நாயன்மார்கள் - ௪. சிறுத்தொண்டர்
௪. சிறுத்தொண்டர்
தொன்மம்
பரஞ்சோதி என்ற இயற்பெயருடைய சிறுத்தொண்டர் சோழநாட்டுச் செங்காட்டாங்குடியில் பிறந்தவர். கல்வியிலும் போர்த் தொழிலிலும் சிறந்து பல்லவ மன்னன் நரசிம்ம பல்லவனின் படைத் தளபதி ஆனார். சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை வென்று வாதாபி கொண்டார். ஆயினும் அவர் மனம் சிவத்தொண்டில் ஒன்றியிருப்பதை அறிந்த அரசன், அவரை அரசுப் பணியில் இருந்து விடுவித்தான். ஊர் திரும்பிய பரஞ்சோதி திருவெண்காட்டு நங்கையை மணந்து சீராளன் என்னும் மகனைப் பெற்றார். தன் மனைவியுடன் சிவனடியார்களுக்கு தொண்டு புரிந்து 'சிறுத்தொண்டர்' எனப் பெயர் பெற்றார்.
சிறுத்தொண்டருடன் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல் பெரியநாயகி கோயில் தூண்களில் உள்ள கதைகளுக்குள் சிறப்பிடம் பெற்றுள்ளது. தேர்முட்டி கிழக்கு முகமண்டப வடக்குத் தூண், உள் திருச்சுற்றின் முக மண்டபத் தூண்கள் கி2வ2, மே1வ3-4, மே1வ5 ஆகிய தூண்களில் இந்தக் கதை நான்கு முறை சொல்லப்பட்டுள்ளது.
சிற்பக் கதை தொடர்
௪-1 - சிறுத்தொண்டரின் மனைவி திருவெண்காட்டு நங்கை சீராளனைத் தொட்டிலில் இட்டு ஆட்டுவது.
![]() |
௪-01-சீராளனை தொட்டிலில் இட்டு ஆட்டுதல். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ4 |
௪-2 - திருவெண்காட்டு நங்கை சீராளனுக்கு முலைப்பால் கொடுப்பது.
![]() |
௪-02-சீராளனுக்கு முலைப்பால் ஊட்டுதல். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ4 |
௪-3 - அன்னையர் குழந்தைகளுடன்.
![]() |
௪-03-அன்னைகளுடன் குழந்தைகள். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ3 |
௪-4 - ‘தொண்டர்க்குச் சோறளிக்கும் சிறுத்தொண்டர் இவ்வீட்டில் உள்ளாரோ?’ என்று வினவி நிற்கும் பைரவ முனிவராக வந்த சிவன். வலது கையில் உடுக்கை, இடது கையில் சூலம், இடது தோளில் மாட்டிய யோகதண்டம். சடை மண்டலம். திருவெண்காட்டு நங்கை தலைக்கு மேல் கைக்கூப்பி வணங்கி நிற்கிறார்.
![]() |
௪-04-சிறுத்தொண்டரைத் தேடி பைரவ முனிவர். -உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ5 |
௪-5 - திருவெண்காட்டு நங்கை சிறுத்தொண்டரிடம் பைரவ முனிவர் பற்றிக் கூறுவது.
![]() |
௪-05-திருவெண்காட்டு நங்கை சிறுத்தொண்டரிடம் பைரவ முனிவர் பற்றிக் கூறுதல். உள் திருச்சுற்றின் முக மண்டப்ம் தூண் மே1வ4 |
௪-6 - பைரவ முனிவர் திருசெங்காட்டாங்குடி பிள்ளையார் கோயில் ஆத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருப்பது. அரை யோக அமர்வு. அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் சூலம்.
![]() |
௪-06-பைரவ முனிவர் பிள்ளையார் கோயில் ஆத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருத்தல். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் கி2வ2 |
௪-7 - சிறுத்தொண்டர் பிள்ளையாரை வணங்குவது
![]() |
௪-07-திருச்செங்காட்டங்குடி கணபதீச்சுரம். வணங்கி நிற்கும் சிறுத்தொண்டர். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ5 |
௪-8 - சிறுத்தொண்டர் பைரவ முனிவரை வணங்குவது.
