புருஷாமிருகம்
சிற்ப அமைதி
மனிதன் பாதி, விலங்கு பாதி இரண்டும் சேர்ந்த கலவையாய் உருவான படிமங்களுள் ஒன்று புருஷாமிருகம் - மேல்பாதி மனிதன், கீழ் பாதி புலி. ஒரு கையில் உள்ள மணியை ஒலித்து மறு கையில் உள்ள தீபத்தைக் காட்டி சிவலிங்கத்தை வழிபடும் நிலையில் மட்டுமே சிற்பங்களில் காணப்படும்.
தொன்மம் - புருஷாமிருகம்-வீமன் கதை
பாண்டவர்கள் குருசேத்திரப் போரில் வென்ற பிறகு இராஜசூய யாகம் செய்தார் தர்மர். அந்த யாகத்திற்கு புருஷாமிருகத்தின் வருகை தேவைப்பட்டது. அழைத்துவரும் பணியை வீமனிடம் ஒப்படைத்தார் தர்மர். புருஷாமிருகத்தின் ஆற்றலை அறிந்த வீமன், கண்ணனிடம் ஆலோசனை கேட்டான். அவர் 12 அக்க மணிகளை அளித்தார். தன்னை யாகத்திற்கு அழைத்த வீமனிடம் தன்னை ஓட்டப் பந்தயத்தில் வெல்லவேண்டும் என்றும், தோற்றவர் வென்றவருக்கு அடிமை என்றும் நிபந்தனை போட்டது புருஷாமிருகம். சலுகையாக வீமன் 4 காத தூரம் ஓடிய பிறகே அது ஓட ஆரம்பித்தது. ஆனால், சிறிது நேரத்தில் இடைவெளி குறைந்து வீமனை நெருங்கிவிட்டது. கண்ணனின் திட்டப்படி வீமன் ஒரு அக்க மணியைக் கீழே போட அது சிவலிங்கமாக மாறியது. பெரும் சிவபக்தனான புருஷாமிருகம் ஓடுவதை நிறுத்திவிட்டு சிவலிங்கத்திற்குப் பூஜை செய்தது. மீண்டும் ஓடத் துவங்கி வீமனை நெருங்கியது. வீமன் மீண்டும் ஒரு அக்க மணியைக் கீழே போட்டான். இப்படி 12 அக்க மணிகளை தரையில் வீசி புருஷாமிருகத்தின் ஓட்டத்தைத் தடை செய்த வீமன் இலக்கை நெருங்கி விட்டான். ஒரு கால் இலக்கு கோட்டைத் தாண்டிய நிலையில், புருஷாமிருகம் அவனைப் பிடித்துவிட்டது. ஒரு கால் இலக்கைத் தாண்டி விட்டதால் தான் வென்றதாக வீமனும், முழுமையாக இலக்கைத் தாண்டாததால் தானே வென்றதாக புருஷாமிருகமும் வாதிட்டனர். வழக்கு தர்மரிடம் சென்றது. அவர் வீமனின் ஒரு கால் இலக்கைத் தாண்டாததால் அவனது பாதி உடல் புருஷாமிருகத்திற்கு அடிமை என்று தீர்ப்பளித்தார். பாரபட்சமற்ற அவரது தீர்ப்பால் மகிழ்ச்சி அடைந்த புருஷாமிருகம் வீமனை விடுவித்து இராஜசூய யாகத்திற்கும் வர சம்மதித்தது.
சிற்பங்கள்
01 - புருஷாமிருகம். இடது கையில் மணி. வலது கையில் தீபம். சிவலிங்கம் இல்லை.
![]() |
| 01-புருஷாமிருகம். இராஜகோபுரம் வமே உப்பீடச் சுவர். |
02 - புருஷாமிருக்கம். வலது கையில் மணி. இடது கையில் தீபம். சிவலிங்கம். புருருஷாமிருகம் தாடி இல்லாமல் உள்ளது.
![]() |
| 02-புருஷாமிருகம். 36கால் மண்டபம் தூண் வ6கி3 |
03 - புருஷாமிருகம் - வீமன் கதை அ - புருஷாமிருகம் சிவலிங்கத்தை வழிபடுதல்.
![]() |
| 03-புருஷாமிருகம்-பெரியநாயகி பெருமண்டபம் தெகி தூண் |
04 - புருஷாமிருகம் - வீமன் கதை ஆ - வீமன் அக்க மணிகள் உள்ள பையைத் தூக்கிக் கொண்டு ஓடுதல்.
![]() |
| 04-ஓடும் வீமன். பெரியநாயகி பெருமண்டபம் தெகி தூண் |




Comments
Post a Comment