பூதகணங்கள்

தொன்மம்

பூத கணங்கள் சிவனின் பரிவாரங்கள். சிவனின் படை வீரர்கள், ஏவலர்கள். சிவன் பூத நாதர், பூத ஈசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார். பூதகணங்களின் தலைவர்கள் பிள்ளையார் (அந்தப் பதவியினால் கணபதி என்ற பெயர்), அதிகார நந்தி முதலியோர்.

சிற்ப அமைதி

பூத கணங்கள் குள்ளமான மனித உருவம், இரு கைகள், பருத்த உடல், சடை மண்டல அல்லது சடை பார முடி அலங்காரம் கொண்டுள்ளன. இரு தோள்களில் இருந்துச் தொங்கும் உத்தரீயத்தைப் பல பூதகணங்கள் அணிந்துள்ளன. விளையாட்டு, குறும்பு, நடனம், இசை ஆகிய நிலைகளில் காட்சி அளிக்கின்றன.

சிற்பங்கள்

௧. இசைக் கருவிகளோடு பூதகணங்கள்

௧-1 - அமர்ந்து சங்கு ஊதும் பூதகணம்.

௧-1-சங்கு ஊதும் பூதகணம். அமர்ந்த நிலை.
திருமண மண்டபம் தூண் தெ6கி4

௧-2 - நின்று சங்கு ஊதும் பூதகணம்.

௧-2-சங்கு ஊதும் பூதகணம் நின்ற நிலை.
தேர் மைய மண்டபம் தூண் கி1தெ2

௧-3 - புல்லாங்குழல் இசைக்கும் பூதகணம்.

௧-3-புல்லங்குழல் இசைக்கும் பூதகணம்.
16கால் மண்டபம் தூன் மே1வ6

௧-4 - எக்காளம் ஊதும் பூதகணம்.

௧-4-எக்காளம் ஊதும் பூதகணம்.
பொன்மலைநாதர் பெருமண்டபம் தெமே தூண்

௧-5- வீணையுடன் பூதகணம்.

௧-5-பூதகணம் வீணையுடன்.
திருமண மண்டபம் அதிட்டானம்

௧-6, 7 - மத்தளம் இசைக்கும் பூதகணம்.

௧-6-மத்தளம் இசைக்கும் பூதகணம்.
பொன்மலைநாதர் பெருமண்டபம் தெந் மேற்குத் தூண்

௧-7-மத்தளம் இசைக்கும் பூதகணம்.
பொன்மலைநாதர் பெருமண்டபம் வகி தூண்

௧-8 - கங்காளம் இசைக்கும் பூதகணம்.

௧-8-கங்காளம் இசைக்கும் பூதகணம்.
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ1கி3



௨. நடனமாடும் பூதகணங்கள்

௨-1 - இராஜகோபுர தென்கிழக்கு நிலைக்காலின் கொடிவளையங்களுக்குள் அழகாகவும் நுணுக்கமாகவும் செதுக்கப்பட்டுள்ள நடனம் ஆடும் பூதகணங்களின் குறுஞ் சிற்பங்கள். கீழ் இருந்து மேலாக - இடது கையில் பாம்புடன், பறை இசைத்துக் கொண்டு, உத்தரீயத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, வலது கையை உயர்த்தி.

௨-1-இராஜகோபுர தென் கிழக்கு நிலைக்கால்.

௨-2 - இராஜகோபுர தென்கிழக்கு நிலைக்காலில் பூதகணங்களின் நடன குறுஞ் சிற்பங்கள். கீழ் இருந்து மேலாக - தலைவர் கணபதி கையில் பாம்புடன், பறை இசைத்துக்கொண்டு, உத்தரீயத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, வலது கையில் பாம்புடன்

௨-1-இராஜகோபுர தென் கிழக்கு நிலைக்கால்.

௨-3 - இராஜகோபுர வடகிழக்கு நிலைக்காலில் பூதகணங்களின் நடன குறுஞ் சிற்பங்கள்.

௨-1-இராஜகோபுர வட கிழக்கு நிலைக்கால்.

௨-4 - வலது கையில் உத்தரீயத்தைப் பிடித்துக் கொண்டு இடது கை உயர்த்தி நடனம்.

