முருகர்
முருகர்
தொன்மம்
சிவனின் இளைய மகன். சிவனின் ஆறுமுகங்களின் நெற்றிக் கண்களில் இருந்து அனலாக வெளிப்பட்டு சரவணப் பொய்கையில் குழந்தைகளாக மாறி கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு உமை தூக்கி அணைத்து ஒன்றானவர் முருகர். தேவர்களின் படைத் தளபதியாக சூரபதுமனை வென்றவர். இந்திரன் மகள் தேவானையையும் வேடர்குல வள்ளியையும் மணந்தவர்.
சிற்ப அமைதி
- இங்குள்ள சிற்பங்களில் முருகர் மயிலுடன் தான் காணப்படுகிறார். மயிலின் வாயில் இருந்து ஒரு பாம்பு தொங்குகிறது.
- தேனடை மகுடம்.
- வலது பின் கையில் சக்தி ஆயுதம், இடது பின் கையில் இடத்தில் கையில் இரு முனை சூலமான வைர ஆயுதம், முன் கைகளில் காத்தல் வழங்கல் குறிகள்.
௧ - மயில் மீது நேர் அமர்வில் முருகர்
![]() |
௧-மயில் மீது நேரமர்வில் முருகர் உள் திருச்சுற்றின் முகமண்டபம் தூண் தெ1கி1 தெற்கு கீழ்ச் சதுரம் |
௨ - மயில் மீது மண்டல அமர்வில் முருகர்
![]() |
௨-மயில் மீது மண்டல அமர்வில் முருகன் 36கால் மண்டபம் தூண் வ3கி2 |
௩ - மயில் மீது இரு பக்கமும் கால்களை தொங்க விட்டு அமர்ந்திருக்கும் நிலையில் முருகர்.
இடது கை வழங்கல் குறி இல்லாமல் மயிலை செலுத்தும் நிலையில் உள்ளது.
![]() |
௩-மயில் மீது இரு பக்கமும் கால்களைத் தொங்கவிட்டு அமர்ந்துள்ள முருகர். வெளித் திருசுற்று முருகர் சன்னிதி தெற்குத் தூண் |
௪ - நேர் நின்ற நிலையில் முருகர். பின்னால் மயில்.
![]() |
௪-மயில் முன் நிற்கும் முருகர் 36 கால் மண்டபம் தூண் வ5கி3 வட கீழ்ச் சதுரம் |
௫ - வலது பக்கம் வள்ளி இடது பக்கம் தெய்வானையுடன் நின்ற நிலையில் முருகர்.
![]() |
௫-வள்ளி தேவானையுடன் முருகர் பின்னால் மயில் மேலே சாலை விமானம் இராஜகோபுரம் வடக்கு உபபீடம் மேற்கு கர்ணபத்தி |
௬ - இருதள சதுர நாகர விமான அமைப்பில் மயில் மீது நேரமர்வில் முருகர்.
௭ - ஆறுமுகன் 12 கைகளுடன் மயில் மீது நேரமர்வில். (திருமண மண்டபம் தூண் தெ7கி2)
௮ - நின்ற நிலை முருகர் பின்னால் மயில் - இடக்கை இடுப்பில்
![]() |
௮-முருகர் பின்னால் மயில் இடக்கை இடுப்பில் திரும ண மண்டபம் தூண் தெ6கி2 மேற்கு மேல் சதுரம் |
௯ - நின்ற நிலை முருகர் பின்னால் யானை
![]() |
௯--நின்ற முருகர் பின்னால் யானை ஆடவல்லான் மண்டபம் கிழக்குத் தூண் மேற்கு கீழ்ச் சதுரம் |
Comments
Post a Comment