மக்கள் - ௬. ஆண் நடனம்

௬-1 - கழுத்துக்குப் பின் சாட்டையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு கூத்தாடும் ஆண்.

௬-1-சாட்டைக் கூத்து.
16கால் மண்டபம் தூண் மே1வ8

௬-2 - வலது காலை உயர்த்தி இரு கைகளையும் ஒன்றாக இடது பக்கம் வைத்து தலையை வலது பக்கம் திருப்பிக் கூத்தாடும் ஆண்.

௬-2-கூத்தாடி-16கால் மண்டபம் தூண் மே1வ8

௬-3 - வலது கையை இடுப்பில் வைத்து இடது கையை தலை மேல் வைத்து தலையை வலது பக்கமாகச் சாய்த்துக் கூத்தாடும் ஆண்.

௬-3-நடனமாடும் ஆண்.
36கால் மண்டபம் தூண் வ1கி1

௬-4 - இடது கையை இடுப்பில் வைத்து வலது கையை தலை மேல் வைத்து தலையை இடது பக்கமாகச் சாய்த்து கூத்தாடும் ஆண். வலது குறுக்குக் கால்.

௬-4-நடனமாடும் ஆண்.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ3கி4

௬-5 - இருவர் கூத்து. உள் கையை மற்றவர் மேல் போட்டு வெளிக் கையைத் தூக்கி உள் காலை மற்றவர் காலுக்குக் குறுக்காக வைத்து கூத்தாடுவது. முன் பார்வை.

௬-5-இருவர் நடனம்.
பெரியநாயகி பெருமண்டபம் தெகி தூண்

௬-6 - இருவர் கூத்து. மேற்கண்டது போன்றது. தலையைத் திருப்பி ஒருவரை ஒருவர் பார்த்த நிலை.

௬-6-நடனமாடும் இணையர்.
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ4கி2



Comments