மக்கள் - ௨. பெண்கள்

பெண்களின் ஆடைகள் கொண்டைகள் அணிகலன்கள் ஆகியவை காணத் தக்கன.

௨-1 - விளக்கு ஏந்தி வரும் பெண். நீண்ட சடை.

௨-1-விளக்குப் பெண். நீண்ட சடை.
வெளி 4கால் மண்டபம்

௨-2 - தயிர் கடையும் ஆய்ச்சி. தமிழம் கொண்டை.

௨-2- தயிர் கடையும் ஆய்ச்சி.
வெளி 4கால் மண்டபம்

௨-3 - வலது சுட்டு விரல் மேல்நோக்கி நீட்டி நின்றிருக்கும் பெண்.

௨-3-வல சுட்டுவிரலை மேலே நீட்டிய பெண்.
16கால் மண்டபம் தூண் கி1வ7

௨-4 - வலது தோளில் இருந்து தொங்கும் உத்தரீயத்தை பிடித்துக் கொண்டு நின்றிருக்கும் பெண்.

௨-4-உத்தரீயப் பெண்.
16கால் மண்டபம் தூண் கி1வ8

௨-5 - இடது தோளில் முடிச்சிட்டு முழங்காலின் கீழ் வலது பக்கமாகச் செல்லும் உத்தரீயத்தைப் பிடித்த வலது கை. இடது கை இடுப்பில். பாவாடை போன்ற கீழாடை. குந்தளக் கொண்டை, குண்டலங்கள், தலை வகிட்டில் இருந்து தொங்கும் தொய்யகம் முதலியன காண்க.

௨-5-உத்தரீயப் பெண்2.
16கால் மண்டபம் தூண் கி1வ8

௨-6 - இடது தோளில் இருந்து தொங்கும் உத்தரீயத்தை பிடித்துக் கொண்டு நின்றிருக்கும் பெண். அழகிய மார்க் கச்சை.

௨-6-உத்தரீயப் பெண்3.
16கால் மண்டபம் தூண் கி1வ8

௨-7 - வலக்கையை இடுப்பில் வைத்து இடது கையை தூக்கி இடது பக்கமாகத் திரும்பி நின்று இருக்கும் பெண்.

௨-7-வலக்கை இடுப்பில் வைத்து இடக்கையை உயர்த்திய பெண்.
பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ1கி3

௨-8 - வலது கையில் ஒரு சிறு குடத்துடன் இடது கையைத் தூக்கி நின்று இருக்கும் பெண்.

௨-8-வலது கையில் எதையோ ஏந்தி இடக் கையை உயர்த்தியுள்ள பெண்-பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ2கி1

௨-9 - மரத்தடியில் நின்று இருக்கும் பெண்.

௨-9-மரத்தடியில் நிற்கும் பெண்.
இராஜகோபுர உபபீடத் தூண் பாதம் தெகி

௨-10 - வலது கையில் மலர் ஏந்தி இடது கையில் உத்தரீயத்தைப் பிடித்தபடி நின்று இருக்கும் பெண்.

௨-10-பெண் வலக்கையில் மலர். இடக்கை இடுப்பில். குந்தளம்.
இராஜகோபுர உபபீடத் தூண் பாதம் வகி

௨-11 - வலது கையில் மலர் ஏந்தி நின்று இருக்கும் பெண். கொண்டைக்குப் பதிலாக இரு பக்கமும் தொங்கும் இரட்டை சடை. இரு பக்கமும் தொங்கும் அழகிய உத்தரீயம்.

௨-11-வலக்கை மலருடன் பெண்.
இராஜகோபுர உபபீடச் சுவர் வமே



Comments