தேவர்கள்
தொன்மம்
தேவர்கள் மேல் உலகவாசிகள். மரணமற்றவர்கள். அவர்களின் தலைவர் இந்திரன். அவர்களில் தனி அதிகாரமும் கடமையும் உடையவர்கள் உண்டு. எடுத்துக்காட்டாக வருணன் நீரையும் அனலன் நெருப்பையும் ஆள்பவர்கள். மற்ற தேவர்களில் கந்தர்வர், கின்னரர், கிம்புருடர், யட்சர், சித்தர், சாரணர், சாத்யர் முதலிய 18 ‘தேவ கணங்கள்’ என்னும் வகைகள் உண்டு. இவர்கள் தனித்துவமான உருவ அமைதியும் குணங்களும் கொண்டவர்கள்.
௧. கின்னரர்கள்
கின்னரர்கள் மனித மேல் உடலும் பறவையின் கீழ் உடலும் உடையவர்கள். முன் இரு கைகளில் வீணை ஏந்தி இருப்பவர்கள். இசையுடன் தொடர்பு உடையவர்கள்.
சிற்பங்கள்
க-1 - கின்னரர்
![]() |
| ௧-1-கின்னரர். 16கால் மண்டபம் தூண் மே1வ7 |
௧-2 - கின்னரி
![]() |
| ௧-2-கின்னரி. உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ1 |
௨. கந்தர்வர்கள்
தொன்மம்
கந்தர்வர்கள் ஆடல் இசைக் கலைகளில் வல்லுநர்கள். கந்தர்வ லோகத்தில் வசிப்பவர்கள். இவர்களுடைய மனைவியர் அரம்பையர்கள். அவர்களும் ஆடல் பாடல் கலையில் சிறந்தவர்கள். மனித உடல் அமைதி கொண்டவர்கள்.
சிற்பம்
௨-1 - கந்தர்வன். கருட அமர்வு. ஒரு கையில் மலர்.
![]() |
| ௨-1-கந்தர்வன். தேர் தெற்கு மண்டபம் கிழக்குத் தூண் |
௩. சங்கநிதி, பதுமநிதி
தொன்மம்
சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் ஆகிய ஒன்பது நிதிகள் குபேரனின் செல்வங்கள்.
சிற்ப அமைதி
குபேர நிதிகளுள் சங்கநிதி மற்றும் பதும நிதி இரண்டிற்கு மட்டுமே உருவங்கள் உள்ளன. இருவரும் ஓரே தோற்றத்தை உடையவர்கள். பருத்த உடல், பெரு வயிறு, அழகமர்வு - பிள்ளையாரைப் போன்ற உடல். மனித முகம், இரு கைகள். சங்கநிதி வலபுரிச் சங்கை ஒரு கையிலோ இரு கைகளைலோ வைத்துள்ளவர். பதுமநிதியின் கையில் தாமரை. இதுவே அவர்களை வேறுபடுத்தும் அடையாளம். இவர்கள் வாயிலின் இரு பக்கங்களில் அமைவது மரபு.
சிற்பங்கள்
௩-1 - சங்கநிதி வலக்கை சங்கு.
![]() |
| ௩-1-சங்கநிதி. திருமண மண்டப மேடை மேற்கு முகப்பு |
௩-2 - சங்கநிதி இரு கை சங்கு.
![]() |
| ௩-2-சங்கநிதி. இரு கை தாமரை. உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் கி1வ2 |
௩-3 - பதுமநிதி வலக்கை தாமரை.
![]() |
| ௩-3-பதுமநிதி. வலக்கை தாமரை. 16கால் மண்டபம் தூண் கி1வ5 |
௩-4 - பதுமநிதி இரு கை தாமரை
![]() |
| ௩-4-பதுமநிதி. இரு கை தாமரை. இராஜகோபுர பெருவாயில் தென் மேற்குத் முகப்பு |
௩-5 - பதுமநிதி அரிதாக நிற்கும் சிற்பம். இரு கை தாமரை.
![]() |
| ௩-5-பதுமநிதி. இரு கை தாமரையுடன் நிற்கும் நிலை. பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் தெ1கி1 |
௪. மற்றவர்கள்
சில தேவர் சிற்பங்கள் வகைப் படுத்த இயலாதவை.
௪-1 - கருட அமர்வில் வாழ்த்தும் தேவன்.
![]() |
| ௪-1-வாழ்த்தும் தேவர் கருட நிற்கை. 16கால் மண்டபம் தூண் கி1வ1 |









Comments
Post a Comment