௪-9 - சிறுத்தொண்டர் பைரவ முனிவரை தன் வீட்டிற்கு அமுது உண்ண அழைத்தல். ஒரு குடிக்கு ஒரு மகனாயும் ஐந்து வயதுடையவனாயும் உறுப்பில் ஊனமற்றனாயும் உள்ள பிள்ளையைத் தாய்பிடிக்க தந்தை மகிழ்ச்சியுடன் அரிந்து கறி சமைத்தால் தாம் திருவமுது செய்வதாக பைரவ முனிவர் கூறுவது. சிறுத்தொண்டர் மகிழ்ச்சியுடன் இணங்குவது.
![]() |
௪-09-சிறுத்தொண்டர் பைரவ முனிவரை உணவுண்ண வீட்டுக்கு அழைத்தல்-உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் கி2வ2 |
௪-10 - சிறுத்தொண்டர் பைரவ முனிவரைத் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வது.
![]() |
௪-10-சிறுத்தொண்டர் பைரவ முனிவரை வீட்டுக்கு அழைத்து வருதல்-தேர் கிழக்கு மண்டபம் வடக்குத் தூண் |
௪-11 - வீட்டிற்கு வந்த பைரவா முனிவருக்கு சிறுத்தொண்டரும் திருவெண்காட்டு நங்கையும் பாத வழிபாடு செய்வது.
![]() |
௪-11-பைரவ முனிவருக்கு சிறுத்தொண்டரும் மனைவியும் பாத வழிபாடு. உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ3 |
௪- 12 - பைரவ முனிவர் அமுதுண்ணும் விதத்தை சிறுத்தொண்டர் திருவெண்காட்டு நங்கைக்கு விளக்குவது.
![]() |
௪-12-சிறுத்தொண்டர் மனைவியிடம் பைரவ முனிவர் கூறியதைக் கூறுதல். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் கி2வ2 |
௪-13 - சிறுத்தொண்டர் பள்ளிக்கூடத்திற்குச் சென்று சீராளனை அழைத்துச் செல்ல ஆசிரியரிடம் அனுமதி கேட்பது.
![]() |
௪-13-சிறுத்தொண்டர் சீராளனை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்ல ஆசிரியரிடம் வேண்டுதல். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ4 |
௪-14 - சீராளன் ஆசிரியர் காலில் விழுந்து வணங்கி தந்தையிடம் செல்வது.
![]() |
௪-14-சீராளன் ஆசிரியரை வணங்கி தந்தையிடம் செல்லுதல்-உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ4 |
௪- 15 - சீராளனை தோளில் தூக்கிக்கொண்டு சிறுத்தொண்டர் பள்ளியில் இருந்து நீங்குவது.
![]() |
௪-15-சீராளனைத் தூகிக் கொண்டு சிறுத்தொண்டர் பள்ளியில் இருந்து நீங்குதல்-உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் கி2வ2 |
௪- 16 - சீராளனை வீட்டுக்கு அழைத்து வந்து திருவெண்காட்டு நங்கையிடம் கொடுப்பது.
![]() |
௪-16-சிறுத்தொண்டர் சீராளனுடன் வீட்டிற்கு வருதல். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ4 |
௪-17 - திருவெண்காட்டு நங்கையும் பணிப் பெண் சந்தானத் தாதியும் சீராளனைக் குளிப்பாட்டுவது.
![]() |
௪-17-அன்னையும் தாதியும் சீராளனைக் குளிப்பாட்டுதல்-உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ4 |
௪-18 - திருவெண்காட்டு நங்கை சீராளனை மடியில் இருத்திப் பிடித்திருக்க சிறுத்தொண்டர் அவனை வெட்ட கத்தியை எடுப்பது.
![]() |
௪-18-சீராளனை வெட்ட சிறுத்தொண்டர் கத்தியை எடுத்தல். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ4 |
௪-19 - சிறுத்தொண்டர் சீராளன் கழுத்தை வெட்டுவது.
