திருமால் அவதாரங்கள் - ௫. இராமாயணம்
பல புராணக் கதைகள் ஒரு தூண் அல்லது அடுத்தடுத்த இரு தூண்களில் தொடர் சிற்பங்களாக உள்ளன. ஆனால் இராமாயணக் கதைக் காட்சிகள் அவ்வாறு அமையாமல் இங்கொன்றும் அங்கொன்றுமாக அமைந்துள்ளன.
௫.-1 - இராமர் சீதை இலக்குவன் வனவாசத்தில். இராமர் வலது பக்கம் வரும் சீதையின் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறார். இலக்குவன் கைக் கூப்பி பின் செல்கிறான்.
![]() |
௫-1-சீதை ராமர் இலக்குவன் வனவாசத்தில். திருமண மண்டபம் தூண் தெ6கி3 |
௫-2, 3 - இராமர் சுக்கிரீவனுக்கு தன் வலிமையை நிரூபிக்க நிலத்தடி பாம்பு ஒன்று தாங்கி நிற்கும் ஏழு பருத்த நெடிதுயர்ந்த மரா மரங்களை ஒற்றை அம்பால் துளைப்பது. இங்கு குறியீடாக ஒரு மரம் காட்டப்பட்டுள்ளது
![]() |
௫-2-இராமர் மராமரம். பொன்மலைநாதர் 36கால் மண்டபமந்தூண் வ5கி3 |
![]() |
௫-3-இராமர் மராமரத்தை அம்பால் துளைப்பது. 36 கால் மண்டபம் வ3கி3 |
௫-4 - வாலி தாரையுடம் அமர்ந்திருப்பது
![]() |
௫-4-தாரையுடன் அமர்ந்திருக்கும் வாலி. திருமண மண்டபம் தூண் தெ2கி2 |
௫-5 - சுக்கிரவன் வாலியைப் போருக்கு அழைக்க இருவரும் மற்போர் புரிவது.
![]() |
௫-5- வாலி சுக்கிரீவன் சண்டை. பொன்மலைநாதர் முக மண்டபம் தூண் வ1கி2 |
௫-6, 7 - வாலியைக் கொல்ல இராமர் அம்பு எய்வது (மேற்கண்ட நான்கு காட்சிகளும் [4-7] திருமண மண்டம் தூண் தெ2கி2 இன் மேல் சதுரங்கள் நான்கில் உள்ளன.)
![]() |
௫-6-இராமர் வாலியைக் கொல்ல அம்பு எடுப்பது. பின்னால் அனுமன். திருமண மண்டபம் தூண் தெ2கி2 |
௫-8 - வாலி வதம். வலமிருந்து இடமாக - அனுமன், அம்பு விடும் இராமன், சுக்கிரீவன், வீழ்ந்து கிடக்கும் வாலி.
௫-9 - இராமன் இலக்குவனை சுக்கிரீவனிடம் சீதையைத் தேடுவதை நினைவு படுத்த தூது அனுப்புவது.
௫-10 - சீதையைத் தேடச் செல்லும் அனுமனிடம் இராமர் சீதையின் அடையாளங்களைக் கூறுவது.
௫-11 - அனுமன் சீதையைச் சந்திப்பது.
௫-12 - அனுமன் சீதையிடம் இருந்து கணையாழியைப் பெறுவது.
![]() |
௫-12சீதை அனுமனிடம் கணையாழி கொடுப்பது. கூட காவல் பெண். திருமண மண்டபம் தூண் தெ7கி1 |
௫-13 - அனுமன் இராமரிடம் ‘கண்டேன் சீதையை’ செய்தியைச் சொல்வது.
![]() |
௫-13-அனுமன் இராமரிடம் 'கண்டேன் சீதையை' செய்தி சொல்லுவது. திருமண மண்டபம் தூண் தெ7கி1 |
Comments
Post a Comment