திருமால் - ஐந்து நிலைகள், ௧. நின்ற நிலை
திருமாலின் ஐந்து நிலைகள்
திருமால் ஐந்து நிலைகளில் விளங்குகிறார்.
1. பர நிலை - முக்தி அடைந்த உயிர்களுக்கு வைகுண்டத்தில் காட்சி தரும் நிலை.
2. வியூக நிலை - தேவர்களுக்கு அருள பாற் கடலில் பள்ளி கொண்ட நிலை.
3. விபவ நிலை - திருமாலின் அவதாரங்கள்
4. உள்ளுறை நிலை - உலகின் அனைத்து உயிர்கள் பொருட்களுக்கும் உள்ளே உறையும் நிலை.
5. வழிபடு நிலை - வழிபாட்டிற்காக சிலையாக அமைந்த நிலை.
திருமாலின் பொது சிற்ப அமைதி
கோயிலில் நாம் காணும் திருமாலின் சிற்பங்கள் ஐந்தாம் நிலையைச் சார்ந்தவை. இதில் திருமால் நின்ற, அமர்ந்த, கிடந்த ஆகிய மூன்று கோலங்களில் காட்சி தருகிறார்.
சிவன் நான்முகன் ஆகியோர் சடை முடியும் பிள்ளையார் முருகர் தேவியர் தேனடை மகுடமும் அணிய திருமால் கிரீட மகுடம் அணிகிறார். சில சிற்பங்களில் நெற்றியில் நாமம் காணப்படுகிறது. கணுக்கால் வரையான பட்டாடை. திருமாலின் ஆயுதங்கள் ஐந்து. இவை தனித்து இயங்கும் வல்லமை உடைய் ஆயுத புருஷர்கள் எனக் கருதப்படுகின்றன. அவை சுதர்சனம் என்னும் ஆழி, பாஞ்சஜன்யம் என்னும் சங்கு, கெளமோதகி என்னும் கதை, சாரங்கம் என்னும் வில், நந்தகம் என்னும் வாள். இவற்றுள் வலது பின் கையில் ஆழியும் இடது பின் கையில் சங்கும் திருமாலின் பொதுச் சின்னங்களாக அமைகின்றன. திருமாலின் ஊர்தி கருடன்.
௧. நின்ற நிலை திருமால்
சிற்பங்கள்
௧-1 - நின்ற நிலை திருமால்.
![]() |
௧-1-நேர் நின்ற திருமால். 36கால் மண்டபம் தூண் வ4கி2 |
௧-2 - இன்னொரு நின்ற நிலை திருமால். வழக்கத்திற்கு மாறாக முழங்கால் வரையான ஆடை. மேலே போற்றி நிற்கும் முனிவர் ஒருவரும் கின்னரர் ஒருவரும்.
![]() |
௧-2-நின்ற திருமால் முழங்கால் ஆடை. 36கால் மண்டபம் தூண் தெ1கி3 |
௧-3 - முவ்வளைவுடன் நின்ற நிலை.
![]() |
௧-3-நின்ற திருமால் முவ்வளைவு. 16கால் மண்டபம் கி1வ5 |
௧-4 - இடக்கை இடுப்பில் இல்லாமல் வழங்கல் குறியுடன்.
![]() |
௧-4-நின்ற திருமால் முன் இடக்கை வழங்கும் குறி. 36கால் மண்டபம் தூண் வ3கி6 |
௧-5 - இடக்கால் அருகில் ஒரு முனிவர் தலை மேல் கைக்கூப்பி நிற்கிறார். மேலே இரு முனிவர்கள். ஒருவர் கையில் மாலை. மற்றவர் போற்றுகிறார்.
![]() |
௧-5-நின்ற திருமால். 36கால் மண்டபம் தூண் வ5கி5 |
௧-6 - நெற்றிக் கண்ணுடன் திருமால்.
![]() |
௧-6-நின்ற திருமால் நெற்றிக் கண்ணுடன். இராஜகோபுரப் பெருவாயில் தெகி சுவர். |
௧-7 - இடக்கையின் கீழ் கதை. திருமாலின் ஆயுதங்களுள் கௌமோதகி என்னும் கதை மட்டுமே பெண்.
![]() |
௧-7-நின்ற திருமால் கதையுடன். 36 கால் மண்டபம் தூண் வ3கி6 |
சாரங்கன்
௧-8 - முன் வலது கையில் அம்பையும் முன் இடது கையில் சாரங்கம் என்னும் வில்லையும் ஏந்திய வடிவம்.
![]() |
௧-8-சாரங்கன். 36கால் மண்டபம் தூண் வ1கி5 |
௧-9 - பெரு வில் ஏந்திய சாரங்கன்.
![]() |
௧-9-சாரங்கன். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ7கி1 |
சங்கு ஊதும் திருமால்
௧-10 - நான்கு கை திருமால் முன் இரு கைகளால் சங்கு ஊதுகிறார்.
![]() |
௧-10-சங்கு ஊதும் 4 கை திருமால். திருமண மண்டபம் மேடைத் தூண் தெ1கி3 |
ஆறு கை திருமால்
௧-11 - ஆறு கை திருமால். நடுக் கைகளில் அம்பு வில். முன் இரு கைகளில் சங்கு பிடித்து ஊதுகிறார்.
![]() |
௧-11-சங்கு ஊதும் 6கை திருமால். 36கால் மண்டபம் தூண் வ1கி1 |
௧-12 - ஆறு கை திருமால். நடுக் கைகளில் அம்பு வில். முன் கைகளில் நந்தகம் என்னும் வாள் மற்றும் கேடயம்.
![]() |
௧-12-6கை நின்ற திருமால். திருமண மண்டபம் தூண் தெ3மே1 |
தூணுக்குள் திருமால்
௧-13 - தூணுக்குள் நிற்கும் நான்கு கை திருமால். இலிங்கோத்பவரை ஒத்த படைப்பு. அருகில் தூணைத் தாக்கும் இரணியன். அரிய சிற்பம்.
![]() |
௧-13-தூணுக்குள் நிற்கும் திருமால் சுற்றி திருவாசி பக்கத்தில் இரணியன். இராஜகோபுர பெருவாயில் தென் கிழக்குச் சுவர் |
Comments
Post a Comment