சக்தி 4 - ௫. காளி
௫. காளி
தொன்மம்
கொற்றவையில் இருந்து தோன்றிய தெய்வம் காளி. கொற்றவை இரத்தபீஜன் என்ற அசுரனுடன் போரிட்டாள். ரத்தம் = குருதி, பீஜம் = விதை. அவன் உடலில் இருந்து சிந்திய ஒவ்வொரு துளி குருதியும் நிலம் தொட்டவுடன் ஒரு இரத்தபீஜனாக உருவெடுத்தது. கடும் தவத்தால் சிவனிடம் இருந்து பெற்ற வரம். இவ்வாறு இரத்தபீஜன் பலராகப் பெருகுவதைத் தடுக்க தன் கரிய நிழலிலிருந்து காளியை உருவாக்கினாள் கொற்றவை. இரத்தபீஜர்களின் உடல்களில் இருந்து வழியும் குருதி முழுவதையும் காளி தன் நீண்ட நாக்கால் பிடித்துக் குடித்தாள். கொற்றவை நகல் இரத்தபீஜர்களையும் மூல இரத்தபீஜனையும் தன் ஆயுதங்களால் கொன்று அழித்தாள்.
சிற்ப அமைதி
சுடர்முடி. கோரைப் பற்கள். 4, 6 அல்லது 8 கைகள். பின் கைகளில் உடுக்கை, பாசம். முன் கைகளில் சூலம், கபாலம். மற்ற கைகள் இருப்பின் வேறு ஆயுதங்கள் இவை காளியின் பொது சிற்ப அமைதி,
சிற்பங்கள்
தேவிகாபுரத்தில் கீழ்கண்ட சிற்பங்கள் காணப்படுகின்றன.
௫-1. அமர்ந்த நிலைச் சிற்பங்கள்
௫-1-அ. நேரமர்வு காளி. சுடர்முடி. கோரைப் பற்கள். மார்க் கச்சை. 4 கைகள். பின் கைகளில் உடுக்கை பாசம், முன் கைகளில் சூலம் கபாலம்.
௫-1-ஆ. நேரமர்வு காளி. முன் சிற்பத்தில் தேனடை முடியின் பின்னால் சுடர்முடி அமைந்திருக்க இங்கு தேனடை முடி இல்லாமல் சுடர்முடி உள்ளது. மார்க்கச்சை இல்லை. மூன்று வெட்டுண்ட தலைகள் தாங்கும் முண்ட பீடத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். ஒரு தலை மீது கால் வைத்து இருக்கிறாள்.
௫-1-இ. நேரமர்வு காளி. மேல் இரண்டு சிற்பங்களுக்கு மாறாக வலதுகால் மடிந்து இடது கால் தொங்குகிறது. ஐந்து தலைகள் கொண்ட முண்ட பீடம். தேனடை மகுடம். சுடர்முடி இல்லை. மார்க்கச்சை இல்லை. ஆயுதங்கள் மாறி உள்ளன. பின் கைகளில் சூலம் உடுக்கை, முன்கைகளில் வாள் கபாலம்.
![]() |
௫-1-இ-நேரமர்வு காளி வேறுபட்ட ஆயுதங்கள். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் கி1வ3 |
௫-1-ஈ. மண்டல அமர்வில் காளி. ஆறு கைகள். வலது கைகளில் (கீ-மே) ?, உடுக்கை, சூலம். இடது கைகளில் (மே-கீ) வியப்புக்குறி, மணி, கபாலம்.
![]() |
௫-1-ஈ-மண்டல அமர்வில் 6கை காளி. உள் திருச்சுற்றின் முக மண்டபம் கி1தெ1 |
௫-2-அ - நின்ற நிலையில் 4 கை காளி. சுடர் முடி. பின் கைகளில் உடுக்கை பாசம், முன் கைகளில் சூலம் கபாலம்.
