திருமால் அவதாரங்கள் - ௧. வராகர்

திருமால் அவதாரங்கள்


திருமால் பல அவதாரங்களை எடுத்து இருந்தாலும் அவற்றில் சிறப்பானவையாக பத்து அவதாரங்கள் கருதப் படுகின்றன. அவை 
1. மீன்
2. ஆமை
3. வராகம்
4. நரசிங்கம்
5. வாமனர்
6. பரசுராமர்
7. இராமர்
8.கண்ணன்
9. பலராமன்
10. கல்கி. 

இவற்றுள் இங்கு வராகம், நரசிங்கம், வாமனர், இராமர், கண்ணன் ஆகிய ஐந்து அவதாரங்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன.



௧. வராகர்


தொன்மம்

ஒரு சமயம் திருமாலைக் காண வைகுந்தம் வந்த நான்முகனின் மன மகன்களான சனகர் முதலான நான்கு முனிவர்களை வாயிற் காவலர்களாகிய ஜயனும் விஜயனும் தடுத்து நிறுத்தினர். கோபமுற்ற முனிவர்கள் அவர்களை உலகில் பிறப்பு எடுக்குமாறு தீச்சொல் இட்டனர். வாயிற்காவலர்கள் இருவரும் காசியபர் திதி ஆகியோருக்கு இரண்யாட்சன் இரணியன் என்னும் வலிமைமிக்க அசுர மகன்களாகப் பிறந்தனர். இரணியாட்சன் கடும் தவம் புரிந்து நான்முகன் இடமிருந்து வரங்கள் பெற்றான். தன் வலிமையால் பூமியை கடலுக்குள் ஒளித்து வைத்துவிட்டான். தேவர்களும் முனிவர்களும் திருமாலிடம் முறையிட திருமால் காட்டுப் பன்றியாக அவதாரம் எடுத்தார். இரணியாட்சனைக் கொன்று நிலமகளை மீட்டார்.

சிற்ப அமைதி

வராகர் பன்றித் தலையும் மனித உடலும் உடையவர். கிரீட மகுடம். நான்கு கைகள். பின் இரு கைகளில் ஆழி சங்கு. இந்த பொது அமைதியுடன் இரு வகை சிற்பங்கள் உள்ளன.

சிற்பங்கள்

வராகர் நிலமகளை மீட்பது

௧-1 - வராகர் நிலமகளை கடல் அடியில் இருந்து மீட்பது. வராகர் இடது காலை மடக்கி ஒரு அமர்ந்த நிலைச் சிங்கம் மீது வைத்துள்ளார். (காலை ஆதிசேடன் தலை மேல் வைப்பது மரபு). தொடை மீது நிலமகளை இருத்தி முன் இரு கைகளால் அவளை அணைத்துள்ளார். பன்றி முகம் நிலமகளை நோக்கித் திரும்பி உள்ளது. முகத்தின் நுனி மார்பருகில் உள்ளது.

௧-1-வராகர் நிலமகளை மீட்பது.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண்

க-2 - மேற்கண்ட சிற்பம் பொன்றதே. இட வலம் மாறியுள்ளது.

௧-2-வராகர் நிலமகளை மீட்பது.
36கால் மண்டபம் தூண் வ5கி5


நில வராகர்

க-3 - வராகர் நேரமர்வில் பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். அவரது இடத் தொடையின் மீது நிலமகள் அமர்ந்திருக்க அவளை முன் இடக்கையால் அணைத்திருக்கிறார். முன் வலது கையில் காக்கும் குறி. நிலமகளின் வலது கையில் மலர். (திருமகளை இடத் தொடையில் அமர்த்திய திரு வராகர் வடிவமும் இது போன்றதே).

௧-3-நிலவராகர்.
உள் திருசுற்றின் முக மண்டப்ம் தூண் வ1மே1



Comments