மனுநீதிச் சோழன்

தொன்மம்

மனுநீதிச்சோழன் திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த முற்கால சோழ மன்னன். நீதி தவறாது ஆட்சி செய்து வந்த அவன் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க தன் அரண்மனை வாயிலில் ஒரு ஆராய்ச்சி மணியைக் கட்டி வைத்திருந்தான். அவன் மகன் இளவரசன் வீதிவிடங்கன் ஒரு நாள் தேரில் சென்று கொண்டிருந்த போது துள்ளி ஓடிவந்த ஒரு கன்று தேர் சக்கரத்தில் விழுந்து இறந்தது. தாய்ப்பசு ஆராய்ச்சி மணியை அடித்து நீதி கேட்டது. அமைச்சர்கள் பசுக்கொலைக்காக நால்வேதம் அறிந்த அந்தணர்கள் பரிந்துரைக்கும் பிழையீட்டைச் செய்யலாம் என்று அறிவுறுத்தினர். ஆனால் மனு நீதிச் சோழன் எந்த உலகிலும் எந்தப் பசுவும் தன் கன்று இறந்ததற்காக நீதி கேட்டு மன்னனை அணுகியதில்லை. இதற்குரிய தண்டனை தன் மகனைக் கொல்வதுதான் என்று முடிவெடுத்தான். வீதிவிடங்கன் மீது தேரை ஏற்றிக் கொல்லுமாறு அமைச்சர் ஒருவருக்கு ஆணையிட்டான். அவர் அதைச் செய்ய மனம் துணியாமல் உயிர் நீத்தார். மனுநீதிச்சோழன் தானே வீதிவிடங்கனை வீதியில் கிடத்தி தேரை அவன் மீது ஓட்டிக் கொன்று நீதி வழங்கினான். நீதி தவறாத அவன் மாண்பால் மகிழ்ந்த சிவன் வீதிவிடங்கன், கன்று, அமைச்சன் மூவரையும் உயிர்ப்பித்தான்.

சிற்பக் கதைத் தொடர்

மேற்கண்ட நிகழ்வு சிற்பக் கதைத் தொடராக திருமண மண்டப தூண் தெ2கி4 இல் இடம் பெற்றுள்ளது.

01 - வீதிவிடங்கன் தேர் ஏறி கன்று இறப்பது.

01-வீதிவிடங்கன் தேர் ஏறி கன்று இறப்பது.

02 - தாய்ப் பசு இறந்த கன்றைப் பார்ப்பது.

02-இறந்த கன்றை தாய்ப்பசு பார்ப்பது.

03 - தாய்ப் பசு ஆராய்ச்சி மணியை அடிப்பது.

03-தாய்ப்பசு ஆராய்ச்சி மணி அடிப்பது

04 - ஆராய்ச்சி மணியின் ஓசை கேட்டு மன்னன் காதைப் பொத்திக் கொள்வது.

04-ஆராய்ச்சி மணி ஓசை கேட்டு மனு நீதி சோழன் காதைப் பொத்திக் கொள்வது

05 - மன்னன் அமைச்சர்களோடு ஆலோசனை.

05-மனுநீதிச் சோழன் அமைச்சர்க்ளோடு ஆலோசனை.

06 - மன்னன் மகன் மீது தானே தேரை ஏற்றிக் கொல்வது.

06-மனுநீதிச் சோழனே முன்னின்று பசுவை தேரில் இருத்தி வீதிவிடங்கனை வீதியில் கிடத்தி தேரை ஏற்றிக் கொல்வது.

07 - உயிர் மீண்ட மகன், அமைச்சரோடு மன்னன் சிவனை வணங்குவது.

07-மனுநீதிச் சோழன், தன்னுருவம் மீண்ட அமைச்சர், வீதிவிடங்கன் சிவனைத் தொழுதல்




Comments