கூட்டுச் சிற்பங்கள்

ஒன்றுக்கு மேற்பட்ட உருவங்கள் சேர்ந்து உருவாக்கும் வடிவம் அல்லது அமைப்பு கூட்டுச் சிற்பம் எனப்படும். பெரியநாயகி பொன்மலை நாதர் கோயில்களில் குறிப்பிடத்தக்க சில கூட்டுச் சிற்பங்கள் உள்ளன.

01 - நவநாரி குஞ்சரம் - நவ - ஒன்பது; நாரி - பெண்; குஞ்சரம் - யானை. ஒன்பது பெண்கள் சேர்ந்து அமைக்கும் யானை வடிவம். அதன் மீது அமர்ந்து ஒரு பெண் வில்லில் அம்பு பூட்டி குறி பார்க்கிறாள்.

01-நவநாரி குஞ்சரம்.
பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ4கி3

02 - நாற்பெண் பல்லக்கு - இரு பெண்களின் இணைந்த கைகள் பல்லக்கின் கூரையாகவும் அவர்களின் பிணைந்த கால்களும் உடலும் பல்லக்கின் இருக்கையாகவும் அவர்களின் மற்ற இரு கைகள் நீண்டு பல்லக்கின் தூக்கு கட்டைகளாகவும் அமைந்துள்ளன. வேறு இரு பெண்கள் இந்தப் பல்லக்கைச் சுமந்து செல்கின்றனர். பல்லக்கில் ஒருவர் அம்பு பொருத்தி நின்றுள்ளார்.

02-நாற்பெண் பல்லக்கு.
திருமண மண்டபம் உபபீடம்

03 - நாற்பெண் பல்லக்கு முழு சிற்பம் - பல்லக்கின் முன்னால் ஒரு பெண் கோல் ஏந்திச் செல்ல அவள் முன் ஒரு பெண் கையை உயர்த்தி வாழ்த்திச் செல்கிறாள். அவர்களுக்கு முன்னால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் விளையாட்டாக சிலம்பச் சண்டை செய்ய வேறு ஒரு பெண் அந்த ஆணைப் பின்னால் இருந்து அணைக்கிறாள். பல்லக்கின் பின்னால் ஒரு பெண் கையை உயர்த்தி வாழ்த்தி வருகிறாள். அவள் பின் இருவர் ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டு கால் பின்னி நடந்து வருகின்றனர்.

03-நாற்பெண் பல்லக்கு.
திருமண மண்டபம் உபபீடம்

04 - மற்றொரு நாற்பெண் பல்லக்கு.

04-நாற்பெண் பல்லக்கு.
உள்திருச்சுற்றின் முக மண்டபம் கூடுதல் உத்தரம்

05 - ஒருவர் தோள்மீது ஒருவர் அமர்ந்து உருவாக்கும் மனிதச் சங்கிலி. இது விதானச் சிற்பங்களில் காணப்படுகிறது.

05-மனிதச் சங்கிலி.
மதில் பிள்ளையார் விதானம்

06 - எண்மர் வட்டம். எட்டுப் பேர் ஒருவர் தோள்மீது ஒருவர் அமர்ந்து உருவாக்கும் வட்டம். உடல்கள் உருவாக்கிய வட்டம் நடுவில் இருக்க வெளிக் கைகள் இணைந்து ஒரு வெளி வட்டத்தையும் உள் கைகள் இணைந்து ஒரு உள் வட்டத்தையும் உருவாக்கியுள்ளன.

06-எண்மர் வட்டம்.
உள் கோபுரம் தெமே முகப்பு

07 - இருவர் வட்டம். ஒருவர் மற்றவரின் கால்களைப் பிடித்து உருவாக்கிய வட்டம். நடுவில் சதுரம்.

07-இருவர் வட்டம்.
உள் திருச்சுற்றின் முகமண்டபம் தூண் கி2வ4 போதிகை

08 - இடப குஞ்சரம். இடது பக்கம் காளை. வலது பக்கம் யானை. நடுவில் இரண்டுக்கும் பொதுவான தலை.

08-இடபகுஞ்சரம்.
பொன்மலைநாதர் பெருமண்டபம் தெமே தூண்

09 - இடப குஞ்சரம். இடது பக்கம் யானை, வலது பக்கம் காளை.

09-இடபகுஞ்சரம்.
வடக்கு மதில்

10 - மூவர் கூட்டுச் சிற்பம். மூன்று தலை நான்கு கைகள் நான்கு கால்கள்.

10-4கை 4கால் 3தலை கூத்து.
திருமண மண்டபம் தூண் தெ3கி2


Comments