௨-4--நடனமாடும் பூதகணம்.
பொன்மலைநாதர் பெருமண்டபம் வகி தூண்

௨-5 - தூக்கிய இடது கையில் தொங்கும் மலருடன்.

௨-5-நடனமாடும் பூதகணம்.
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ2கி2

௨-6 - ஒரு பெண்ணுடன் இணை நடனம் ஆடும் பூதகணம்.

௨-6-ஒரு பெண்ணுடன் இணை நடனமாடும் பூத கணம்.
இராஜகோபுர வகி உபபீடத் தூண்பாதம்

௨-7 - தூண் சதுரத்தின் ஒரு பக்கம் வலக்கை உயர்த்தி நடனமாடும் பூதகணம், இன்னொரு பக்கத்தில் சங்கு ஊதும் பூதகணம்.

௨-7-நடனமாடும் சங்கு ஊதும் பூதகணங்கள்.
பொன்மலைநாதர் முக மண்டபம் தூண் வ4கி2

௨-8 - சிங்க முக பூதகணம் நடனம்.

௨-8-சிங்கமுக பூதகணம் நடனம்.
தேர் மைய மண்டபம் மே1தெ2

௨-9 - இடது கையை ஒரு கதை மேல் வைத்து வலது கை உயர்த்தி நடனம் ஆடும் பூதகணம்.

௨-9-இடக்கை கதை மேல் ஊன்றி வலக்கை உயர்த்திக் கூத்தாடும் பூதகணம்-
பொன்மலைநாதர் பெருமண்டபம் தெமே தூண்

௨-10 - இடது கையில் கதையைத் தூக்கிக் கொண்டு நடனம் ஆடும் பூதகணம்.

௨-10-இடது கையில் கதை ஏந்திக் கூத்தாடும் பூதகணம்.
பொன்மலைநாதர் பெருமண்டபம் தெமே தூண்


௩. மற்றவை

௩-1 - வணங்கி நிற்கும் பூதகணம்.

௩-1-வணங்கி நிற்கும் பூதகணம்.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ7கி1

௩-2 - உண்ணும் பூதகணம்.

௩-2-உண்ணும் பூதகணம்.
இராஜகோபுர உபபீடத் தூண் பாதம்



௪. பூதவரி 

௪-1. கூரையின் வலபி பூதகணங்களால் அணி செய்யப்பட்டு இருந்தால் அது பூத வலபி எனப்படும். இங்கு பெரும்பாலும் தாமரை வலபியும் சில இடங்களில் மதலை வலபியும் அமைந்துள்ளன. பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள கற்பக பிள்ளையார் கோயில் முக மண்டபத்தில் பூத வலபி உள்ளது.

௪-1-பூத வலபி-கற்பக பிள்ளையார் கோயில் முக மண்டபம்

௪-2. மதில் பிள்ளையார், மதில் முருகர் சன்னிதிகளின் முகமண்டபங்களின் வலபிகளில் பூதகணங்களும் சூலங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளன.

௪-2-மதில் பிள்ளையார் கோயில் பூத வலபி

௪-3. திருக்காம ஈசுவரர் கோயிலில் கோகிலம்மன் சன்னிதி விமானம் மற்றும் முக மண்டபக் கூரையின் பூமிதேசத்தில் வழக்கமான யாழிகளுக்குப் பதிலாக பூதகணங்கள் பூமிதேசத்தைத் தாங்குவது போல அமைந்துள்ளனர். இதில் ஒரு பூதகணம் புல்லாங்குழல் வாசிக்க, ஒன்று பறை இசைக்க, ஒரு பூதகணமும் ஒரு சிங்கமுக பூதகணமும் நடனம்

௪-3கோகிலம்மன் சன்னிதி பூமிதேசம்

௪-4. பெரியநாயகி அம்மன் கோயிலின் உள் திருச்சுற்றின் முக மண்டபத்தின் மைய அங்கணத்தின் கூடுதல் உத்தரத்தின் ஒரு பகுதியில் பூத வரி காணப்படுகிறது.

௪-4-உள் திருச்சுற்றின் முக மண்டபம்



Comments