Posts

Showing posts from August, 2025

உள்ளடக்கம்

உள்ளடக்கம் அறிமுகம் பிள்ளையார் முருகர் முருகர் வள்ளி திருமணக் கதை சித்தர்கள் சக்தி 1 - ௧. தேவி, ௨. உமை சக்தி 2 - ௩. கொற்றவை சக்தி 3 - ௪. மகிடற்செற்றாள் சக்தி 4 - ௫. காளி சக்தி 5 - ௬.திருமகள், ௭. கலைமகள் சக்தி 6 - ௮. ஏழு கன்னியர் சிவன் 1 - ௧. சிவலிங்கம், சிவலிங்க வழிபாடு சிவன் 2 - ௨. தனித்த வடிவங்கள் சிவன் 3 - ௩- உமையுடன் ஆன வடிவங்கள் சிவன் 4 - சிவன் உமை திருமணம் சிவன் 5 - ௪. கூட்டு வடிவம், ௫. நடன வடிவம் சிவன் 6 - ௬. வசீகர வடிவங்கள் சிவன் 7 - ௭. தென்முகத்தோன் சிவன் 8 - ௮. அழிக்கும் வடிவங்கள் - ௮ 1. - வீரபத்திரர், ௮ 2. தக்க யாகம் சிவன் 9 - ௮ 3. பைரவர் சிவன் 10 - ௮ 4. காலனைக் காய்ந்தவர் சிவன் 11- ௮ 5. - காமனை எரித்தவர் சிவன்12 - ௮. அழிக்கும் வடிவங்கள் - ௮6-யானை உரி போர்த்தவர் சிவன்13 - ௮. அழிக்கும் வடிவங்கள் - ௮7-புலியைக் கொல்லுதல், ௮8-திரிபுராந்தகர், ௮9-பிநாகர், ௮10-சரபர் சிவன் 14 - ௯. அருளும் வடிவங்கள் - ௯ 1. கங்கை சூடி, ௯ 2. கிராதர், ௯ 3. சண்டேசருக்கு அருளியவர், ௯ 4. திருமாலுக்கு அருளுதல், ௯ 5. அடியவர்களுக்கு அருளுதல் அதிகார நந்தி, இடபம் ஐயனார் நாயன்மார்கள் - ௧. திருஞானசம்பந்தர், ௨. சு...

அறிமுகம்

இந்த வலைப்பூ தேவிகாபுரம் கோயில்கள் - சிற்பக் கலை மற்றும் கட்டடக் கலை' என்ற நூலிற்கு துணை செய்ய உருவாக்கப்பட்டது. “கிருஷ்ணாபுரம், தாடிக்கொம்பு, தாரமங்கலம் ஆகிய சிற்பக் களஞ்சியங்கள் வரிசையில் சேர்த்துக் காணத் தக்கது தேவிகாபுரத்து சிற்பக் களஞ்சியமாகும்” என்று பேராசிரியர் செ. வைத்தியலிங்கன் தனது ‘சிற்பக்கலை’ என்ற நூலில் கூறுகிறார். அவர் குறிப்பிடுவது தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோயிலை. அது தவிர அங்கு உள்ள பொன்மலைநாதர் கோயில், காம ஈசுவரர் கோயில், கற்பக விநாயகர் கோயில் ஆகியவையும் சிறப்பு வாய்ந்தவை. சில தனி மண்டபங்களும் உள்ளன. இந்த நான்கு விஜயநகர காலத்துக் கோயில்களின்  சிற்பங்கள் கீழ்கண்ட தனித்துவங்கள் உடையவை. 1. சித்தர் சிற்பங்கள். பல்வேறு நிலைகளில் உள்ள சித்தர் சிற்பங்கள் பெரியநாயகி பொன்மலை நாதர் கோயில்களின் பல பகுதிகளில் நிறைந்திருக்கின்றன. 2. ஒற்றைக் கருத்துத் தூண்கள். பொதுவாக தூண் சதுரங்களில் காணப்படும் சிற்பங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாக இருப்பதில்லை. தேவிகாபுரத் தூண்களில் ஒற்றைக் கருத்தைச் சுற்றி சிற்பங்கள் அமைந்திருப்பதைக் காணலாம். ஒரு தூண் அல்லது இரண்டு தூண...