![]() |
௫-2-அ-நின்ற நிலை காளி. திருமண மண்டபம் தூண் வ6கி1 |
௫-2-ஆ - நின்ற நிலை காளி. தேனடை மகுடம். மார்க் கச்சை. கோரைப் பல். நெற்றிக் கண். வலக் கைகளில் உடுக்கை சூலம். இடக் கைகளில் கபாலம் தொங்கல். சில சிற்பங்களில் இட முன் கை தொங்குவதற்குப் பதிலாக தொடையில் வைக்கப்பட்டுள்ளது.
௫-3. சிவக் குழந்தை
தொன்மம்
இரத்தபீஜனுடன் ஆன போர் முடிந்ததும் போர் வெறி தணியாமல் உலகை அழித்துத் திரிந்தாள் காளி. அவள் வெறி தணிக்க வழியில் குழந்தையாகக் கிடந்தார் சிவன். அவரை தூக்கி அணைத்து காளி தன்னிலை மீண்டாள். இந்த சிற்பம் பெரியநாயகி கோயிலின் பல இடங்களில் உள்ளது.
சிற்பங்கள்
௫-3-அ - நான்கு கைகள் சுடர்முடியுடன் நிற்கும் காளி. பின் வலது கையில் உடுக்கை, பின் இடது கையில் கழுத்தின் பின்னால் குறுக்காகக் கிடத்திய சூலம். மடித்த வலது முன் கை சிவக் குழந்தையைத் தாங்குகிறது. தொங்கும் இடது முன் கை ஒரு சிறுவனின் மேல் தூக்கிய இடது கையைப் பிடித்துள்ளது.
![]() |
௫-3-அ-காளி சிவக்குழந்தை 36 கால் மண்டபம் வ1கி4 |
௫-3-ஆ - வலது பக்கத்தில் கூடுதலாக வாள் கேடயம் சடை மண்டலத்துடன் ஒரு படை பெண். முன் இடது கை சிறுவனின் தலைமீது உள்ளது. சூலத்தைச் சுற்றிய பாம்பு.
![]() |
௫-3-ஆ-காளி சிவக் குழந்தை. உடன் படைப் பெண். இராஜகோபுரப் பெருவாயில் வட மேற்குச் சுவர் |
௫-3-இ - இரு கைகள். ஆயுதங்கள் இல்லை. இடது தோளிலிருந்து குறுக்காதத் தொங்கும் உத்தரீயம். அதன் நுனிகள் இரு தோள்களின் மீது இருந்து கைகளின் பக்கத்தில் தொங்குகின்றன.
![]() |
௫-3-இ 2கை காளி சிவக்குழந்தை. 16 கால் மண்டபம் கி1வ2 |
தொன்மம்
தாருகன் என்னும் அசுரன் சிவனிடம் இருந்து பெண்ணால் மட்டுமே மரணம் என்ற வரத்தைப் பெற்றான். அவனால் அல்லல் உற்ற தேவர்கள் சிவனிடம் முறையிட சிவன் தன் கழுத்து நஞ்சில் இருந்து காளியை உருவாக்கினார். அவர் ஆணைப்படி காளி தாருகனுடன் போரிட்டு அவனைக் கொன்றாள். இதை ’தாருகன் பேர் உரம் கிழித்த பெண்’ என்று சிலப்பதிகாரம் குறிக்கிறது. உரம் = மார்பு.
சிற்பங்கள்
௫-4-அ - நான்கு கை காளி. பீடத்தில் அமர்ந்து தாருகனை மடியில் கிடத்தி அவன் தலையையும் காலையும் முன் கைகளால் பிடித்துள்ளாள். பின் கைகளில் உடுக்கை பாசம்.
![]() |
௫-4-அ காளி தாருகனை மடியில் இட்டுப் பிடித்தல். திருமண மண்டபம் தூண் தெ7கி1 |
௫-4-ஆ - ஆறு கை காளி. மேற்கண்ட சிற்பத்தில் உள்ளபடி தாருகனை மடியில் கிடத்தி பிடித்துள்ளாள். முன் இரு கைகளால் அவன் மார்பை பிளக்கிறாள். இரு சிற்பங்களும் நரசிங்கம் இரணியனைக் கொல்லும் காட்சியை ஒத்துள்ளன.
