ஒன்பான் கோள்கள்
௧. சூரியன்
சூரியன் இந்து மதத்தின் ஆறு துணை மதங்களுக்குள் ஒன்றான சௌரத்தின் மூலக் கடவுள். தனிப்பெரும் கோயில்கள் கொண்டு இருந்தவர். பிற்காலத்தில் சிறப்பு இழந்து துணைத் தெய்வமானார். ஒன்பான் கோள்களில் முதன்மையானவர். அவர்களுள் நடுநாயகமாக கிழக்கு நோக்கி அமைபவர். கோயில் திருச்சுற்றில் பரிவார தெய்வங்களுள் ஒருவராக தென்கிழக்குப் பகுதியில் மேற்கு நோக்கி இருப்பவர்.
சிற்ப அமைதி
இரு கைகளில் ஏந்தியுள்ள தாமரை மலர்களும் தலையைச் சுற்றியுள்ள ஒளி வட்டமும் சூரியனை அடையாளம் காட்டுகின்றன.
வழிபாட்டுச் சிற்பங்கள்
இங்கு நடு திருச்சுற்றில் 16 கால் மண்டபத்தில் கிழக்கு வரிசைத் தூண்கள் 5, 6 க்கு இடையே மேற்குப் பார்த்து ஒரு திருவாசிக் கோட்டத்தில் சூரியன் நின்ற நிலையில் உள்ளார். மேலும் ஒன்பான் கோள் மண்டபத்தில் ஒன்பான் கோள்களில் ஒருவராக நடுநாயகமாக உள்ளார்.
மற்ற சிற்பங்கள்
௧-1 - நேர் நின்ற நிலை சூரியன்
![]() |
| ௧-1-சூரியன். வெளி நான்கு கால் மண்டபம் |
௧-1 - மேகத்தின் மேல் கருட அமர்வில் சூரியன்.
![]() |
| ௧-2-சூரியன் 16கால் மண்டபம் தூண் மே1வ7 |
௧-1 - மேகத்தின் மேல் கைகளில் தாமரை இல்லாமல் வலது கையில் மாலை ஏந்தி சூரியன்.
![]() |
| ௧-3-சூரியன். திருமண மண்டபம் தூண் தெ6கி2 |
௧-4 - விதானச் சிற்பத்தில் சூரியன். இரு சக்கர தேர் மீது கருட அமர்வில்.
(படம்: எண் திசைக் காவலர்கள் பகுதியில் காண்க)
௨. சந்திரன்
சிற்ப அமைதி
சந்திரனும் சூரியனைப் போன்ற சிற்ப அமைதி உடையவரே - இரு கைகளில் மலர் ஏந்தி தலைக்குப் பின்னால் ஒளிவட்டத்துடன் நேர் நின்ற நிலையிலோ கருட அமர்விலோ இருப்பது. வேறுபாடு சூரியன் கையில் தாமரை, சந்திரன் கையில் அல்லி.
சிற்பங்கள்
௨-1 - கருட அமர்வில் சந்திரன்
![]() |
| ௨-1-சந்திரன் இருகை அல்லி. 16கால் மண்டபம் மே1வ7 |
௨-2 - கருட அமர்வில் சந்திரன். சூரியனில் இருந்து தெளிவாக வேறுபடுத்த தலைக்குப் பின்னால் ஒளி வட்டத்திற்கு பதிலாக பிறை நிலா.
![]() |
| ௨-2-சந்திரன் பிறை நிலா வட்டம் பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ1கி2 |
௨-3 - விதானச் சிற்பத்தில் சந்திரன். மூன்று சக்கர தேர் மீது கருட அமர்வில்.
(படம்: எண் திசைக் காவலர்கள் பகுதியில் காண்க)





Comments
Post a Comment