திருமால் - ௨. அமர்ந்த நிலை, ௩. கிடந்த நிலை, ௪. திரு நாராயணர்
௨. அமர்ந்த நிலை திருமால்
சிற்பங்கள்
௨-1 - நேரமர்வில் திருமால். பின் கைகளில் ஆழி சங்கு. முன் கைகளில் காத்தல் வழங்கல்.
௨-2 - நேரமர்வில் திருமால். முன் இடது கையில் வழங்கல் குறி இல்லாமல் தொடை மீது உள்ளது.
![]() |
௨-2-நேரமர்வில் திருமால் இட முன் கை தொடையில். உள் திருச்சுற்றின் முக் மண்டபம் தூண் கி2வ1 |
![]() |
௨-3-நேரமர்வில் திருமால் இடக்கால் தொங்க நாற்காலி மீது. பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் |
![]() |
௨-4-திருவாசியின் உள் நேரரமர்வு திருமால். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ5கி3 |
![]() |
௨-5-நேரமர்வில் திருமால் ஆழி சங்கு கை மாறி. 36கால் மண்டபம் தூண் வ1கி1 |
![]() |
௨-6-மண்டல அமர்வில் திருமால். 36கால் மண்டபம் தூண் தெ5கி3 |
![]() |
௨-7-மண்டல அமர்வில் திருமால். திருமண் மண்டபம் மேடைத் தூண் தெ1கி3 |
௩. கிடந்த நிலை திருமால்
சிற்பங்கள்
௩-1 - ஆதிசேடன் தன் உடலைச் சுருட்டி அமைத்த படுக்கை மீது வலப்பக்கம் ஒருக்களித்து ஆயுதங்கள் இன்றி படுத்திருக்கிறார் இரு கை திருமால். வலது கை தலையின் கீழும் இடது கை உடலின் மீதும் உள்ளன. ஆதிசேடனின் ஐந்து தலைப் படம் தலைப் பக்கம். உடல் பக்கத்தில் திருமகளும் நிலமகளும் அமர்ந்துள்ளனர்.
௩-2 - போதிகைச் சிற்பம். ஆதிசேடனின் சுருண்ட உடலும் படமும் வேறு விதமாகக் காட்டப்பட்டுள்ளன. நிலமகள் இல்லை.
![]() |
௩-1-திருமால் பாம்பணை மேல் பள்ளி உடன் திருமகள் நிலமகள். திருமண மண்டபம் தூண் தெ1கி2 |
![]() |
௩-2-திருமால் பாம்பணை மேல் பள்ளி. உடன் திருமகள்.. 36கால் மண்டப போதிகை தூண் வ5கி5 |
௪. திருநாராயணர்
சிற்ப அமைதி
திருமால் நேரமர்வில் அமர்ந்து திருமகளை மடியில் இருத்திய வடிவம். நான்கு கைகள். பின் இரு கைகளில் ஆழி சங்கு. முன் இடது கை திருமகளை அணைத்து இருக்க முன் வலது கையில் காத்தல் குறி.
சிற்பம்
௪ - திருநாராயணர்.
![]() |
௪-திரு நாராயணர். திருமண மண்டபம் தூண் தெ4கி3 |
திருமாலுடன் நிற்கும் திருமகள் நிலமகள். உடன் நிற்கும் தேவி வடிவங்கள்.
தேவி இன் கீழ் காண்க.
Comments
Post a Comment