![]() |
௫-4-ஆ-காளி தாருகன் பேருரம் கிழித்தல். திருமண் மண்டபம் தூண் தெ7கி1 |
௫-4-இ - எட்டு கை காளி தாருகனைக் கொல்லுதல். தாருகன் கீழே வீழ்ந்து கிடக்கிறான். உடுக்கை பாசம், சூலம், அம்பு வில், வாள் கேடயம் ஆகிய ஆயுதங்கள் ஏந்தி சுடர்முடி உடனான காளி தாருகனை சூலத்தாலும் வாளாலும் குத்திக் கொல்கிறாள்.
![]() |
௫-4-இ-8கை காளி தாருகனை கொல்லுதல். பொன்மலைநாதர் முக மண்டபம் தூண் தெ1கி3 |
௫-4-ஈ எட்டு கை காளி. அசுரன் தாருகன் மீது இடது காலை வைத்து அமர்ந்த கோலம். முன் வலது கையில் காத்தல் குறி முன் இடது கை உடைந்துள்ளது. வழங்கும் கையாக இருக்க வேண்டும். மற்ற ஆறு பின் கைகளில் சூலம் கபாலம், வியப்புக் குறி, அம்பு வில், வாள் கேடயம்.
![]() |
௫-4-ஈ அமர்ந்த காளி 8கை இடக்காலின் கீழ் தாருகன். திருமண மண்டபம் தூண் தெ1கி2 |
௫-5. காளி நடனம்
சிவனோடு போட்டியிட்டு காளி ஆடிய நடனம்.
தொன்மம்
இரத்தபீஜன் மரணத்திற்கு பின் வெறிகொண்டு அலைந்த காளி திருவாலங்காட்டில் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள். அவளை அடக்க சிவன் அங்கு வந்தார். நடனத்தில் மிக்க வல்லமை உடைய காளி சிவனை நடனப் போட்டிக்கு அழைத்தாள். சிவனுக்கு ஈடு கொடுத்து நீண்ட நேரம் ஆடினாள் காளி. சிவன் காது தோடு ஒன்றை கீழே விழச்செய்து அதை ஒரு காலால் எடுத்து காலை உயர்த்தி காதில் அணிந்தார். அந்த நடனம் உயர்த்திய தாண்டவம் எனவும் அந்த சிவவடிவம் உயர்த்திய தாண்டவர் எனவும் பெயர் பெற்றது. சிவனைப் போல் காலை உயர்த்தி ஆட இயலாத காளி நாணமுற்று வெறி அழிந்தாள்.
காளியின் நடனத்தைச் சித்தரிக்கும் சிற்பங்கள் ஊர்த்துவ தாண்டவர் சிற்பத்தின் பக்கச் சதுரத்திலும் தனித்தும் பல தூண்களில் காணப்படுகின்றன. அவற்றில் பொதுவாக காளி சுடர்முடி, நெற்றிக் கண், கோரைப் பற்கள் அழகிய நடன ஆடைகள் அணிகலன்கள், தனக்குரிய ஆயுதங்கள் ஆகியவற்றோடு காணப்படுகிறாள். இரு கால்களையும் தரையில் அகற்றி ஊன்றி முழங்கால்களை மடக்கிய நடன நிலையில் இருக்கிறாள். பெரும்பாலும் நான்கு கைகள். சில சிற்பங்களில் ஆறு அல்லது எட்டு கைகள். முன் கைகள் கீழே கோர்த்த, உடலில் இரு பக்கமும் தொங்கிய, இடக்கை மட்டும் தொங்கிய அல்லது இரு கைகளும் தொடைகள் மீது வைத்த நிலைகளில் உள்ளன.
சிற்பங்கள்
நான்கு கை காளி நடனம்
௫-5-அ - முன் இரு கைகளை கீழே கோர்த்த நிலை. வலது பின்கையில் கீழ் நோக்கிய சூலம். இடது பின் கையில் கபாலம்.
௫-5-ஆ - முன் இரு கைகளை இடுப்பின் இடது பக்கம் கோர்த்த நிலை. வலது பின் கையில் உடுக்கை, இடது பின் கையில் பாசம்.