![]() |
௪-19-சிறுத்தொண்டர் சீராளனை வெட்டுதல். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ4 |
௪-20 - அரிவாள்மணையில் பிள்ளைக் கறி அரிவது.
![]() |
௪-20-பிள்ளை கறி அரிதல். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ4 |
௪-21 - திருவெண்காட்டு நங்கையும் சந்தானத் தாதியும் சமையல் பொருட்களை எடுப்பது.
![]() |
௪-21-சமையல் பானைகளை எடுத்தல்-தேர் கிழக்கு மண்டபம் வடக்குத் தூண் |
௪-22 - பிள்ளைக் கறி சமைப்பது.
![]() |
௪-22-பிள்ளைக் கறி சமைத்தல். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ4 |
௪-23 - பைரவ முனிவருக்கு பிள்ளைக் கறி அமுது படைப்பது. அருகில் சிறுத்தொண்டரும் திருவெண்காட்டு நங்கையும் தலை மேல் கைக் கூப்பி நிற்பது.
![]() |
௪-23-பைரவ முனிவர் உணவுண்ண சிறுத்தொண்டரும் மனைவியும் கைக்கூப்பி நிற்பது. உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ3 |
௪-24 - பைரவ முனிவர் தலைக் கறியும் வேண்டும் என்று கேட்க தலைக் கறி சமைப்பது.
![]() |
௪-24-தலைக் கறி சமைத்தல். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ4 |
௪-25 - தலைக் கறியும் சேர்த்து அமுது படைத்த பின் சிறுத்தொண்டரும் உடன் உண்ண வேண்டும் என்று பைரவ முனிவர் கூற சிறுத்தொண்டரும் உணவு உண்ண அமர்வது.
![]() |
௪-25-பைரவ முனிவர் கூறியபடி சிறுத்தொண்டரும் உண்வுண்ண அமர்தல். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் கி2வ2 |
௪-26 - அப்போது பைரவ அடியார் உங்கள் மகனையும் உடன் உண்ண அழையுங்கள் என்று சொல்ல, திருவெண்காட்டு நங்கையும் சந்தானத் தாதியும் 'செய்மணியே! சீராளா! வாராய். சிவனடியார் நாம் உய்யும் வகையால் உடனுண்ண அழைக்கின்றார்' என்று ஓலமிட்டழைப்பது.
![]() |
௪-26-திருவெண்காட்டு நங்கையும் தாதியும் சீராளனை அழைத்தல். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ3 |
௪-27 - பள்ளிக்கூடத்தில் இருந்து ஓடிவருபவனைப் போன்று வந்த சீராளனை திருவெண்காட்டு நங்கை தூக்கிக் கொஞ்சுவது.
![]() |
௪-27-மீண்டு வந்த சீராளன அன்னை தூக்கிப்போட்டுக் கொஞ்சுதல். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ3 |
௪-28 - சிறுத்தொண்டரும் குறுக்கில் சீராளனை வைத்துக் கொண்டு திருவெண்காட்டு நங்கையும் அமுது இருக்க பைரவ முனிவரைக் காணாது திகைப்பது.
![]() |
௪-28-சீராளன் மீண்டு வந்த பிறகு அமுது இருக்க முனிவரைக் காணவில்லை. உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ3 |
௪-29 - சிவனும் உமையும் இரு பூதகணங்கள் குடை பிடிக்க விடை மேல் அமர்ந்து காட்சி தருவது.
![]() |
௪-29-சிவன் உமையுடன் விடை மீது காட்சி. உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ3 |
௪-30 - சிறுத்தொண்டர், திருவெண்காட்டு நங்கை, சந்தானத்தாதி, சீராளன் நால்வரும் தலை மேல் கைக் கூப்பி வணங்கி நிற்பது.
![]() |
௪-30-சிறுத்தொண்டர் மனைவி தாதி மகன் சிவனை வணங்குதல். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ3 |
Comments
Post a Comment