மக்கள் - ௪. நிறைசூலி

௪-1 - நிறைசூலி. வலது காலை முழுவதாக நீட்டி இடதுகாலை மடித்து குத்த வைத்து அமர்ந்திருக்கிறாள். நீட்டிய வலது காலை ஒரு பெண் தன் மடிமீது வைத்து இரு கைகளாலும் பிடித்திருக்கிறாள். சூலி தன் வலது கையால் ஒரு பெண்ணை அணைத்துக் கொண்டு இடது கையை வியப்புக் குறியாக உயர்த்தி இருக்கிறாள்.

௪-1-நிறைசூலி இரு பெண்களுடன்.
பெரியநாயகி பெருமண்டப தெகி தூண்

௪-2 - நிறைசூலி அதே போன்ற நிலையில். கூட இரு பெண்கள் இல்லாமல் தனியாக. வலது கையை தரையில் ஊன்றி இருக்கிறாள்.

௪-2-நிறை சூலி.
பொன்மலைநாதர் முகமண்டபத்  தூண் வ2கி3

௪-3 - நிறைசூலி. அதே போன்ற நிலை. கை கால்கள் இட வலமாக மாறியுள்ளன.

௪-3-நிறை சூலி.
பொன்மலைநாதர் முகமண்டபத்  தூண் வ3கி2



Comments