பிள்ளையார்

Image
பிள்ளையார் 1. அழகமர்வில் 4 கை பிள்ளையார் ஒரு காலை மடக்கி பீடத்தின் மீது கிடத்தி வைத்து, மற்ற காலை மடக்கி பீடத்தின் மீது நிறுத்தி வைத்து அமர்ந்திருக்கும் கோலமான அழகமர்வு பிள்ளையாருக்கே உரியது.  தேனடை மகுடம்.  யானைத் தலை. அதில் வலது தந்தம் உடைந்துள்ளது.  பருத்த உடல். பெரு வயிறு. ஐந்து கைகள். ஒன்று தும்பிக்கை. பின் இரண்டு கைகளில் அங்குசம், பாசம். முன் வலது கையில் உடைந்த தந்தம். இவை மூன்றையும் நண்டுப் பிடியில் பிடித்துள்ளார். முன் இடது கையில் மோதகம். அதன் மீது துதிக்கையின் நுனி.  மற்ற அணிகளுடன் பாம்பை வயிற்றைச் சுற்றிக் கட்டியுள்ளார். இது பிள்ளையாருக்கே உரியது. 1க - அழகமர்வில் பிள்ளையார். தூண் சிற்பம் 1௧.அழகமர்வில் 4கை பிள்ளையார் - தூண் சிற்பம் பொன்மலைநாதர் பெரு மண்டபம், வடமேற்குத் தூண், கிழக்கு மேல் சதுரம் 1௨ - ஒரு அழகிய விமான அமைப்பின் கருவறையில் அழகமர்வில் பிள்ளையார் 1௨. கோயில் விமான அமைப்பில் அழகமர்வில் 4 கை பிள்ளையார். திருமண மண்டபம் மேடை முகப்பு கிழக்குப் பக்கம் 2. நேரமர்வு நான்கு கை பிள்ளையார் 2௧ - நான்கு கைப் பிள்ளையார் வலது காலை பீடத்தில் இருந்து தொங்கவிட்டு ...

முருகர்

Image
முருகர் தொன்மம் சிவனின் இளைய மகன். சிவனின் ஆறுமுகங்களின் நெற்றிக் கண்களில் இருந்து அனலாக வெளிப்பட்டு சரவணப் பொய்கையில் குழந்தைகளாக மாறி கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டு உமை தூக்கி அணைத்து ஒன்றானவர் முருகர். தேவர்களின் படைத் தளபதியாக சூரபதுமனை வென்றவர். இந்திரன் மகள் தேவானையையும் வேடர்குல வள்ளியையும் மணந்தவர். சிற்ப அமைதி இங்குள்ள சிற்பங்களில் முருகர் மயிலுடன் தான் காணப்படுகிறார். மயிலின் வாயில் இருந்து ஒரு பாம்பு தொங்குகிறது.  தேனடை மகுடம்.  வலது பின் கையில் சக்தி ஆயுதம், இடது பின் கையில் இடத்தில் கையில் இரு முனை சூலமான வைர ஆயுதம், முன் கைகளில் காத்தல் வழங்கல் குறிகள். ௧ - மயில் மீது நேர் அமர்வில் முருகர் ௧-மயில் மீது நேரமர்வில் முருகர் உள் திருச்சுற்றின் முகமண்டபம் தூண் தெ1கி1 தெற்கு கீழ்ச் சதுரம் ௨ - மயில் மீது மண்டல அமர்வில் முருகர் ௨-மயில் மீது மண்டல அமர்வில் முருகன் 36கால் மண்டபம் தூண் வ3கி2 ௩ - மயில் மீது இரு பக்கமும் கால்களை தொங்க விட்டு அமர்ந்திருக்கும் நிலையில் முருகர். இடது கை வழங்கல் குறி இல்லாமல் மயிலை செலுத்தும் நிலையில் உள்ளது. ௩-மயில் மீது இரு பக்கமும் கா...

முருகர் வள்ளி திருமணக் கதை

Image
தொன்மம் வேடர் குலப் பெண்ணான வள்ளியை விரும்பி முருகன் காதல் மணம் புரிந்தார் என்பது புராணம். காஞ்சிபுரத்தில் வாழ்ந்த கச்சியப்பர் யாத்த கந்த புராணத்தின் இறுதி அத்தியாயமான வள்ளியம்மை திருமணப் படலத்தில் இந்தக் கதை விவரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை மதில் முருகர் சன்னிதி மற்றும் வெளிச்சுற்று முருகர் சன்னிதி இரண்டின் முக மண்டபத் தூண்களின் சதுரங்களில் கதைத் தொடராக செதுக்கப்பட்டுள்ளது. முன் கதை - திருமாலின் கண்ணீர்த் துளிகளில் இருந்து அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்னும் இரு பெண்கள் பிறந்தனர். இருவரும் முருகனை மணக்க விரும்பி தவம் இருந்தனர். முருகன் அவர்களின் அடுத்த பிறப்பில் மணப்பதாக உறுதி அளித்தார். சுந்தரவல்லி இந்திரனின் மகள் தெய்வானையாக முருகனை மணந்தாள். சுந்தரவல்லி வள்ளியாகப் பிறந்தாள். ௧ - சுந்தரவல்லி ஒற்றைக் காலில் எரி நடுவில் முருகரை மணக்கத் தவம். ௧-சுந்தரவல்லி முருகரை வேண்டி ஒற்றைக் கால் தவம். வெளித் திருச்சுற்று முருகர் சன்னிதி தெற்குத் தூண் மேற்கு கீழ்ச் சதுரம் ௨ - முருகர் அடுத்த பிறவியில் மணப்பதாக உறுதி. , ௨- மயில் மீது இரு பக்கமும் கால்களைத் தொங்கவிட்டு அமர்ந்துள்ள முருகர் அடுத்த ...