அனுமன்
தொன்மம்
அனுமன் வானரர்கள் கேசரி அஞ்சனைக்கு வாயுவின் கூறாகப் பிறந்தவர். என்றுமுள மாந்தரில் ஒருவர். சுக்கிரீவனின் மந்திரி. இராமனின் சிறந்த பக்தர். சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கவும் இராவணனை வெல்லவும் இராமனுக்குத் துணை நின்றவர். திருமாலின் சிறிய திருவடி.
சிற்பங்கள்
1 - இராமரை வணங்கி நிற்கும் அனுமன். தேவகோட்டத்தின் ஒரு புறம் இராமன். மறுபுறம் அவரை நோக்கி வணங்கி நிற்கும் அனுமன்.
![]() |
1-ராமரை வணங்கும் அனுமன். இராஜகோபுரம் வமே உபபீடச் சுவர் |
2 - அடுத்த பக்கத்தில் உள்ள யோக நரசிங்கத்தை வணங்கி நிற்கும் அனுமன்.
![]() |
௬-2-யோக நரசிங்கத்தை வணங்கும் அனுமன். தேர் மைய மண்டபம் தூண் கி1வ1 |
3 - அடுத்த பக்கத்தில் உள்ள திருமாலை வணங்கி நிற்கும் அனுமன்.
![]() |
3-திருமாலை வனங்கி நிற்கும் அனுமன். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ7கி4 |
4 - திருவாசியின் உள் முன் நோக்கி வணங்கி நிற்கும் அனுமன்.
![]() |
4-வணங்கி நிற்கும் அனுமன். திருவாசி உள். திருமண மண்டபம் மேடைத் தூண் தெ2கி1 |
5 - திருமால் பீடத்தில் அமர்ந்திருக்க கைக்கட்டி நிற்கும் அனுமன்.
![]() |
5--அமர்ந்திருக்கும் திருமால் கைகட்டி நின்றிருக்கும் அனுமன். திருமண மண்டபம் தூண் வ4கி4 |
6 - வலது கையை ஓங்கி இடது கையில் வாலைப் பிடித்தபடி கருட நிற்கையில் அனுமன்.
7 - இடது கையை ஓங்கியபடி வலது கையில் மலரைப் பிடித்து நடந்து செல்லும் அனுமன்.
![]() |
7-இடக்கையை ஓங்கியபடி வலக்கையில் மலர் ஏந்திச் செல்லும் அனுமன். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ1கி3 |
8 - திருவாசியின் உள் வலது கையை ஓங்கியபடி நடந்து செல்லும் அனுமன்.
![]() |
8-வலக்கை ஓங்கிய அனுமன் திருவாசியின் உள் திருச்சுற்றின் முக மண்டபம் தொன் கி1வ4 |
9 - நடனமாடும் அனுமன்.
![]() |
9-நடனமாடும் அனுமன். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ4கி2 |
10 - இடது கையில் வீணையுடன் அனுமன்.
![]() |
10-அனுமன் வீணையுடன். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ1கி2 |
11, 12 - சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டுச் செல்லும் அனுமன்.
![]() |
11-சஞ்சீவி மலையைத் தூக்கி செல்லும் அனுமன். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ9கி3 |
![]() |
12-சஞ்சீவி மலையைத் தூக்கி செல்லும் அனுமன். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் |
Comments
Post a Comment