முனிவர்கள்
சித்தர்களைப் போல முனிவர்கள் பல நிலைகளில் உள்ள சிற்பங்கள் பலவும் பெரியநாயகி பொன்மலைநாதர் கோயில்களில் உள்ளன. சித்தர்களுக்கும் முனிவர்களுக்கும் உள்ள வேறுபாடுகள் ‘சித்தர்கள்’ பகுதியில் விளக்கப் பட்டுள்ளன.
சிற்ப அமைதி
சில சிற்பங்களில் முனிவர்கள் இறைவர்களை வானுலகில் இருந்து போற்றிய அல்லது வணங்கிய நிலையில் மேகங்கள் மீது நின்றவாறும் அமர்ந்தவாறும் காட்டப்பட்டுள்ளனர். மற்றவற்றில் அவர்கள் தனித்து உள்ளனர்.
பெரும்பாலும் சடைக் கட்டு அல்லது இரு பக்கமும் நீண்டு தொங்கும் முடி. பருத்த உடல், பெரு வயிறு. நின்ற நிலை, அரைத் தாமரை அமர்வு பேரரச அமர்வு முதலிய சில மரபான உடல் அமைதிகள். சிலர் கமண்டலம், சூலம், குடை போன்றவற்றை ஏந்தி உள்ளனர்.
சிற்பங்கள்
௧. நின்ற நிலை
௧-1 - சடைக்கட்டு. வலக்கை உயர்த்திப் போற்ற இடக்கையில் கமண்டலம். (இதேபோல் இடக்கை உயர்த்தி வலக்கையில் கமண்டலம் உடைய சிற்பங்களும் உள்ளன)
![]() |
| ௧-1-முனிவர். இடக்கை கமண்டலம் வலக்கை உயர்த்தி. பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண்3 |
௧-2 - தலை மேல் கைக்கூப்பி வணங்கி நிற்கும் முனிவர்.
![]() |
| ௧-2-தலை மேல் கை கூப்பி வணங்கி நிற்கும் முனிவர். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ1கி4 |
௧-3 - இடக்கையில் தடி. வலக்கையில் காக்கும் குறி. தலையில் இருந்து கணுக்கால் மேல்வரை தொங்கும் நீண்ட ஆடை.
![]() |
| ௧-3-முனிவர் நீண்ட ஆடை. வெளி திருச்சுற்று 4கால் மண்டபம் |
௧-4 - வலக்கையை உயர்த்திப் போற்ற இடக்கையில் கமண்டலம். தோள்களில் இருந்து கணுக்கால் மேல் வரையான நீண்ட ஆடை
![]() |
| ௧-4--முனிவர். நீண்ட கீழாடை, இடக்கை கமண்டலம். வலச் சுட்டு விரல் மேல் நோக்கி. திருமண மண்டபம் மேடைத் தூண் தெ2கி2 |
௧-5 - வலக்கை உயர்த்திப் போற்ற இடக்கையில் சூலம்.
![]() |
| ௧-5-முனிவர் இடக்கையில் சூலம். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ1கி |
௧-6 - வலக்கையில் வீணை, உயர்த்திப் போற்றும் இடக்கை.
![]() |
| ௧-6-முனிவர் வீணையுடன். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ1கி |
க-7 - வலக்கையில் கமண்டலம், இடக்கையில் குடை.
![]() |
| ௧-7-முனிவர். வலக்கை கமண்டலம். இடக்கை குடை. 16கால் மண்டபம் தூண் மே1வ6 |
௨. மேகங்கள் மீது போற்றி அல்லது வணங்கி நிற்பது
௨-1 - வானில் இரு கைக்கூப்பி அமர்ந்திருக்கும் முனிவர்.
![]() |
| ௨-1-வானில் இரு கைக்கூப்பி அமர்ந்திருக்கும் முனிவர். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ1கி2 |
௨-2 - மேகத்தின் மீது தலை மேல் கைக்கூப்பி நின்றிருக்கும் முனிவர்.
![]() |
| ௨-2-தலை மேல் கைக்கூப்பி வணங்கி நிற்கும் முனிவர். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ7கி1 |
-3 - வலக்கை உயர்த்தி வாழ்த்தி நின்றிருக்கும் முனிவர்;
![]() |
| ௨-3-போற்றி நிற்கும் முனிவர். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ7கி2 |
௨-4 - வணங்கி நின்றிருக்கும் முனிவர் இருவர்.
