எண் திசைக் காவலர்கள்
திசை - பெயர் - ஊர்தி - ஆயுதம், சின்னம் - சிறப்பு அடையாளம்
01. கிழக்கு -இந்திரன் - யானை ஐராவதம் - வைர ஆயுதம் (இருதலைச் சூலம்)
02. தென்கிழக்கு - அனலன் - ஆட்டுக்கிடா - சுடர் முடி
03. தெற்கு - எமன் - எருமை
04. தென்மேற்கு - நிருத்தி - மனிதன்
05. மேற்கு - வருணன் - மகரம்
06. வடமேற்கு - வாயு - மான் - கொடி
07. வடக்கு - குபேரன் - குதிரை
08. வடகிழக்கு - ஈசானன் - காளை
சிற்பங்கள்
சிற்பங்களில் எண் திசைக் காவலர்கள் தத்தம் வாகனங்களில் அமர்ந்தவாறு காட்டப்பட்டுள்ளனர். இராஜகோபுரப் பெருவாயிலின் நடுப் பகுதியின் விதானத்தில் உள்ள சதுர சிற்பத்தில் எண்மரும் தங்களுக்கு உரிய திசைகளில் காட்டப்பட்டுள்ளனர். தூண் சிற்பங்களில் அவர்களுக்குரிய திசைகளை அளிக்க இயலவில்லை. ஆயினும் வரிசை தக்க வைக்கப்பட்டுள்ளது. திருமண மண்டபத் தூண் தெ5கி2 இல் இந்திரனில் தொடங்கி கிழக்கு (3), வடக்கு (3), மேற்கு (2) முகப்புகளில் கீழிருந்து மேலாக வரிசையாக அமைந்துள்ளனர். 36 கால் மண்டபத் தூண் வ3கி3 (நடு, மேல் சதுரங்கள்), 16 கால் மண்டபத் தூண் மே1வ1 (கீழ், நடு சதுரங்கள்) ஆகியவற்றிலும் எட்டு சதுரங்களில் உள்ளனர். 36 கால் மண்டபத் தூண் வ6கி5,6 (இரு தூண்களின் நடுச் சதுரங்கள்) இல் மனைவியருடன் சிவன் உமை திருமணத்திற்கு செல்கின்றனர். இந்தத் தூண்களில் கீழ் வரிசையில் இந்திரனில் தொடங்கி வலமாகச் செல்லும் வரிசையில் எண்மரும் அமைக்கப்பட்டுள்ளனர்.
01-08 – 16 கால் மண்டபத் தூணில் உள்ள எண் திசை காவலர்கள் சிற்பங்கள்.
![]() |
| இந்திரன் |
![]() |
| அனலன் |
![]() |
| எமன் |
![]() |
| நிருத்தி |
![]() |
| வருணன் |
![]() |
| வாயு |
![]() |
| குபேரன் |
![]() |
| ஈசானன் |
09-12 - இராஜகோபுர விதானச் சிற்பத்தில் எண் திசைக் காவலர்கள்.
09 - கிழக்கில் நடுவில் ஐராவதம் மீது இந்திரன், அவருக்கு முன்னால் தேரில் கருட அமர்வில் இரு கைகளிலும் தாமரை மலர் ஏந்தி சூரியன், அவர்களுக்குப் பின்னால் ஒருவர் மத்தளம் வாசிக்க ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நடனம் ஆடுகின்றனர். முன்னால் கின்னரர்கள் இருவர். மூலையில் விடை மீது பின் கைகளீல் மழு மானுடன் ஈசானன்.
![]() |
| 9-இந்திரன் சூரியன் ஈசானன் |
10 - தெற்கில் மூலையில் ஆட்டின் மீது சுடர் முடியுடன் அனலன். நடுவில் எருமை மீது சூலத்துடன் அமர்ந்துள்ள எமன். அவர் முன்னால் மூவர், பின்னால் நால்வராக ஏழு முனிவர்கள்.
![]() |
| அனலன், எமன் |
11 - மேற்கில் மூலையில் கருட அமர்வில் உள்ள மனிதன் மீது நிருத்தி. நடுவில் மகரம் மீது கையில் பாசம் ஏந்தி வருணன். அவர் முன்னால் மூன்று சக்கரத் தேரில் கருட அமர்வில் சந்திரன், அவர்கள் பின்னால் ஒரு கின்னரனும் ஒரு கின்னரியும். முன்னால் ஒரு ஆண் மத்தளம் இசைக்க ஒரு பெண் நடனம் ஆடுகிறாள்.
![]() |
| நிருத்தி, வருணன் |
12 - மூலையில் மான் மீது கொடியுடன் வாயு. வடக்கில் நடுவில் குதிரை மீது கையில் கதையுடன் குபேரன். பின்னால் ஒரு ஆணும் பெண்ணும் நடனம் ஆட ஒருவர் மத்தளம் இசைக்கிறார். முன்னால் இரு பூத கணங்களும் ஒரு பெண்ணும் நடனம் ஆடுகின்றனர்.
![]() |
| வாயு, குபேரன் |












Comments
Post a Comment