ஐயனார்
ஐயனார்
தொன்மம்
ஐயனார் வழிபாடு தென்னகத்துக்கே உரியது. குறிப்பாக கேரளாவில் சாஸ்தா, அய்யப்பன் என்று பொது வழிபாட்டிலும், தமிழகத்தில் ஐயனார் என்று நாட்டார் தெய்வமாகவும் உள்ளார். சங்க காலத்தில் சாத்தன் என்று அறியப்பட்டு இருந்தார். சாத்தன் என்பது புத்தரது பெயர்களுள் ஒன்று என்பதால் பௌத்த மதம் அழிந்த போது அதிலிருந்து சாத்தான் வழிபாடு இந்து மதத்திற்குள் வந்திருக்கலாம். சில புராணங்களிலும் ஆகமங்களிலும் சிவனுக்கும் மோகினியாக உருவமெடுத்த திருமாலுக்கும் பிறந்தவர் ஐயனார் என்ற தொன்மம் உள்ளது. இரு மனைவியர் உண்டு - பூரணி, புஷ்கலை.
சிற்ப அமைதி
ஐயனார் தூண் சிற்பங்களாகவும் ஏழு கன்னியர் தொகுதியில் அவர்களுக்குக் காவலாகவும் காணப்படுகிறார். மண்டல அமர்வு, பேரரச அமர்வு, அரை யோக அமர்வு ஆகிய நிலைகளில் அவரது ஊர்தியான யானை மீதோ பீடத்தின் மீதோ காணப்படுகிறார். இடது கையில் செண்டு என்னும் சாட்டை மடக்கிய நிலையில் இருக்கும். சடை மண்டலம், சடைப் பாரம் முதலிய தலைக் கோலங்கள். நான்கு கைகள் மூன்று கண்கள் உடைய வடிவத்தையும் ஆகமங்கள் விவரிக்கின்றன.
சிற்பங்கள்
யானை மீது அமர்ந்து
01 - யானை மீது மண்டல அமர்வில் ஐயனார். வலது கை செண்டு. சடை மண்டலம்.
![]() |
01-ஐயனார் யானை மேல் மண்டல அமர்வு. பெருமண்டபம் வகி தூண் |
02 - யானை மீது அரை யோக அமர்வில் ஐயனார். மண்டல அமர்வில் இடது காலை யோக பட்டத்தால் உடலோடு சேர்த்துக் கட்டிய நிலை. சடைப் பாரம்.
![]() |
02-யானை மீது ஐயனார் அரை யோக அமர்வு. வெளித் திருச்சுற்று பிள்ளையார் வடக்குத் தூண் |
03 - யானை மீது மண்டல அமர்வில் ஐயனார். இடது கை செண்டு. சடை மண்டலம்.
![]() |
03-ஐயனார். யானை மீது மண்டல அமர்வில். இடக்கை சாட்டை. திருமண மண்டபம் தூண் தெ3கி2 |
04 - யானை மீது மண்டல அமர்வில் ஐயனார். நான்கு கைகள். முன் வலது கையில் செண்டு. பின் கைகளில் அம்பு வில். சடை மண்டலம்.
![]() |
04-ஐயனார் யானை மேல் 4 கை பின் கை வில் அம்பு மண்டல அமர்வு. 36கால் மண்டபம் வ1கி2 |
பீடம் மீது
05 - பீடம் மீது பேரரச அமர்வில் ஐயனார். வலது கை செண்டு. சடை மண்டலலம்.
![]() |
05-ஐயனார் பேரரச அமர்வில். தேர் மைய மண்டபம் மே1வ2 |
06 - பீடம் மீது பேரரச அமர்வில் யோக பட்டம் அணிந்த அரை யோக அமர்வு.
![]() |
06-ஐயனார் பேரரச அரை யோக அமர்வு. தேர் மைய மண்டபம் கி1வ2 |
07 - மாத்தடியில் பீடம் மீது ஐயனார். மண்டல அமர்வில் யோக பட்டம் அணிந்த அரை யோக அமர்வு. சடை மண்டலம்.
![]() |
07-மரத்தடியில் ஐயனார். மண்டல அரை யோக அமர்வு. இராஜகோபுரம் வகி உபபீடச் சுவர் |
08 - பீடம் மீது மண்டல அமர்வில் நான்கு கை ஐயனார். முன் வலது கையில் செண்டு. பின் கைகளில் அம்பு வில். முகம் சிதைந்துள்ளது.
![]() |
08-மண்டல அமர்வில் 4 கை ஐயனார். வலது முன் கையில் செண்டு. திருமன மண்டபம் தூண் தெ3கி3 |
Comments
Post a Comment