மக்கள் - ௧௮. கோமாளி
சிற்ப அமைதி
கோமாளிச் சிற்பங்கள் சிறப்பானவை. பல மண்டபங்களில் கீழ்ச் சதுரங்கள் அவற்றிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. குட்டையான பருத்த உருவம். பெருவயிறு. தொடைகள் ஒட்டியிருக்க கீழ்க் கால்கள் அகன்று பாதங்கள் உள் பக்கம் திரும்பி ஒன்றை ஒன்று பார்த்தவாறு இருப்பது கோமாளியின் சிறப்பு அடையாளங்களுள் ஒன்று. புற்களை சேர்த்துக் கட்டிய முழங்காலுக்கு மேல் வரையான ஆடை. சிலர் கோவணம் அணிந்துள்ளனர்.. புற்களால் ஆன தொப்பி அல்லது மேற்பக்கம் சுருண்ட கோமாளித் தொப்பி. மார்பில் வீரச் சங்கிலி. இளித்த வாய்.
௧௮-1 - கோமாளி. வலது கையில் கைக்குட்டை. இரு கைகளும் உடல் பக்கத்தில் தொங்குகின்றன.
![]() |
| ௧௮-1-கோமாளி. 16கால் மண்டபம் தூண் மே1வ3 |
௧௮-2 - கோமாளி. இரு கைகளையும் இடுப்பில் வைத்து விரல்கள் வெளி நீட்டிய நிலை. தலை இடது பக்கம் சாய்ந்துள்ளது.
![]() |
| ௧௮-2-கோமாளி. பெரியநாயகி பெருமண்டபம் தெகி தூண் |
௧௮-3 - மேற்கண்ட நிலை. தலை வலது பக்கம் சாய்ந்துள்ளது. மேலே சுருண்ட கோமாளித் தொப்பி.
![]() |
| ௧௮-3-கோமாளி. பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ4கி3 |
௧௮-4, 5 - அதே போன்ற நிலை. புல் தொப்பி. கைகளில் கைக்குட்டைகள்.
![]() |
| ௧௮-4-கோமாளி. 6கால் மண்டபம் தூண் மே1வ8 |
![]() |
| ௧௮-5-கோமாளி. 36கால் மண்டபம் தூண் வ2கி5 |
௧௮-6, 7 - கழுத்தின் பின்னால் உள்ள ஒரு கோலின் மீது கைகளைத் தொங்க விட்ட நிலை.
![]() |
| ௧௮-6-கோமாளி. 16கால் மண்டபம் தூண் மே1வ8 |
![]() |
| ௧௮-7-கோமாளி கோலில் கைகளை மாட்டி. 36கால் மண்டபம் தூண் வ5கி2 |
௧௮-8 - இடுப்பின் முன்னால் இரு கைகளாலும் ஒரு கோலைப் பிடித்த நிலை.
![]() |
| ௧௮-8-கோமாளி. தேர் மைய மண்டபம் தூண் கி1தெ1 |
௧௮-9 - இரு கைகளையும் உடலின் முன்பு குறுக்காக மறுபக்க இடுப்பில் வைத்த நிலை.
![]() |
| ௧௮-9-கோமாளி. 16கால் மண்டபம் தூண் மே1வ8 |
௧௮-10 - இரு கைகளையும் மார்பின் முன்னால் வைத்து அமர்ந்த நிலை.
![]() |
| ௧௮-10-கோமாளி. 16கால் மண்டபம் தூண் மே1வ8 |
௧௮-11, 12 - இரு பிற்கால கோமாளிச் சிற்பங்கள்.
![]() |
| ௧௮-11-கோமாளி. தேவரடியார் மண்டபம் |
![]() |
| ௧௮-12-கோமாளி2. தேவரடியார் மண்டபம் |












Comments
Post a Comment