி1 |
![]() |
௭-7-ஈ-காளிங்க கூத்து. பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ6கி2 |
![]() |
௭-7-உ-காளிங்க கூத்து. பொன்மலைநாதர் பெருமண்டபம் வமே தூண் |
![]() |
௭-7-ஊ-காளிங்கக் கூத்து. இராஜகோபுர உபபீட வகி சுவர் |
௬-7-எ - வலது கையால் வாலைப் பற்றிக் கூத்தாடுவது.
![]() |
௭-7-எ-காளிங்கக் கூத்து வலக்கை வால் இடக்கால் தலை. 16கால் மண்டபம் தூண் மே1வ4 |
௬-8. கோபியர் ஆடை திருடிய கண்ணன்
தொன்மம்
கோபியர் ஆடைகளைக் கரையில் வைத்துவிட்டு யமுனை நதியில் குளித்துக் கொண்டிருந்தனர். கண்ணன் அவர்களுடைய ஆடைகளை எடுத்துக் கொண்டு நதி ஓர மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். குளித்து முடித்து வெளிவந்த கோபியர் கண்ணனிடம் கைக்கூப்பி வேண்ட ஆடைகளைத் திருப்பித் தந்தான்.
சிற்பம்
௬-8 - கண்ணன் ஆடைகளோடு மரத்தின் மீது உட்கார்ந்து இருக்கிறான்.
![]() |
௭-8-அ-கோபியர் ஆடை கவரும் கண்ணன். திருமண மண்டபம் தூண் தெ4கி2 |
௬-9. புள்ளின் வாய் கீண்டான்
தொன்மம்
கண்ணனின் மாமனும் வட மதுரை மன்னனும் ஆன கம்சன் தனக்கு எமனாகப் பிறந்திருக்கும் கண்ணனைக் கொல்ல பல அசுரர்களை வெவ்வேறு வடிவில் ஏவினான். அவர்கள் அனைவரையும் கண்ணன் கொன்றுவிட்டான். அவ்வாறு பெரும் கொக்கின் வடிவில் வந்து கண்ணனை விழுங்க முயன்ற பகாசுரனின் அலகுகளைப் பிளந்து கண்ணன் கொன்றான். (புள்ளின் வாய் கீண்டான் - திருப்பாவை 13)
சிற்பங்கள்
௬-9-அ - பகாசுர வதம். கண்ணனுக்கு சடைப் பார முடி அலங்காரம்.
![]() |
௭-9-அ-பகாசுரனை கண்ணன் கொல்லுதல். திருமண மண்டபம் தூண் தெ4கி2 |
௬-9-ஆ - பகாசுர வதம். கண்ணனுக்கு சடை மண்டல முடி அலங்காரம்.
![]() |
௭-9-ஆ-பகாசுரனை கண்ணன்கொல்வது. பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ1கி3 |
௬-10. வல் ஆனைக் கொன்றான்
தொன்மம்
பலமுறை பல வழிகளிலும் கண்ணனைக் கொல்ல முயன்று தோல்வி அடைந்த கம்சன் இறுதியாக ஒரு மற்போரை ஏற்பாடு செய்தான். அதற்கு கண்ணனையும் அவன் அண்ணன் பலராமனையும் அழைத்தான். போட்டிக்குச் செல்லும் வழியில் அவர்களை குவாலயாபீடம் என்னும் பெயருடைய யானையைக் கொண்டு தாக்கச் செய்தான். கண்ணன் குவாலயாபீடத்தைக் கொன்றான். (வல் ஆனைக் கொன்றான் - திருப்பாவை 15)
சிற்பங்கள்
௬-10-அ - இரு கை கண்ணன் குவாலயபீடம் யானையைக் கொல்லுதல்.
![]() |
௭-10-அ-இரு கை கண்ணன் குவாலயபீடம் யானையைக் கொல்வது. உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் கி2தெ1 |
௬-10-ஆ, இ - நான்கு கை கண்ணன் குவாலயபீடம் யானையைக் கொல்லுதல். இரு காட்சிகள்.
![]() |
௭-10-ஆ-4கை கண்ணன் குவாலயபீடம் யானையைக் கொல்வது- பொன்மலைநாதர் பெருமண்டபம் வகி தூண் |
![]() |
௭-10-இ-4கை கண்ணன் குவாலயபீடம் யானையைக் கொல்வது- திருமண மண்டபம் தூண் தெ5கி3 |
௬-11. மற்றவை
௬-11-அ - முன் இரு கைகளால் சங்கு ஊதும் கண்ணன். கால் அருகில் இரு பசுக்கள்.
![]() |
௭-11-அ-சங்கு ஊதும் நின்ற கண்ணன். காலருகில் இரு மாடுகள். 36கால் மண்டபம் தூண் வ5கி2 |
Comments
Post a Comment