திருமால் - ௫. கருடன் மேல் திருமால், ௬. கருடன், ௭. கஜேந்திரன்

௫. கருடன் மீது பயணிக்கும் திருமால்


சிற்பங்கள்

௫-1 - திருமாலை சுமக்கும் கருடன். கருட நிற்கையில் உள்ள கருடன். பின் கைகளில் ஆழி சங்கு, முன் கைகளில் காத்தல் வழங்கல் குறிகளுடன் திருமால் கருடன் மீது அமர்ந்திருக்கிறார். திருமாலின் பாதங்களை கருடன் தம் கைகளில் தாங்கி இருக்கிறார்.

௫-1-கருடன் மீது திருமால்.
36கால் மண்டபம் தூண் வ1கி2

௫-2 - திருமாலை சுமக்கும் கருடன். இன்னொரு வகை. கருட நிற்கையில் உள்ள கருடன். அவரது வலது கை திருமாலின் வலது பாதத்தைத் தாங்குகிறது. கருடனின் இடது கை வேறுபட்டு இடது முட்டியின் மேல் உள்ளது. திருமால் தன் இடது பாதத்தை கருடனின் இடது தோள் மீது வைத்து இருக்கிறார்.

௫-2-பெமு-ந5-கருடன் மேல் அமர்ந்த திருமால்.
உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் கி2தெ1



௬. கருடன்


தொன்மம்

காசியப முனிவருக்கு வினதை கத்ரு என இரு மனைவியர். கத்ரு ஆயிரம் நாகர்களை மகன்களாகப் பெற்றாள். வினதைக்கு இரு மகன்கள் - சூரியனின் தேரோட்டியான அருணன், கருடன். கத்ரு வினதையை ஏமாற்றி அவளையும் கருடனையும் தன் அடிமைகள் ஆக்கிக் கொண்டாள். தங்கள் விடுதலைக்காக கத்ரி விதித்த நிபந்தனைப்படி கருடன் தேவர்களை வென்று மேல் உலகில் இருந்து அமுத கலசத்தைக் கொண்டுவந்து கத்ரியிடம் கொடுத்தார். அவரும் தாயும் விடுதலை பெற்றனர். கருடனின் வலிமையைக் கண்ட திருமால் அவரைத் தன் ஊர்தியாக இருக்குமாறு கூறினார். திருமாலின் வாகனமானார் கருடன்.

சிற்பங்கள்

௬ -1 - இரு கைக் கூப்பி வணங்கி நிற்கும் கருடன்.

௬-1-கருடன் கை கூப்பி வணங்கி நிற்கிறார்.
16கால் மண்டபம் தூண் மே1வ5

௬-2 - இரு கைக் கூப்பி நடந்து செல்லும் நிலையில் கருடன்.

௬-2-கைக்கூப்பி நடந்து செல்லும் கருடன்.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண்

௬ -3 - கருட அமர்வில் வணங்கியவாறு கருடன்.

௬-3-கருட அமர்வில் இரு கைக் கூப்பி வணங்கும் கருடன்.
திருமண மண்டபம் தூண் தெ7கி1

௬-4 - நின்ற நிலை திருமாலின் வலது கால் பக்கத்தில் அவரது பெரிய திருவடி கருடன். இடது பக்கத்தில் சிறிய திருவடி அனுமன். (முகம் தவிர மற்ற பாகங்க்ள் மறைந்துள்ளன.

௬-4-நின்ற திருமால் வணங்கும் கருடன்.
தேர் தெற்கு மண்டபம் மேற்குத் தூண்



௭. கஜேந்திர மோட்சம்


தொன்மம்

பாகவத புராணத்தில் அமைந்துள்ளது கஜேந்திர மோட்சம் கதை. கஜேந்திரன் என்ற யானை திரிகூட மலையில் வசித்து வந்தது. ஒரு நாள் தாமரைத் தடாகத்தில் நீர் பருகிக் கொண்டிருந்தபோது ஒரு முதலை அதன் காலைக் கவ்வி நீரினுள் இழுத்தது. கஜேந்திரன் தன் காலை மீட்கப் போராடியது. அதன் பிடிகளும் மற்ற யானைகளும் கஜேந்திரனைக் காப்பாற்ற முடியாமல் விலகிச் சென்றுவிட்டன. கஜேந்திரனுக்கும் முதலைக்கும் இடையிலான போராட்டம் ஆயிரம் ஆண்டுகள் நீடித்தது. கஜேந்திரனின் உடலும் மனமும் தளர்ந்தன. தன் அகங்காரத்தை முற்றிலும் இழந்த கஜேந்திரன் ஒரு தாமரை மலரைப் பறித்து நீட்டி, திருமாலைச் சரணடைந்து, மனம் குவித்து ''முதற் காரணனே, திக்கற்றோர் காவலனே" என்று பிளிரி அழைத்தது. திருமால் அக்கணமே கருடன் மீதேறி வந்து ஆழியால் முதலையின் வாயைப் பிளந்து கஜேந்திரனை விடுவித்தார். முனிவர் தீச்சொல்லால் யானையான திருமாலின் பக்தனும் அரசனுமான இந்திரதுய்மன் வைகுண்டம் சென்றான். மற்றொரு முனிவர் தீச்சொல்லால் முதலையான கந்தர்வன் தன்னுருவம் பெற்றான்.

சிற்பங்கள்

௭-1 - யானை கஜேந்திரன் துதிக்கையில் தாமரை மலரை நீட்டி திருமாலை அழைத்தல். அதன் பின் காலைக் கவ்வி இருக்கும் முதலை.

௭-1--கஜேந்திரன் திருமாலை அழைப்பது.
திருமண மண்டபம் தூண் தெ4கி3

௭-2 - திருமால் கருடன் மீது ஏறி போர்க் கோலத்தில் விரைந்து வருவது. எட்டுக் கைகள். முன் கைகளில் காத்தல் வழங்கல். பின் கைகளில் ஆழி சங்கு, வாள் கேடயம், அம்பு வில். ஆழியைச் செலுத்த கை ஓங்கி உள்ளார். கருடன் கால் அருகில் கஜேந்திரன். மேலே போற்றி அமர்ந்திருக்கும் இரு முனிவர்கள்.

௭-2-கஜேந்திரனைக் காக்க விரையும் திருமால்.
36கால் மண்டபம் தூண் வ5கி5

௭-3 - நான்கு கை திருமால் எம்பி நிற்கும் கஜேந்திரனுக்கு அருளல். இடது கையால் அதன் துதிக்கையை பிடித்து உள்ளார்.

௭-3-கஜேந்திரனுக்கு அருள் புரியும் .
மண்டபம் தூண் வ2கி5

௭-4 - வலது கையை மத்தகம் மீதும் இடது கையை உடல் மீதும் வைத்து கஜேந்திரனுக்கு அருளல்.

௭-4-கஜேந்திரனுக்கு அருளிய திருமால்.
திருமண மண்டபம் தூண் தெ4கி3



Comments