விதானச் சிற்பங்கள்

விதானச் சிற்பங்கள் மூன்று வகை.

௧. விதானச் சதுரச் சிற்பம்

மண்டபத்தின் முழு அகலத்தையும் நிரப்பி இருக்கும் சதுர வடிவச் சிற்பங்கள். இவை நடுவில் ஒரு தாமரை மலரையும் அதைச் சுற்றி வரிசையாக சதுர அடைப்புகளையும் கொண்டுள்ளவை. சதுர அடைப்புகளுக்குள் கோலாட்ட பெண்களின் நிரை, ஒருவர் தோள் மேல் ஒருவர் அமர்ந்த மனிதச் சங்கிலி, சங்கிலி அலங்காரம், கொடி அலங்காரம் போன்ற சிற்ப வரிசைகள் அமைந்துள்ளன. இவை மதில் பிள்ளையார் முக மண்டபம், இராஜகோபுரம், திருமண மண்டபம், 36 கால் மண்டபம், காசி விசுவநாதர் சன்னதி, கற்பக விநாயகர் கோயில் முகமண்டபம் ஆகியவற்றின் விதானங்களில் காணப்படுகிறது. இவை அந்தந்த பகுதிகளில் விவரிக்கப்பட்டுள்ளன.

சிற்பம்

௧ - விதானச் சதுரச் சிற்பம்

௧-விதானச் சதுரச் சிற்பம்.
இராஜகோபுர பெருவாயில்


௨. விதானத் தாமரை

சிறு மண்டபங்களில் விதானத்தின் நடுவில் தாமரை மட்டும் உள்ளது. 

௨-விதானத் தாமரை


௩. உதிரி விதானச் சிற்பங்கள்

சில மண்டபங்களில் இங்குமங்கும் சில விதானச் சிற்பங்கள் காணப் படுகின்றன. இவை விதானங்களுக்கே உரியவை.

௩-1 - நிலவை விழுங்க வரும் பாம்பு.

௩-1-நிலாவை விழுங்க வரும் பாம்பு

௩-2 - இரட்டை மீன்.

௩-2-இரட்டை மீன்.
தேவரடியார் மண்டபம்

௩-3 - மீன்.

௩-3-மீன்.
தேவரடியார் மண்டபம்


Comments