விலங்குகள் - க. அண்டரண்டப் பறவை

தொன்மமும் உருவ அமைதியும்

கண்டபேருண்டப் பறவை என்றும் பெயர். ஒரு கற்பனையான புராணப் பறவை. மனித உருவமும் இரு கழுகுத் தலைகளும் இரு இறக்கைகளும் உடையது. பல யானைகளை அடக்கித் தூக்கி கொண்டு பறக்கக் கூடிய வலிமை உடையது. அண்டரண்டப் பறவை மைசூர் அரசர்களின் அரசச் சின்னமாக இருந்து, பின்னர் கர்நாடக மாநிலம் உருவானபோது அதன் சின்னத்தில் இடம் பெற்றுள்ளது.

இரணியனைை வதம் செய்த நரசிங்கத்தின் வெறியை பிரகலாதன் தன் பாடல் வழிபாட்டால் குளிர்வித்தான் என்பது ஒரு தொன்மம். சிவனின் மேன்மையை குறிக்கும் மாற்றுக் கதையாடலாக நரசிங்கத்தை அடக்கிய சரபர் கதை உருவாகி வந்தது. அண்டரண்டப் பறவையைக் கொண்டு திருமாலின் மேன்மையை நிறுவும் ஒரு வைணவ எதிர்க் கதையாடல் உருவானது.

'சரபர் நரசிம்மரைத் தூக்கிக்கொண்டு பறந்தபோது நரசிம்மர் அண்டரண்டப் பறவையாக மாறி சரபரோடு போரிட்டார். 18 நாள் நிகழ்ந்த கடும் போருக்குப் பிறகு சரபர் வென்றார். தோல்வியின் அடையாளமாக சரபர் தன் தோலை உரித்து நரசிம்மரிடம் தந்தார். இருவரும் தன்னிலை மீண்டனர்.'

சிற்பம்

க-அண்டரண்டப் பறவை.

௧-அண்டரண்ட பறவை.
பொன்மலைநாதர் முக மண்டபம் தூண் வ4கி2








Comments