![]() |
௫-5-ஆ-4கை காளி நடனம் கோர்த்த கை உடுக்கை பாசம் தேர் தெற்கு மண்டபம் கிழக்குத் தூண் |
௫-5-இ - முன் இடது கை தொங்க முன் வலது கையில் சூலம். பின் கைகளில் உடுக்கை பாசம்.
![]() |
௫-5-இ-4கை காளி நடனம் இடக்கை தொங்கல். 36 கால் மண்டபம் தூண் வ2கி4 |
௫-5-ஈ - மேற்கண்ட சிற்பம் போன்றது. பின் இடக்கையில் பாசத்திற்கு பதிலாக கபாலம்.
![]() |
௫-5-ஈ-4கை காளி நடனம் இடக்கை தொங்கல் திருமண மண்டபம் தூண் தெ1கி2 |
௫-5-உ - முன் இரு கைகளும் உடல் பக்கத்தில் தொங்குகின்றன. தலையும் மேல் உடலும் வலது பக்கம் சாய்ந்து உள்ளன. பின் கைகளில் கீழ் நோக்கி இருக்கும் சூலமும் பாசமும்.
![]() |
௫-5-உ-4கை காளி நடனம் பக்க கை சூலம். பாசம் 36கால் மண்டபம் தூண் வ4கி4 |
௫-5-ஊ - முன் இரு கைகளும் உடல் பக்கத்தில் தொங்க தூக்கிய வலது பின் கையில் கீழ் நோக்கிய சூலம். இடது பின் கையில் வியப்புக் குறி.
![]() |
௫-5-ஊ-4கை காளி நடனம் பக்க கை சூலம் வியப்பு. 36கால் மண்டபம் தூண் வ2கி3 |
௫-5-எ - மேற்கண்ட சிற்பம் போன்றது. தூக்கிய பின் வலது கையில் உடுக்கை, இடது கையில் கபாலம்.
![]() |
௫-5-எ-4கை காளி நடனம் பக்க கை உடுக்கை கபாலம் தேர் தெற்கு மண்டபம் மேற்குத் தூண் |
௫-5-ஏ - முன் இரு கைகளும் தொடைகள் மீது இருக்க தூக்கிய பின் கைகளில் உடுக்கை கபாலம்.
![]() |
௫-5-ஏ-4கை காளி நடனம் தேர் தெற்கு மண்டபம் மேற்குத் தூண் |
௫-5-ஐ - உடல் பக்கத்தில் தொங்கும் இரு முன்கைகளில் வாள் கேடயம். தூக்கிய பின் கைகளில் கீழ் நோக்கிய சூலம், கபாலம். பாவாடை போன்ற நடன ஆடை..
![]() |
௫-5-ஐ-4கை காளி நடனம் பக்க கை வாள் கேடயம் சூலம் வியப்பு. பொன்மலைநாதர் 36கால் மண்டபம்2 |
ஆறு கை காளி நடனம்
௫-5-ஒ - பஞ்சகச்சம் போன்ற நடன ஆடை. ஆறு கைகள். நடுக் கைகளில் உடுக்கை பாசம். பின் கைகளில் கீழ் நோக்கிய சூலம் வியப்புக் குறி.
![]() |
௫-5-ஒ-6கை காளி நடனம் பக்க கை வாள் கேடயம். 36 கால் மண்டபம் தூண் வ2கி3 |
எட்டுக் கை காளி நடனம்
௫-5-ஓ - முன் இரு கைகள் கீழே கோர்த்து உள்ளன. பின் ஆறு கைகளில் உள்ள ஆயுதங்கள் தெளிவாக இல்லை.
![]() |
௫-5-ஓ-8கை காளி நடனம் கோர்த்த கை உடுக்கை பாசம். தேர் தெற்கு மண்டபம் மேற்குத் தூண் |
௫-5-ஔ - முன் இரு கைகள் பக்கத்தில் தொங்குகின்றன. பின் ஆறு கைகளில் உடுக்கை கபாலம், சூலம் பாசம், ?வாள் கேடயம்.
![]() |
௫-5-ஔ-8கை காளி நடனம். பக்கக் கை. திருமண மண்டபம் |
Comments
Post a Comment