![]() |
| ௨-4-இரு முனிவர்கள் வணங்கி நிற்பது. தேர் கிழக்கு மண்டபம் தெற்குத் தூண் |
௩. அமர்ந்த நிலை - அரைத் தாமரை அமர்வு
௩-1 -உயர்த்திய வலது சுட்டு விரல், இடது கை மடியில்.
![]() |
| ௩-1-அரைத் தாமரை அமர்வு முனிவர். திருமண மண்டபம் மேடைத் தூண் தெ2கி1 |
௩-2 - இரு கைகளும் மடி மீது தியான நிலையில்.
![]() |
| ௩-2-அரை தாமரை அமர்வில் முனிவர். தியான கைகள். சடை கட்டு. திருமண மண்டபம் மேடைத் தூண் தெ2கி2 |
௩-3 - இடது கையை நீட்டி வலது கை மார்பின் மீது.
![]() |
| ௩-3-அரைத் தாமரை அமர்வில் முனிவர், வலது உள்ளங்கை மார்பில். 36கால் மண்டபம் தூண் வ4கி2 |
௩-4 - இடது கை மடியில் வலது கையில் காக்கும் குறி.
![]() |
| ௩-4-அரைத் தாமரை அமர்வு. வலது கை காக்க, இடது கை மடியில். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ8கி3 |
௩-5 - இரு கைகளில் சிவலிங்கம் மார்பின் முன்.
![]() |
| ௩-5-அரைத் தாமரை அமர்வு. மார்பின் முன் கைகளுக்குள் சிவலிங்கம். நீண்ட சடைச் சுமை. உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் கி1வ3 |
௩-6 - இரு கை கூப்பியது
![]() |
| ௩-6-அரைத் தாமரை அமர்வில் கை கூப்பி. உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் கி2வ3 |
௩-7 - தலை மேல் இரு கை கூப்பியது.
![]() |
| ௩-7-அரைத் தாமரை அமர்வில் முனிவர். தலை மேல் கை கூப்பி. உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ2 |
௩-8 - ஒரு முனிவரும் ஒரு பெண் முனிவரும்
![]() |
| ௩-8-ஒரு முனிவரும் ஒரு பெண் முனிவரும். திருமண மண்டபம் உபபீட நாசி |
௩-9 - உயர்த்திய வலது கை, மடி மீது இடது கையுடன் மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் முனிவர்.
![]() |
| ௩-9-மரத்தடி முனிவர். தேர் மைய மண்டபம் தூண் கி1வ2 |
௪. அமர்ந்த நிலை - பேரரச அமர்வு
௪-1 - உயர்த்திய வலது சுட்டு விரல், பீடத்தின் மீது இடது கை.
![]() |
| ௪-1-பேரரச அமர்வு. முனிவர். வலக்கை உயர்த்தி. உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ2 |
௪-2 - வலது கையில் சிறு கோல்.
![]() |
| ௪-2-பேரரச அமர்வில் முனிவர். பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ4கி2 |
௪-3 - முன்னால் சிக்குப் பலகையுடன் முனிவர். வலது கை தரையில். உயர்த்திய இடது சுட்டு விரல். அவர் சிக்குப் பலகையில் இருக்கும் நூலைப் படித்து விளக்குவதைக் குறிக்கிறது.
![]() |
| ௪-3-பேரரச அமர்வில் முனிவர். இடச் சுட்டு விரலை மேல் நோக்கி உயர்த்தி. 16கால் மண்டபம் தூண் கி1வ5 |
௪-4 - பைரவ முனிவர். பக்கத்தில் பொக்கணப் பையுடன் சூலம். மறுபக்கம் கமண்டலம்.
![]() |
| ௪-4பைரவ முனிவர். பேரரச அமர்வு பொக்கணப் பை. சூலம் கமண்டலம். இராஜகோபுரம் வட மேற்கு உபபீடச் சுவர் |
௫. மற்றவை
௫-1 - குருவும் சீடனும்.
![]() |
| ௫-1-குருவும் சீடனும். திருமண மண்டபம் தூண் தெ3கி3 |

























Comments
Post a Comment